தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணமும் வரலாறு கற்றுத் தந்த பாடமும்

9 Apr 2026, 5:30 am
ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணமும் வரலாறு கற்றுத் தந்த பாடமும்

ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணமும் வரலாறு கற்றுத் தந்த பாடமும்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காந்தி சிலை அருகில் மொபைல் கடை நடத்தி வந்த தந்தை ஜெயராஜ் மற்றும் மகன் பென்னிக்ஸ் ஆகியோர், 2020 ஜூன் 19 அன்று கொரோனா ஊரடங்கு விதிகளை மீறியதாகப் பொய்க் குற்றச்சாட்டின்கீழ் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். காவல் நிலையத்தில் அவர்கள் மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்டு, சித்ரவதை செய்யப்பட்டனர். பின்னர் கோவில்பட்டி கிளைச் சிறையில் அனுமதிக்கப்பட்டு, அங்கிருந்து கோவில்பட்டி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இருவரும் ஜூன் 22, 23 தேதிகளில் அடுத்தடுத்து மரணமடைந்தனர்.

இந்தச் செய்தி அறிந்து 23.06.2020 அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அப்போதைய தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் கே.எஸ். அர்ச்சுனன் மற்றும் நிர்வாகிகள் சாத்தான்குளம் சென்றபோது, சித்ரவதை செய்து கொல்லப்பட்ட ஜெயராஜின் மனைவி செல்வராணியையும், மகள் பெர்சியாவையும் ஆற்றுப்படுத்த முடியாத துயரம் நிலவியது.

ஜெயராஜ், பென்னிக்ஸ் மீது பொய் வழக்குப் பதிவு செய்யப்பட்டது முதல், அவர்கள் நல்ல உடல்நிலையில் இருப்பதாகப் போலி மருத்துவச் சான்றிதழ் பெற்றது வரை பல்வேறு சதித் திட்டங்கள் அரங்கேறின. குற்றவியல் நீதித்துறை நடுவர் சரவணன் என்பவர், சாத்தான்குளம் இருந்த அறைகளை நேரில் முறையாக ஆய்வு செய்யாமல், மருத்துவச் சான்றிதழ் மட்டுமே ஆதாரமாகக் கொண்டு சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

உயர்நீதிமன்ற மதுரை கிளை இந்த வழக்கில் பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்தது. சாத்தான்குளம் காவல் நிலையத்தை ஆய்வு செய்யச் சென்ற நீதித்துறை நடுவர் பாரதிதாசனைப் போலீசார் நேரடியாகவே மிரட்டினர். இதையடுத்து, உயர்நீதிமன்றம் அந்த காவல் நிலையத்தை வருவாய்த் துறையின் ஆளுகைக்குள் கொண்டு வர உத்தரவிட்டது.

அன்றைய முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி அவர்கள், காவல்துறையினரைக் காப்பாற்றச் செயல்பட்டு, “மூச்சுத் திணறல் காரணமாகவே இருவரும் இறந்தனர்” என ஒரு பொய்யான தகவலை வெளியிட்டார். இவர்களின் இத்தகைய பொறுப்பற்ற போக்கினால் எழுந்த மக்கள் கொந்தளிப்பே, வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றும் நிலையை உருவாக்கியது.

ஜெயராஜ், பென்னிக்ஸ் வழக்கில் நேர்மையான எண்ணத்துடன் தீர்ப்பு வழங்கியுள்ள மதுரை முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதி ஜி. முத்துக்கிருஷ்ணன், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் பக்கம் நின்று வரலாற்றில் இடம் பெற்றுள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.