தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திருச்சி விரைவு செய்திகள்

13 Nov 2025, 3:30 pm
திருச்சி விரைவு செய்திகள்

நாட்டுப்படகுகள், விசைப்படகுகளை பதிவு செய்ய அரசு அறிவுறுத்தல்

இராமநாதபுரம், நவ.13- இராமநாதபுரம் மாவட்டத்தில் 33 விசைப்படகுகள், 1,456 நாட்டுப்படகுகள் மற்றும் 497 இயந்திரம் பொருத்தப்  படாத நாட்டுப்படகுகள் பதிவு செய்யாமல் இயக்கப்பட்டு  வருகின்றன என தெரியவந்துள்ளது. தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குமுறைச் சட்டம்,  1983-ன் படி பதிவு செய்யாமல் படகுகளை இயக்குவது  குற்றமாகும் என்பதால், இவ்வாறான பதிவு செய்யப் படாத நாட்டுப்படகுகள் மற்றும் விசைப்படகுகளை வரும்  நவம்பர் 30-க்குள் பதிவு செய்து கொள்ளுமாறு தமிழ்நாடு  மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து, பதிவுசெய்யப்படாத படகு உரி மையாளர்கள் உரிய ஆவணங்களுடன் தங்களது பகுதி மீன்வளத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை  தொடர்பு கொண்டு படகு பதிவு செய்யுமாறு மாவட்ட  ஆட்சித்தலைவர்  சிம்ரன்ஜீத் சிங் காலோன் செய்திக்குறிப்  பில் தெரிவித்துள்ளார்.

திருவில்லிபுத்தூரில் 2 ஆம் நாளாக ஆக்கிரமிப்பு அகற்றம்

திருவில்லிபுத்தூர், நவ.13- திருவில்லிபுத்தூர் நகராட்சி நிர்வாகத்தின் சார்பில், நகராட்சி எல்லைப் பகுதிகளான நகைக்கடை பஜார், மார்க்  கெட் பஜார் உள்ளிட்ட பல இடங்களில் கடைகளுக்கு முன்பாக ஏற்பட்டிருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி  புதன்கிழமை தொடங்கியது. இதன் தொடர்ச்சியாக, வியாழக்கிழமை இரண்டாம் நாளாக கான்வென்ட் பள்ளி பகுதி மற்றும் சின்ன கடை  பஜார் பகுதிகளில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப் பட்டன. மேலும், கடைகளின் மேல் பொருத்தப்பட்டிருந்த பிளக்ஸ் பேனர்கள் மற்றும் விளம்பர பலகைகள் ஆகிய வற்றையும் ஞாயிற்றுக்கிழமைக்குள் அகற்ற வேண்டும் என்று நகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது. ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் நகர அமைப்பு அலு வலர் வெங்கடேசன், சுகாதார அலுவலர் கந்தசாமி, சுகா தார ஆய்வாளர் சங்கரன், வட்டார சுகாதார மேற்பார்வை யாளர்கள், துப்புரவுப் பணியாளர்கள் மற்றும் தூய்மை  இந்தியா திட்ட பணியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்ற னர்.

கடைக்குள் புகுந்து திருடிய இருவர் மீது வழக்கு பதிவு

திருவில்லிபுத்தூர், நவ.13- திருவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு மெயின் பஜாரில் உள்ள கடைக்குள் அத்துமீறி நுழைந்து பொருட்  கள் திருடிய இருவருக்கு எதிராக போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அங்கு முருககனி என்பவர், கார்த்திக் என்பவருக்குச் சொந்தமான கடையை ரூ.7 லட்சம் கொடுத்து ஒப்பந்த அடிப்படையில் ஒத்திக்கு வாங்கி, “சோபியா” என்ற பெய ரில் செப்பல் மற்றும் பர்னிச்சர் கடை நடத்தி வந்தார். முருககனியிடம் கார்த்திக் குடும்ப செலவுக்காக சுமார்  ரூ.10 லட்சம் கடன் பெற்றிருந்ததாக கூறப்படுகிறது. கடனை திருப்பிச் செலுத்தாததால், சிவில் நீதிமன்றத்தில்  வழக்கு நிலுவையில் இருந்தது. இந்நிலையில், கார்த்திக் தனது நண்பர்கள் காதர் ஒலி, பஞ்சவர்ணம் ஆகியோருடன் புதன்கிழமை மாலை  அந்தக் கடைக்குள் புகுந்து, சிறியதும் பெரியதுமான 85  அலுமினிய கம்பிகளை திருடி காரில் ஏற்றி சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த முருககனியை குற்றவாளிகள் மிரட்டியுள்ளனர். பின்னர் அவர் தனது நண்பர்களின் உதவியுடன் கார்த்திக்  மற்றும் காதர் ஒலியை பிடித்து வத்திராயிருப்பு காவல் நிலையத்தில் ஒப்படைத்து புகார் அளித்தார். அவரது புகாரின் பேரில், போலீசார் இருவரையும் கைது செய்து வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதில் பஞ்சவர்ணம் எனும் நபர் தப்பியோடினார். சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

இருசக்கர வாகனமும் செல்போனும் திருட்டு

திருவில்லிபுத்தூர், நவ.13- வன்னியம்பட்டி காவல்நிலைய எல்லைக்குள் உள்ள  கொத்தங்குளம் பகுதியில் இருசக்கர வாகனம் மற்றும் செல்போன் திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த பொன்னுராஜா என்பவர், சுதர்சனம் மில் அருகே தன்னுடைய இருசக்கர வாக னத்தை சாலையோரத்தில் நிறுத்திவிட்டு காட்டிற்கு சென்றிருந்தார். அந்த நேரத்தில், இருசக்கர வாகனத்தில்  வந்த அடையாளம் தெரியாத இருவரில் ஒருவர் இறங்கி,  பொன்னுராஜாவின் வாகனத்தையும் அதில் இருந்த செல்  போனையும் திருடி சென்றதாக கூறப்படுகிறது. வாகனம் கடன் அடிப்படையில் வாங்கியிருந்ததால், முதலில் பைனான்ஸ் நிறுவனத்தினர் எடுத்திருக்கலாம் என நினைத்த அவர், பல இடங்களில் விசாரித்தும் வாக னத்தையும் செல்போனையும் கண்டுபிடிக்க முடியாமல் போனதால், வன்னியம்பட்டி காவல்நிலையத்தில் புகார்  அளித்தார். அவர் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு  பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கள்ளிமந்தயம் அருகே வீட்டின் பூட்டை  உடைத்து நகை, பணம் கொள்ளை

சின்னாளப்பட்டி, நவ.13– திண்டுக்கல் மாவட்டம் கள்ளிமந்தயம் அருகே உள்ள  பெருமாள்கோயில் வலசை பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது. அப்பகுதியைச் சேர்ந்த சண்முகம், புதன்கிழமை காலை வீட்டை பூட்டிவிட்டு 100 நாள் வேலைக்கு சென்றி ருந்தார். வேலை முடிந்து மதியம் 3 மணியளவில் வீடு திரும்பியபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. பீரோவில் வைக்கப்பட்டிருந்த 5 பவுன் நகை மற்றும்  ரூ.15,000 பணம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து சண்முகம் அளித்த புகாரின் பேரில் கள்ளி மந்தயம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, மர்மநபர் களைத் தேடி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.