முந்தய பக்கம்

ஜவ்வாது மலை கோடை விழா: கலை நிகழ்ச்சிகளுடன் தொடக்கம்

18 Jul 2026, 11:56 pm
ஜவ்வாது மலை கோடை விழா:  கலை நிகழ்ச்சிகளுடன் தொடக்கம்
<p><strong>ஜவ்வாது மலை கோடை விழா: கலை நிகழ்ச்சிகளுடன் தொடக்கம்</strong> </p><p>திருவண்ணாமலை, ஜூலை 18- திருவண்ணாமலை மாவட்டம், ஜமுனாமரத்தூரில் 26-வது ஜவ்வாது மலை கோடை விழா சனிக்கிழமை வெகுவிமரிசையாகத் தொடங்கியது. கிழக்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள ஜவ்வாது மலைக்கு, போளூர், செங்கம், வேலூர் மற்றும் வாணியம்பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சாலை வசதிகள் உள்ளன. மலைவாழ் மக்களின் வாழ்வாதாரமான சிறு தானியப் பயிர் சாகுபடியைக் கொண்ட இப்பகுதியில், மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் கோடை விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜமுனாமரத்தூர் அத்திப்பட்டு செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் நடைபெற்ற விழாவில், பல்வேறு அரசுத் துறைகளின் வளர்ச்சித் திட்டங்களை விளக்கும் கண்காட்சி அரங்குகள், மலர் மற்றும் காய்கறி கண்காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன. மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், கிராமிய இசை மற்றும் பொய்க்கால் குதிரையாட்டம் போன்றவை பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தன. இவ்விழாவில் அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா (பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை), செ.ராஜேஷ்குமார் (சுற்றுலாத்துறை) ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கலந்துகொண்ட இந்த விழா, ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 19) நிறைவடைகிறது.</p>
Share
FacebookXWhatsAppTelegram