கோயம்புத்தூர் விரைவு செய்திகள்
10 Feb 2026, 4:50 pm

பெண் புலி உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

உதகை, பிப்.10- உதகை அருகே பெண் புலி உயிரிழந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நீலகிரி வனக்கோட்டம், உதகை வடக்கு சரகம், எப்பநாடு காவல் நிலையத்திற்குட்பட்ட மொரக்குட்டி காப்புக்காட்டில் ஞாயிறன்று வனத்துறை களப் பணியாளர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் புலி ஒன்று இறந்து கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து உயரதி காரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, மாவட்ட வன அலுவலரின் உத்தரவின்பேரில், அதே பகுதியில் இறந்த புலியின் உடற்கூறாய்வு செய்யப்பட்டது. இதில் உயிரி ழந்தது 8 வயது மதிக்கத்தக்க பெண் புலி என்றும், இயற்கை யாகவே இறந்திருப்பதும் தெரியவந்துள்ளது. அதன் உடல் பாகங்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, ஆய்வுக்கூடத் திற்கு அனுப்பி வைக்கப்பட்டு, அங்கேயே அதன் உடல் எரி யூட்டப்பட்டது. ஆய்வறிக்கை கிடைத்ததும் புலியின் இறப்புக் கான காரணம் தெரியவரும் என வனத்துறையினர் தெரிவித் துள்ளனர்.

லஞ்சம் வாங்கிய வணிகவரித்துறை உதவி ஆணையர் கைது

கோவை, பிப்.10- கோவையில் ரூ.60 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வணிக வரித் துறை உதவி ஆணையாளர் மற்றும் அவரது கணவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். கோவையில் செயல்பட்டு வரும் தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் பணிபுரியும் அபினேஷ் என்பவர் நிறுவனத் தின் சார்பில் அதிகமாக செலுத்திய வரியை திரும்ப பெற விண்ணப்பித்திருந்தார். இதற்கு ஒரு லட்சம் கொடுக்க வேண் டும் என வணிகவரித்துறை உதவி ஆணையாளர் மகேஸ்வரி தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவ்வளவு பணம் கொடுக்க முடியாது என அபினேஷ் தெரிவித்ததோடு, ரூ.60 ஆயிரம் தருவதாக கூறினார். இதையடுத்து அபினேஷ் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். போலீஸ் அறிவுறுத்த லின்படி ரசாயனம் தடவிய நோட்டுக்களை அபினேஷ் திங்க ளன்று இரவு எடுத்து வந்தார். அப்போது பணத்தை உதவி ஆணையாளர் மகேஸ்வரி தனது கணவர் தனசேகரிடம் கொடுக்குமாறு கூறியுள்ளார். இதையடுத்து கொடிசியா மைதானம் அருகே இருந்த தனசேகரை நேரில் சந்தித்து பணத்தை கொடுத்துள்ளார். அப்போது மறைந்திருந்த போலீசார் தனசேகரனை பிடித்தனர். பிறகு பாலசுந்தரம் சாலையில் உள்ள வணிகவரித்துறை அலுவலகத்தில் வைத்து தனசேகரன் மற்றும் அவரது மனைவியான மகேஸ் வரி ஆகியோரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற் கொண்டனர். இதையடுத்து உதவி ஆணையாளர் மகேஸ்வரி மற்றும் அவரது கணவர் தனசேகரன் ஆகிய இருவரையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

