முந்தய பக்கம்

ஜார்க்கண்டில் சட்டவிரோத சுரங்கம் இடிந்து விபத்து மூன்று பேர் பலி!

13 Sept 2026, 9:17 pm
ஜார்க்கண்டில் சட்டவிரோத  சுரங்கம் இடிந்து விபத்து மூன்று பேர் பலி!

ஜார்க்கண்டில் சட்டவிரோத சுரங்கம் இடிந்து விபத்து மூன்று பேர் பலி!

ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் மாவட்டம் ராம்கனாலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கேஷல்பூர் பகுதியில் நிலக்கரிச் சுரங் கம் ஒன்று உள்ளது. ஞாயிறன்று காலை 7 மணியளவில் நிலக்கரியை வெட்டி எடுப்பதற்காகப் பெண், ஆண் எனப் பலர் இந்தச் சட்டவிரோதச் சுரங்கப் பாதைக்குள் சென்றுள்ளனர். அப்போது, சுரங்கத்தின் மேல் பகுதி திடீரென இடிந்து விழுந்தது.

அங்கிருந்த சிலர் உடனடியாக வெளியே வந்த நிலையில், பலர் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர். இதனை அறிந்த கிராம மக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மண்வெட்டி, கடப்பாரை உள்ளிட்ட கருவிகளைக் கொண்டு இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதன்பின்னர், காவல்துறையினரும் தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத் திற்கு வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். சுரங்கம் இடிந்து விழுந்ததில் மேலும் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இதனால், இடிபாடுகளுக் குள் மேலும் யாராவது சிக்கியுள்ளனரா என்பதைத் கண்டறியஅதிகாரிகளும் மீட்புப் பணிகளைத் தீவிரமாகக் கண் காணித்து வருகின்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram