தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஜெயங்கொண்டம் அருகே டாஸ்மாக் கடையை மூடக் கோரி கிராம மக்கள் முற்றுகை

14 May 2026, 10:00 pm
ஜெயங்கொண்டம் அருகே டாஸ்மாக் கடையை மூடக் கோரி  கிராம மக்கள் முற்றுகை

ஜெயங்கொண்டம் அருகே டாஸ்மாக் கடையை மூடக் கோரி கிராம மக்கள் முற்றுகை

அரியலூர், மே 14- ஜெயங்கொண்டம் அருகே, டாஸ்மாக் கடையை மூடக்கோரி கிராம மக்கள் திரண்டு, அந்த கடையை முற்றுகையிட்டனர்.

மேலும் தமிழக முதல்வருக்கு கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே, வீரசோழபுரத்தில் பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்பு மற்றும் கோவில் அருகில், அரசு தழுதாழை மேடு ஊராட்சிக்குட்பட்ட வீராரெட்டி தெருவில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. மேற்கண்ட டாஸ்மாக் கடையால் பள்ளி மாணவ - மாணவிகள் மற்றும் கூலி வேலைக்குச் செல்லும் பெண்கள் மற்றும் விவசாயிகள் வெகுவாக பாதிக்கப்பட்டு வந்தனர்.

மேலும், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும், நீதிமன்றத்தை அணுகியும் பிரச்சனைக்குரிய டாஸ்மாக் கடையை அகற்ற அரசு முன்வரவில்லை எனத் தெரிகிறது. இந்த நிலையில், தற்போது தமிழக முதல்வர் விஜய் தமிழக முழுவதும் உள்ள 717 டாஸ்மாக் கடையை மூடுவதற்கு உத்தரவு பிறப்பித்து இருந்தார்.

அந்த அறிவிப்பில் பிரச்சனைக்குரிய வீரசோழபுரம் டாஸ்மாக் கடை கண்டிப்பாக மூடுவார்கள் என்று எதிர்பார்த்து இருந்தனர்.

ஆனால் டாஸ்மாக் கடையை மூட அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இதில் ஏமாற்றம் அடைந்த வீர சோழபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களைச் சேர்ந்த பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டனர்.

பின்னர், அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினர், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனைக்குரிய டாஸ்மாக் கடையை மூட நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரவு அளித்ததன் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

கிராம முக்கியஸ்தர்கள், வீரா ரெட்டி தெரு ராமசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக் குழு உறுப்பினர் சுந்தரமூர்த்தி மற்றும் முத்துமணி, மதியழகன் உள்ளிட்ட வீரா ரெட்டி தெரு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியைச் சார்ந்த ஏராளமான பெண்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.