வட இந்தியாவில் தொழிலாளர் வர்க்கத்தின் போர்க்குணமிக்க எழுச்சி ஜார்க்கண்ட் பெப்கோ ஆலைத் தொழிலாளர்கள் மீது ஏவப்பட்ட ரவுடியிசம்: உழைப்புச் சுரண்டலைத் தட்டிக்கேட்டதற்காகத் தடியடி மற்றும் பணிநீக்கம்!
9 May 2026, 9:45 pm

வட இந்தியாவில் தொழிலாளர் வர்க்கத்தின் போர்க்குணமிக்க எழுச்சி ஜார்க்கண்ட் பெப்கோ ஆலைத் தொழிலாளர்கள் மீது ஏவப்பட்ட ரவுடியிசம்:

உழைப்புச் சுரண்டலைத் தட்டிக்கேட்டதற்காகத் தடியடி மற்றும் பணிநீக்கம்!

வேலைநிறுத்தம் 6

ஜாம்ஷெட்பூர், மே 9- வடஇந்தியத் தொழிலாளர் வர்க்கம் சந்தித்து வரும் எழுச்சி மற்றும் அடக்குமுறைகளின் வரிசையில், ஜார்க்கண்ட் மாநிலத்தின் தொழில்துறை மையமான ஆதித்யபூர் - கம்ஹாரியா பகுதியில் அரங்கேறியுள்ள ஒரு கொடூரமான தாக்குதல் உழைக்கும் வர்க்கத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

கார்ப்பரேட் நிர்வாகங்கள் தங்களின் லாபத்திற்காகத் தொழிலாளர் சட்டங்களை காலில் போட்டு மிதிப்பதோடு மட்டுமல்லாமல், அடியாட்களைக் கொண்டு தொழிலாளர்களை ஒடுக்கும் போக்கையும் கையில் எடுத்துள்ளன.

ஜார்க்கண்ட் மாநிலம் சராய்கேலா-கர்சவான் மாவட்டத்தில் உள்ள கம்ஹாரியா தொழில் பேட்டையில் இயங்கி வரும் ‘பாரத் இன்ஜினியரிங் அண்ட் பாடி பில்டிங்’ (BEBBCO) தனியார் நிறுவனத்தின் வாயிலில், கடந்த பிப்ரவரி 27 அன்று தொழிலாளர்கள் ஒரு பெரும் தர்ணா போராட்டத்தைத் தொடங்கினர்.

20 முதல் 25 ஆண்டுகள் வரை அதே நிறுவனத்தில் ‘விசுவாசமாக’ உழைத்த 56 தொழிலாளர்களை நிர்வாகம் எவ்வித முன்னறிவிப்புமின்றிப் பணிநீக்கம் செய்தது இப்போராட்டத்திற்குக் காரணமாக அமைந்தது.

சுரண்டலுக்கு எதிரான குரலும் நிர்வாகத்தின் அராஜகமும் பணிநீக்கம் செய்யப்பட்ட அந்தத் தொழிலாளர்கள் செய்த ஒரே ‘குற்றம்’, தங்களுக்குச் சட்டப்பூர்வமாக கிடைக்க வேண்டிய குறைந்தபட்ச ஊதியம், இ.எஸ்.ஐ, பி.எஃப் மற்றும் போனஸ் போன்ற அடிப்படை உரிமைகளைக் கேட்டதுதான்.

கடந்த பிப்ரவரி 25 அன்று இந்த உரிமைகளைத் தட்டிக்கேட்டதற்காக அவர்கள் பழிவாங்கப்பட்டனர்.

போராட்டம் நடைபெற்ற பிப்ரவரி 27 அன்று, நிர்வாகம் சுமார் 20-க்கும் மேற்பட்ட கூலிப்படை அடியாட்களை (Bouncers) ஏவி, போராடிய தொழிலாளர்கள் மீது கொடூரத் தாக்குதலை நடத்தியது.

இரும்புத் தண்டுகள் மற்றும் தடிகளால் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் ஐந்து தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர்.

ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஜாம்ஷெட்பூர் எம்.ஜி.எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தங்களின் உரிமைகளுக்காக அமைதியான முறையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மீது இத்தகைய வன்முறையைப் பிரயோகித்தது அப்பகுதியில் பெரும் பதற்றத்தை உருவாக்கியது.