குழாய் மூலம் வீடுகளுக்கு சமையல் எரிவாயு விநியோகம் துவக்கம்

ஈரோடு, பிப்.10- ஈரோடு மாவட்டத்தில் குழாய் மூலமாக வீடுகளுக்கு சமையல் எரிவாயு விநியோகிக்கும் பணி துவங்கியது. வீடுகள் மற்றும் வணிகப் பயன்பாட்டிற்கு சிலிண்டர்கள் மூலமாக எரிவாயு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. வீடுகளுக்கு குழாய் மூலமாக சமையல் எரிவாயு விநியோ கம் செய்யும் திட்டத்தை ஒன்றிய அரசு கொண்டு வந்தது. அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் ஒன்றிய அரசின் பொதுத் துறை நிறுவனமான பாரத் பெட்ரோலியம் நிறுவனம் சார்பில், குழாய் மூலமாக சமையல் எரிவாயு விநியோகம் செய்யும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கான குழாய்கள் பதிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட முதலாவது மண்டலம் முதல் 3 ஆவது மண்டலம் வரையும், நசியனூர், பெருந்துறை ஆகிய இடங் களிலும் வீடுகளுக்கு சமையல் எரிவாயு விநியோகம் செய்வ தற்கான குழாய்கள், எரிவாயு பயன்பாடு கணக்கீடு கருவி ஆகியவை பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் முதல் முறையாக நசியனூர் பேரூராட்சி, பெரியார் நகரில் வீடுகளுக்கு குழாய் மூலமாக சமையல் எரிவாயு விநியோகிக்கும் பணி திங்க ளன்று தொடங்கியது. முதற்கட்டமாக 25 வீடுகளுக்கு விநியோ கிக்கப்பட்டது. இப்பணியை பாரத் பெட்ரோலிய நிறுவன மண்டல மேலாளர் வினோத், திட்ட மேலாளர் ரஃபீக் மற்றும் அதிகாரிகள் பாா்வையிட்டனர். இதுகுறித்து பாரத் பெட்ரோ லியம் நிறுவனத்தின் மாவட்ட உதவி மேலாளர் செந்தில்குமார் கூறுகையில், ஈரோடு மாவட்டத்தில் ஒரு லட்சம் வீடுகளுக்கு சமையல் எரிவாயு குழாய் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நசியனூர் பெரியார் நகரில் 25 வீடுக ளுக்கு எரிவாயு விநியோகம் தொடங்கி வைக்கப்பட்டது. மாவட்டம் முழுவதும் இதுவரை 40 ஆயிரம் வீடுகளுக்கு இணைப்புகள் அளிக்கப்பட்டு, தயார் நிலையில் உள்ளன. இப்பகுதிகளில் 500 கி.மீ. தொலைவுக்கு குழாய்கள் அமைக் கப்பட்டுள்ளன. குழாய் இணைப்புகள் முழுமை அடைந்த பிறகு வீடுகளுக்கு எரிவாயு விநியோகம் செய்யப்படும். இந்த ஆண்டு இறுதிக்குள் 10 ஆயிரம் வீடுகளுக்கு விநியோ கம் செய்யப்படும், என்றார்.

பருத்தி ஏலம்

தருமபுரி, பிப்.10- தருமபுரி மாவட்டம், அரூர் ஒழுங்கு முறை விற்பனை கூடம், வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டு றவு விற்பனை சங்கத்தில் திங்களன்று பருத்தி ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத் தில் ஆர்சிஎச் ரகப்பருத்தி மூட்டைகள் குவிண்டால் ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.8469க்கும், குறைந்த பட்சமாக ரூ.8300க்கும் விற்ப னையானது. மொத்தம் ரூ.6 லட்சத்திற்கு வர்த்தகம் நடை பெற்றதாக வேளாண் அதி காரிகள் தெரிவித்தனர்.

ஒரே நாளில் ரூ.3500 சரிந்த மல்லிகை விலை

ஈரோடு, பிப்.10- சத்தியமங்கலத்தில் ஒரே நாளில் மல்லிகைப் பூ விலை கிலோவுக்கு ரூ.3,500 குறைந்து, ரூ.1,380-க்கு விற்பனை செய்யப் பட்டது. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 20 ஆயிரம் ஏக்கர் பரப்பில் மல்லிகை, முல்லைப் பூக்கள் சாகுபடி செய்யப்படு கின்றன. தோட்டத்தில் பறிக்கும் பூக்களைக் கொண்டு வந்து சத்தியமங்கலம் பூ மார்க் கெட்டில் விவசாயிகள் விற்பனை செய்து வரு கின்றனர். கடந்த சில நாட்களாக முகூர்த்த தினம் காரணமாக கேரளா வியாபாரிகள் போட்டி போட்டுக்கொண்டு ஏலம் எடுத்த தால், பூக்கள் விலை உயர்ந்து, அதிகபட்ச மாக கிலோவிற்கு ரூ.4,880க்கு விற்பனையா னது. இந்நிலையில், பூக்கள் தேவை குறைந்து வியாபாரிகள் ஏலம் எடுக்க முன்வராததால், திங்களன்று ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.3,500 குறைந்து ரூ.1,380க்கு விற்பனை யானது. இதுதொடர்பாக பூ மார்க்கெட் நிர்வாகிகள் கூறுகையில், தற்போது பனிப் பொழிவு குறைந்து வெயிலின் தாக்கம் அதிக மாகியுள்ளதால், பூக்கள் வரத்து அதிக ரிக்கும். தொடர்ந்து பூக்கள் விலை குறை யும், என்றனர்.

