ஜெஇஇ பிரதான தேர்வு: சென்னை மாணவர் முதலிடம்
18 Feb 2026, 3:04 pm
<p><strong>ஜெஇஇ பிரதான தேர்வு: சென்னை மாணவர் முதலிடம் </strong></p>
<p>சென்னை, பிப்.17- ஜெஇஇ மெயின் 2026 (அமர்வு 1) தேர்வு முடிவுகளில், சென்னையைச் சேர்ந்த ஆகாஷ் பயிற்சி நிலைய மாணவர் அஜய் 99.99 சதவீத மதிப்பெண்களுடன் மாநில அளவில் முதலிடம் பிடித்துச் சாதனை படைத்துள்ளார். குறிப்பாக, இவர் இயற்பியல் மற்றும் கணிதப் பாடங்களில் 100 சதவீத மதிப்பெண் பெற்று அசத்தியுள்ளார். இச்சாதனை குறித்து நிறுவனத்தின் தலைமை அதிகாரி தீரஜ் குமார் மிஸ்ரா கூறுகையில், “மாணவர்களின் கடின உழைப்பிற்கும் ஆகாஷ் கல்வி முறையின் வலிமைக்கும் இது ஒரு சான்றாகும்” எனப் பாராட்டியுள்ளார். முறையான பாடத்திட்டம் மற்றும் ஆசிரியர்களின் வழிகாட்டுதலே தனது வெற்றிக்குக் காரணம் என மாணவர் அஜய் தெரிவித்துள்ளார். இத்தேர்வின் மூலம் என்ஐடி மற்றும் ஐஐடிக்கான அட்வான்ஸ்டு தேர்வை எழுத மாணவர்கள் தகுதி பெறுவார்கள் எ</p>
