அகர்சன் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர் வரவேற்பு விழா
8 Jul 2026, 10:46 pm
<p><strong>அகர்சன் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர் வரவேற்பு விழா</strong> </p><p>சென்னை, ஜூலை 8- சென்னை மாதவரம் ஜெஎச்ஏ அகர்சன் கல்லூரியில் 2026-27-ம் கல்வியாண்டிற்கான முதலாமாண்டு மாணவர் வரவேற்பு விழா திங்களன்று நடைபெற்றது. கல்லூரியின் முதல்வர் வி.கோபி வரவேற்புரை வழங்கினார். விழாவின் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட கல்லூரியின் கல்வி ஆலோசகர் லலிதா பாலகிருஷ்ணன், மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார். இந்நிகழ்வில் கல்லூரியின் செயலாளர் ஸ்ரீ ஹரிஷ் குமார் சாங்கி, துணை செயலாளர் ஸ்ரீ ஹரிஷ் குமார் லோகியா, பொருளாளர் ஸ்ரீ பால் கோவிந் குப்தா, துணை முதல்வர் டி.எஸ். உமா மகேஷ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றுச் சிறப்பித்தனர். வணிகவியல் கணினி பயன்பாட்டுத் துறைத் தலைவர் டி.தனலஷ்மி விருந்தினரை அறிமுகம் செய்ய, வணிகவியல் கார்ப்பரேட் செயலர் துறை பி.யோகேஷ்வரி நன்றி கூறினார்.</p>