எழுச்சியுற்ற ஆதரவும் போராட்டங்களும் இந்தக் கொடூரமான தாக்குதலுக்கு எதிராக ஜார்க்கண்ட் லோக்தந்திரிக் கிராந்திகாரி மோர்ச்சா (JLKM) என்ற புதிய அரசியல் இயக்கம் களமிறங்கியது.

அந்த இயக்கத்தின் மத்திய தலைவர் பிரேம் மார்டி நேரில் சென்று காயமடைந்த தொழிலாளர்களுக்கு ஆதரவாகக் காவல் நிலையத்தில் புகார் அளித்ததுடன், மாவட்ட துணை ஆட்சியரிடம் மனுவும் அளித்தார்.

நிர்வாகத்தின் இந்த ரவுடியிசத்தைக் கண்டித்து ஆதித்யபூர் மற்றும் கம்ஹாரியா பகுதிகளில் தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு ‘மஷால் ஜுலூஸ்’ எனப்படும் தீப்பந்தப் பேரணிகளை நடத்தினர்.

ஆதித்யபூர் ‘பெல்ட்’: ஒப்பந்தத் தொழிலாளர் அவலம் ஜாம்ஷெட்பூரின் டாடா ஸ்டீல் போன்ற பெரிய நிறுவனங்களுக்குத் தேவையான உதிரிபாகங்கள் மற்றும் வாகன உடற்பகுதிகளைத் தயாரிக்கும் நூற்றுக்கணக்கான சிறு மற்றும் நடுத்தரத் தொழிற்சாலைகள் கம்ஹாரியா பகுதியில் உள்ளன.

டாடா போன்ற பெரிய ஆலைகளில் ஓரளவுக்குத் தொழிற்சங்க உரிமைகள் இருந்தாலும், இந்தப் பகுதியில் உள்ள பெப்கோ போன்ற ஆலைகளில் ஒப்பந்தத் தொழிலாளர் முறையே ஆதிக்கம் செலுத்துகிறது.

சுமார் 100 நிரந்தரப் பணியாளர்கள் மட்டுமே உள்ள பெப்கோ நிறுவனத்தில், 500 முதல் 1,000 பேர் வரை ஒப்பந்தத் தொழிலாளர்களாகச் சுரண்டப்படுகின்றனர்.

இவர்கள் எவ்வித தொழிற்சங்க பாதுகாப்பும் இன்றி, குறைந்த கூலிக்கு நீண்ட நேரம் உழைக்க நிர்ப்பந்திக்கப்படுகின்றனர்.

பிப்ரவரி 12 அன்று நாடு தழுவிய அளவில் நடைபெற்ற பொது வேலைநிறுத்தத்தின் தாக்கம் இந்தப் போராட்டங்களிலும் எதிரொலித்தது.

தொடரும் போராட்டம் இந்தத் தாக்குதலுக்குப் பிறகு நிர்வாகம் சில தற்காலிகச் சமரச முயற்சிகளில் ஈடுபட்டாலும், பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கான முழுமையான நீதி இன்னும் கிடைக்கவில்லை.

முறையான தொழிற்சங்கங்கள் இல்லாத இத்தகைய சிறு தொழிற்சாலைகளில், தொழிலாளர்கள் தன்னிச்சையாக ஒன்றிணைந்து இத்தகைய கிளர்ச்சிகளை முன்னெடுப்பது வடஇந்தியாவில் அதிகரித்து வரும் புதிய போக்கைக் காட்டுகிறது.

பெப்கோ ஆலைத் தொழிலாளர்கள் மீது ஏவப்பட்ட வன்முறை என்பது ஒரு தனிப்பட்ட தொழிற்சாலைப் பிரச்சனை அல்ல; இது ஒட்டுமொத்த உழைக்கும் வர்க்கத்தின் மீது கார்ப்பரேட் - ரவுடி கூட்டணி நடத்தும் தாக்குதலாகும்.

இத்தகைய அடக்குமுறைகளை மீறி தொழிலாளர்கள் காட்டும் உறுதி, அவர்களின் வர்க்கப் போராட்டக் குணத்தைப் பறைசாற்றுகிறது.

(லெப்ட் வியூஸ்)