முந்தய பக்கம்

ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு தில்லி மாணவர் முதலிடம்

1 Jun 2026, 9:26 pm
ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு தில்லி மாணவர் முதலிடம்

ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு தில்லி மாணவர் முதலிடம்

ஜேஇஇ அட்வான்ஸ்டு என்பது நாட்டில் உள்ள புகழ்பெற்ற இந்திய தொழில்நுட்பக் கழகங்களில் (ஐஐடி) சேருவதற்காக நடத்தப்படும் மிக உயரிய, கடினமான நுழைவுத் தேர்வாகும்.

2026ஆம் ஆண்டு க்கான ஜேஇஇ அட்வான்ஸ்ட் தேர்வு மே 17 அன்று நடைபெற்றது. மொத்தம் 1,79,694 தேர்வர்கள் பங்கேற்றனர்.

இந்நிலையில், இந்த ஜேஇஇ அட்வா ன்ஸ்டு தேர்வு முடிவு ஞாயிறன்று இரவு ஐஐடி ரூர்க்கி (தேர்வை நடத்திய மண்ட லம்) வெளியிட்டது.

இதில் ஐஐடி தில்லி மண்டலத்தைச் சேர்ந்த சுபம் குமார் 360-க்கு 330 மதிப்பெண்கள் பெற்று பொது ரேங்க் பட்டியலில் முதலிடம் பிடித் துள்ளார்.

அதே ஐஐடி தில்லி மண்ட லத்தைச் சேர்ந்த ஆரோஹி தேஷ் பாண்டே 280 மதிப்பெண்களுடன் பொது ரேங்க் பட்டியலில் 77ஆவது இடத்தைப் பிடித்து மாணவிகள் பிரிவில் முதலிடம் பெற்றுள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram