மேகதாது அணை பிரச்சனை: அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட ஜவாஹிருல்லா வலியுறுத்தல்
7 Jun 2026, 12:23 am

மேகதாது அணை பிரச்சனை: அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட ஜவாஹிருல்லா வலியுறுத்தல்

மேகதாது அணை பிரச்சனை: அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட ஜவாஹிருல்லா வலியுறுத்தல் தருமபுரி, ஜூன் 5- மேகதாது பகுதியில் கர்நாடகா அரசு அணை கட்டும் பிரச்சனை தொடர்பாக, அனைத்துக்கட்சி கூட் டத்தை கூட்ட தமிழக அரசு முன்வர வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எச்.எம்.ஜவாஹி ருல்லா வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தருமபுரி யில் வெள்ளியன்று செய்தியாளர்க ளிடம் கூறுகையில், மேகதாது அணைகட்டு கட்டுவது தொடர்பான பிரச்சனையில், தமிழ்நாடு அரசு அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்.

தமிழ்நாடு அரசு மேக தாது அணை கட்டும் நடவடிக் கையை தடுத்து, பிரச்சனைக்கு தீர்வுகாண வேண்டும்.

சுற்றுச் சூழலை பாதுகாப்பதன் மூலம் மனி தனின் எதிர்காலத்தை பாதுகாக்க லாம். இந்தாண்டு இந்தியாவில் அதிகளவு வெயில் பதிவாகியுள் ளது.

சுற்றுசூழலை பாதுகாப்பது அரசாங்கத்தின் கடமை மட்டும் அல்ல; ஒவ்வொரு தனி மனிதனின் கடமையாகும்.

ஒன்றிய அரசு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை ‘விபிஜி ராம்ஜி’ என பெயர் மாற்றம் செய் துள்ளது. 1

00 நாள் வேலையை, 120 நாட்களாக உயர்த்துவோம் என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது

. ஆனால், இத்திட்டத்திற்கான நிதி யையே குறைத்துள்ளது.

கடந்த 2023-24 ஆம் ஆண்டில் 12695 கோடி ரூபாய், 2024-25 ஆம் ஆண்டில் 10156 கோடி ரூபாய், 2025-26 ஆம் ஆண்டில் 5828 கோடி ரூபாய் ஒதுக் கீடு செய்யப்பட்டுள்ளது. நடப் பாண்டில் (2026-27) 3923 கோடி ரூபா யாக குறைக்கப்பட்டுள்ளது.

அகில இந்திய அளவில் கடந்த 3 ஆண்டுக ளில் நூறு நாள் வேலைத் திட்டத் திற்கு 69 விழுக்காடு நிதி குறைக்கப் பட்டுள்ளது.

நூறு நாள் வேலைத் திட்டம் கிராமப்புற மக்களின் வாழ் வாதாரத்திற்கு உதவியது; பெண்க ளின் வளர்ச்சிக்கு உதவியது.

எனவே, நூறு நாள் வேலைத் திட்டத்தில் தமிழ்நாட்டிற்கு தேவை யான நிதியை தமிழ்நாடு அரசு பெற்றுத்தர வேண்டும்.

தமிழ்நாட்டில் தவெக அரசு தேர் தல் கால வாக்குறுதிகளை நிறை வேற்ற வேண்டும். குறிப்பாக, மக ளிர் உதவித்தொகை உயர்வு, தாய் மாமன் சீர் போன்றவற்றை வழங்க வேண்டும்.

மேலும், தருமபுரி மாவட்டம், பி.துரிஞ்சப்பட்டியில் அரசு மதுபானக்கடை வழிபாட்டு தலம், அரசுப்பள்ளி என பொது மக்கள் கூடும் இடத்தில் அமைந் துள்ளது.

பெண்கள், மாணவிகளை அச்சுறுத்தும் விதமாக உள்ள இந்த கடையை அகற்ற மாவட்ட நிர்வா கம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார். இந்நிகழ்வில், அக்கட்சி யின் மாவட்டத் தலைவர் என்.சுபே தார், நிர்வாகிகள் பைரோஸ், சாதிக் பாஷா ஆகியோர் உடனிருந்தனர்.