முந்தய பக்கம்

ஜெயங்கொண்டம் திமுக வேட்பாளர் க.சொ.க. கண்ணன் வேட்புமனு தாக்கல்

8 Apr 2026, 5:30 am
ஜெயங்கொண்டம் திமுக வேட்பாளர் க.சொ.க. கண்ணன் வேட்புமனு தாக்கல்

ஜெயங்கொண்டம் திமுக வேட்பாளர் க.சொ.க. கண்ணன் வேட்புமனுத் தாக்கல்

அரியலூர், ஏப். 7- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதியின் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் க.சொ.க. கண்ணன், ஏப். 6 அன்று ஜெயங்கொண்டம் தாலுகா அலுவலகத்தில், தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்பு மனுத் தாக்கல் செய்தார்.

உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ஆனந்தவேலுவிடம் வேட்பு மனுத் தாக்கல் செய்து, உறுதிமொழியினை எடுத்து கொண்டார். முன்னதாக தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நிகழ்ச்சியில் திமுக சட்ட திட்ட திருத்தக் குழு இணைச் செயலாளர் சுபாஷ் சந்திரபோஸ், காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் விசிக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram