தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஜெயலலிதாவின் தனிச் செயலாளராக இருந்தவர் புதிய தலைமைச் செயலாளராக நியமனம்!

9 Apr 2026, 5:30 am
ஜெயலலிதாவின் தனிச் செயலாளராக இருந்தவர் புதிய தலைமைச் செயலாளராக நியமனம்!

ஜெயலலிதாவின் தனிச் செயலாளராக இருந்தவர் புதிய தலைமைச் செயலாளராக நியமனம்!

தமிழக அரசின் தலைமைச் செயலாளரை மாற்றியது தேர்தல் ஆணையம். சென்னை, ஏப். 8 - தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு ஏப்ரல் 23 அன்று தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்திய தேர்தல் ஆணையமானது, அண்மையில் தமிழ்நாடு காவல்துறை தலைவர் மாற்றியது. இதுதொடர்பான விவாதங்கள் அடங்குவதற்கு உள்ளாகவே தமிழக தலைமைச் செயலாளர் ஞானதேசிகத்தையும் தேர்தல் ஆணையம் மாற்றியுள்ளது.

மேலும், புதிய தலைமைச் செயலாளராக, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தனிச் செயலாளராக இருந்த ராமமோகன ராவ் நியமித்து உத்தரவிட்டுள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி மாற்றம். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்கள் மாற்றப்பட்டனர். அதைத்தொடர்ந்து தேர்தல் ஆணையம் தீவிரமாக பணியாற்றி வந்த டேவிட்சன் தேவாசிர்வாதம், அந்தப் பதவியிலிருந்து மாற்றப்பட்டு, அவரது இடத்திற்கு சந்தீப் மிட்டல் நியமிக்கப்பட்டார்.

சட்டம் - ஒழுங்கு டிஜிபி மாற்றம். காவல்துறை ஆணையர்கள், மண்டல ஐஜிகள் என தொடர்ச்சியாக பல முக்கிய அதிகாரிகளும் இடமாற்றம் செய்யப்பட்டனர். நேர்மையான அதிகாரி என்று பெயரெடுத்த மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் மாற்றப்பட்டு, அவருக்குப் பதில், பல்வேறு முறைகேடுகள், குற்றச்சாட்டுகளில் சிக்கி, நடவடிக்கைக்கு உள்ளான அசோக் பிரசாத் தேர்தல் ஆணையம் நியமித்தது.

தமிழகத்தில் மீண்டும் திமுக கூட்டணி தான் வெற்றி பெறும்; அதிமுக - பாஜக கூட்டணி படுதோல்வி அடையும் என்று கருத்துக் கணிப்புகள் வெளியாகி வருகின்றன. தேர்தல் களமும் அதையே பிரதிபலித்துக் கொண்டிருக்கிறது. இதனால், ஆந்திர மலைதுள்ள பாஜக, ஆளும் திமுக தலைமை மற்றும் அமைச்சர்களின் தேர்தல் பணிகளை முடக்கும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளதாகவும், இதற்கு சாதகமான அதிகாரிகளை உரிய இடங்களில் அமர்த்துவதற்காகவே, தேர்தல் ஆணையம் மூலம் காய்களை நகர்த்தி வருவதாகவும் அரசியல் வட்டாரங்களில் பேச்சு எழுந்துள்ளது.

தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்படாமல், ஒன்றிய பாஜக அரசின் அறிவிக்கப்படாத துணை அமைப்பாக செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டு மீண்டும் எழுந்துள்ளது. தமிழகத்தில் எந்தவித பெரிய சட்டம் - ஒழுங்கு பிரச்சனையும் இல்லாத நிலையில், தேர்தல் நெருங்கும் நேரத்தில் இவ்வளவு விரைவாகவும் பரவலாகவும் அதிகாரிகளை மாற்ற வேண்டிய அவசியம் என்ன? எனவும் கேள்விகள் எழுந்துள்ளன.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.