ஜெயங்கொண்டம் அருகே குடிநீர் கேட்டு குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
8 Apr 2026, 5:30 am

ஜெயங்கொண்டம் அருகே குடிநீர் கேட்டு குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

அரியலூர், ஏப். 7- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஒன்றியத்துக்கு உட்பட்ட படைநிலை ஊராட்சி 2 ஆவது வார்டில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மின் மோட்டார் பழுது காரணமாக கடந்த மூன்று நாட்களாக குடிநீர் வரவில்லை. இதனால், அப்பகுதி மக்கள் காலி குடங்களுடன் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

படைநிலை பகுதியில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். 2 ஆவது வார்டில் உள்ள மின் மோட்டார் மூலம் மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியில் நீர் ஏற்றி, 2 ஆவது வார்டு மற்றும் மூன்றாவது வார்டு பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்து வருகின்றனர். இதில் மின் மோட்டார் பழுது காரணமாக தண்ணீர் வரவில்லை.

மேலும் மூன்றாவது வார்டில் மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி கட்டப்பட்டு இரண்டு வருடங்கள் ஆகிறது. அதில் மின்மோட்டார் பொருத்தப்படாமல் உள்ளது. இதில் மின்மோட்டார் பொருத்தும் பட்சத்தில் மூன்றாவது வார்டு பகுதி மக்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடு இன்றி கிடைக்கும். ஆனால் ஊராட்சி நிர்வாகம் மின்மோட்டார் பொருத்தப் பணம் இல்லை என்று அலட்சியம் காட்டி வருகின்றனர்.

இது குறித்து, ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனு கொடுத்தும் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், அப்பகுதி பொதுமக்கள் திடீரென காலி குடங்களுடன் காடுவெட்டி - ஆண்டிமடம் செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.