தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணமும் வரலாறு கற்றுத் தந்த பாடமும்

9 Apr 2026, 5:30 am
ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணமும் வரலாறு கற்றுத் தந்த பாடமும்

ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணமும் வரலாறு கற்றுத் தந்த பாடமும்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காந்தி சிலை அருகில் மொபைல் கடை நடத்தி வந்த தந்தை ஜெயராஜ் மற்றும் மகன் பென்னிக்ஸ் ஆகியோர், 2020 ஜூன் 19 அன்று கொரோனா ஊரடங்கு விதிகளை மீறியதாகப் பொய்க் குற்றச்சாட்டின்கீழ் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். காவல் நிலையத்தில் அவர்கள் மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்டு, சித்ரவதை செய்யப்பட்டனர்.

பின்னர் கோவில்பட்டி கிளைச் சிறையில் அனுமதிக்கப்பட்டு, அங்கிருந்து கோவில்பட்டி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இருவரும் ஜூன் 22, 23 தேதிகளில் அடுத்தடுத்து மரணமடைந்தனர். இந்தச் செய்தி அறிந்து 23.06.2020 அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அப்போதைய தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் கே.எஸ். அர்ச்சுனன் மற்றும் நிர்வாகிகள் சாத்தான்குளம் சென்றபோது, சித்ரவதை செய்து கொல்லப்பட்ட ஜெயராஜின் மனைவி செல்வராணியையும், மகள் பெர்சியாவையும் ஆற்றுப்படுத்த முடியாத துயரம் நிலவியது.

மறைக்கப்பட்ட உண்மைகளும் வெளிவந்த சதிகளும்: ஜெயராஜ், பென்னிக்ஸ் மீது பொய் வழக்குப் பதிவு செய்யப்பட்டது முதல், அவர்கள் நல்ல உடல்நிலையில் இருப்பதாகப் போலி மருத்துவச் சான்றிதழ் பெற்றது வரை பல்வேறு சதித் திட்டங்கள் அரங்கேறின. குற்றவியல் நீதித்துறை நடுவர் சரவணன் என்பவர், சாத்தான்குளம் இருந்த அரண்களை நேரில் முறையாக ஆய்வு செய்யாமல், மருத்துவச் சான்றிதழ் மட்டுமே ஆதாரமாகக் கொண்டு சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

வழக்கமாக அருகிலுள்ள திருவைகுண்டம் சப் ஜெயிலிலோ அல்லது பேரூரணி மாவட்ட சிறையிலோ வைக்கப்படாமல், வெகுதூரம் தள்ளியுள்ள கோவில்பட்டி சிறையில் அனுமதித்தது போலீசாரின் திட்டமிட்ட சதியை உறுதிப்படுத்தியது. உயர்நீதிமன்ற மதுரை கிளை இந்த வழக்கில் பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்தது. சாத்தான்குளம் காவல் நிலையத்தை ஆய்வு செய்யச் சென்ற நீதித்துறை நடுவர் பாரதிதாசனைப் போலீசார் நேரடியாகவே மிரட்டினர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டப் போராட்டம்: இந்தக் காவல் நிலைய கொலை வழக்கைச் சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) மூலம் விசாரிக்க வேண்டும், குடும்பத்தினருக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்திக் கட்சியின் அன்றைய மாவட்டச் செயலாளர் கே.எஸ். அர்ச்சுனன், இடதுசாரி வழக்கறிஞர்கள் மூலம் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ரிட் மனு தாக்கல் செய்தார்.

ஆட்சியாளர்களின் பொறுப்பற்ற போக்கு: அன்றைய முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி அவர்கள், காவல்துறையினைக் கையாள் போலச் செயல்பட்டு, "மூச்சுத் திணறல் காரணமாகவே இருவரும் இறந்தனர்" என, காவல்துறைக் பொறுப்பான அமைச்சர் என்ற முறையில் ஒரு பொய்யான கண்டுபிடிப்பை வெளியிட்டார். இவர்களின் இத்தகைய பொறுப்பற்ற போக்கினால் எழுந்த மக்கள் கொந்தளிப்பே, வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றும் நிலையை உருவாக்கியது.

வரலாறு கற்றுத் தந்த பாடம்: சாத்தான்குளம் காவல் நிலையத்தில் இத்தகைய கொடூரம் நடப்பது இது முதல்முறை அல்ல. 17.06.2006 அன்று அருண்குமார் என்ற இளைஞர் இதே காவல் நிலையத்தில் சித்ரவதை செய்து கொல்லப்பட்டார். அந்த வழக்கிற்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிதான் போலீசாரைக் கண்டித்துப் போராட்டங்களை நடத்தியது.

இந்த வழக்கில் நேர்மையான எண்ணத்துடன் தீர்ப்பு வழங்கியுள்ள மதுரை முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதி ஜி. முத்துக்குமரன், பாதிக்கப்பட்ட குடும்பத்தின் பக்கம் நின்று வரலாற்றில் இடம் பெற்றுள்ளார். சட்டத்தின் ஆட்சி மீது நம்பிக்கை கொண்டுள்ள கடை நிலை மனுவும் முடியவில்லை. இத்தீர்ப்பிற்குப் பிறகாவது, காவல்துறையினரை வழக்குகளை விசாரிக்க உரிய சட்டப்பூர்வ அமைப்புகளை அரசு ஏற்படுத்த வேண்டும்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.