தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஹோட்டலில் தூங்கிக் கொண்டிருந்த உரிமையாளரிடம் நகை திருட்டு

20 Feb 2026, 2:39 pm
ஹோட்டலில் தூங்கிக் கொண்டிருந்த உரிமையாளரிடம் நகை திருட்டு
<p><strong>ஹோட்டலில் தூங்கிக் கொண்டிருந்த உரிமையாளரிடம் நகை திருட்டு </strong></p> <p>&nbsp;ஒட்டன்சத்திரம், பிப்.20- &nbsp;வேடசந்தூர் அருகே தூங்கிக் கொண்டிருந்த ஓட்டல் உரிமையாளரின் கழுத்தில் அணிந்து இருந்த மூன்று பவுன் தங்க செயின் மற்றும் செல்போன்களை எடுத்து சென்ற 2 மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர் &zwnj; திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள விட்டல்நாயக்கன்பட்டி ஓட்டல் நடத்தி வருபவர் தொட்டியப்பன் (வயது60). இவரது ஓட்டல் மற்றும் வீடு இரண்டும் ஒன்றாக உள்ளது. &nbsp;வியாழக்கிழமையன்று ஓட்டலை மூடிவிட்டு உள்ளே தொட்டியப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் தூங்கிக் கொண்டு இருந்தனர். கடைக்கு கதவுகள் இல்லாததால் கதவுக்கு பதிலாக சாக்கு பையால் ஆன படுதாவை எடுத்துவிட்டு உள்ளே &nbsp;புகுந்த மர்ம ஆசாமி தொட்டியப்பனின் கழுத்தில் அணிந்து இருந்த மூன்று பவுன் தங்கச் செயினை நைசாக எடுத்துக்கொண்டு, அருகில் இருந்த இரு மொபைல் போன்களையும் எடுத்துக்கொண்டு ஓடியுள்ளார். &nbsp;இதன் மொத்த மதிப்பு ரூ.4 லட்சம் ஆகும். தூக்கத்தில் இருந்து எழுந்த தொட்டியப்பன் கழுத்தில் தங்கச் செயின் இல்லாதவை கண்டு அதிர்ச்சி அடைந் தார். இதனையடுத்து தொட்டியப்பன் சத்தம் போட்டார். அப்போது மர்ம ஆசாமி நான்கு வழிச்சாலையில் தயார் நிலையில் &nbsp;மற்றொரு மர்ம ஆசாமி தயார் நிலையில் வைத்திருந்த மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றார். இதுகுறித்து ஹோட்டல் உரிமையாளர் தொட்டியப் பன் வேடசந்தூர் காவல்நிலையத்தில &nbsp;புகார் அளித்தார். காவல் ஆய்வாளர் கணேசமூர்த்தி வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் தனியார் கடைகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.