தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஜெயலலிதாவின் தனிச் செயலாளராக இருந்தவர் புதிய தலைமைச் செயலாளராக நியமனம்!

9 Apr 2026, 5:30 am
ஜெயலலிதாவின் தனிச் செயலாளராக இருந்தவர் புதிய தலைமைச் செயலாளராக நியமனம்!

ஜெயலலிதாவின் தனிச் செயலாளராக இருந்தவர் புதிய தலைமைச் செயலாளராக நியமனம்!

தமிழக அரசின் தலைமைச் செயலாளரை மாற்றியது தேர்தல் ஆணையம். சென்னை, ஏப். 8 - தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு ஏப்ரல் 23 அன்று தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்திய தேர்தல் ஆணையமானது, அண்மையில் தமிழ்நாடு காவல்துறை தலைவர் மாற்றியது.

இதுதொடர்பான விவாதங்கள் அடங்குவதற்கு உள்ளாகவே தமிழக தலைமைச் செயலாளர் முருகானந்தத்தையும் தேர்தல் ஆணையம் மாற்றியுள்ளது. மேலும், புதிய தலைமைச் செயலாளராக, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தனிச் செயலாளராக இருந்த சாய்குமார் நியமித்து உத்தரவிட்டுள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி மாற்றம். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்கள் மாற்றப்பட்டனர். அதைத்தொடர்ந்து வந்த செய்திகளின்படி பணியாற்றி வந்த டேவிட்சன் தேவாசீர்வாதம், அந்தப் பதவியிலிருந்து மாற்றப்பட்டு, அவரது இடத்திற்கு சந்தீப் மிட்டல் நியமிக்கப்பட்டார். சட்டம் - ஒழுங்கு டிஜிபி மாற்றம். காவல்துறை ஆணையர்கள், மண்டல ஐஜிக்கள் என வெளியாகி வருகின்றன.

தேர்தல் களம் அதற்குள் பிரதிபலித்துக் கொண்டிருக்கிறது. இதனால், ஆந்திரா மலைந்துள்ள பாஜக, ஆளும் திமுக தலைமை மற்றும் அமைச்சர்களின் தேர்தல் பணிகளை முடக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளதாகவும், இதற்கு சாதகமான அதிகாரிகளை உரிய இடங்களில் அமர வைப்பதற்காகவே, தேர்தல் ஆணையம் மூலமாக காய்களை நகர்த்தி வருவதாகவும் அரசியல் வட்டாரங்களில் பேச்சு எழுந்துள்ளது.

அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு. தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்படாமல், ஒன்றிய பாஜக அரசின் அறிவிக்கப்படாத துணை அமைப்பாக செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டு மீண்டும் எழுந்துள்ளது. தமிழகத்தில் எந்தவித பெரிய சட்ட - ஒழுங்கு பிரச்சனையும் இல்லாத நிலையில், தேர்தல் நெருங்கும் நேரத்தில் இவ்வளவு விரைவாகவும் பரவலாகவும் அதிகாரிகளை மாற்ற தேர்தல் ஆணையம் முயல்வது ஏன்? எனவும் கேள்விகள் எழுந்துள்ளன.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.