தெருநாய்கள் கடித்து 16 ஆடுகள் பலி

ஈரோடு, பிப்.10- சென்னிமலை அருகே தெரு நாய்கள் கடித்து 16 ஆடுகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம், சென்னிமலை ஒன்றியம், வெள் ளோட்டை அடுத்த ஞானிபாளையம் கிராமத்தில், பழனிச்சாமி என்பவர் விவசாயம் செய்து வருகிறார். இவருடைய 40 ஆடு களை வழக்கம்போல, ஞாயிறன்று மேய்ச்சல் முடிந்த பிறகு கொட்டகைக்குள் வைத்து பூட்டிச் சென்றுள்ளார். தொடர்ந்து, இரவு நேரத்தில் கொட்டகைக்குள் தெரு நாய்கள் புகுந்து, ஆடுகளை கடித்துள்ளன. மறுநாள் காலையில் கொட்ட கைக்கு சென்ற பழனிச்சாமி, ஆடுகள் உயிரிழந்து கிடப்பதைக் கண்டு வேதனையடைந்தார். தெருநாய்கள் கடித்து 16 ஆடு கள் உயிரிழந்துள்ளன. 15-க்கும் மேற்பட்ட ஆடுகள் பலத்த காயமடைந்தன. இதுகுறித்து அவர் அளித்த தகவலின் பேரில் வெள்ளோடு காவல் துறையினர், கிராம நிா்வாக அலுவ லர், கால்நடை மருத்துவர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், ஆடுக ளுக்கு இழப்பீடு வழங்கவும், தெரு நாய்களை பிடித்து வேறு இடத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் எனவும் அப் பகுதி விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

பன்றிப் பண்ணையை மூடிய பேரூராட்சி நிர்வாகம் ரூ.10 லட்சம் கடனில் தவிக்கும் பட்டியலின இளைஞர்

ஈரோடு, பிப். 10- கவுந்தப்பாடி அருகே பட்டியலினத்தவர் தாட்கோ மூலம் கடன் பெற்று வெண்பன்றி வளர்த்து வந்த நிலையில் அதனை பறிமுதல் செய்து, பட்டியலின இளைஞரை பரிதவிக்க விட்ட பேரூராட்சி செயல் அலுவலரின் செய லுக்கு கண்டனம் வலுத்துள்ளது. பெருந்துறை வட்டம், சிங்காநல்லூர் அருகே கருப்பம்பாளையத்தைச் சேர்ந்தவர் பூபாலகுமார். பட்டியலினத்தைச் சேர்ந்த இவர் தாட்கோவில் தொழில் கடன் பெற்று வெண்பன்றி வளர்ப்பு பணியில் ஈடுபட்டு வந்தார். சலங்கபாளையம் பேரூராட்சிக்குட் பட்ட ஈஐடி ரோடு, ஓம்சக்தி நகரில் உள்ள தனக்கு சொந்தமான இதற்கான பண்ணை அமைத்திருந்தார். சுமார் ரூ.5 லட்சம் செலவு செய்து ரூ.6 லட்சம் கடன் பெற்று தொழில் செய்து வந்த நிலையில், மாதம் ரூ.10 ஆயிரம் வீதம் 50 மாதங்களில் வங்கிக்கு கடன் தொகையை திருப்பிச் செலுத்த வேண்டும். இந்நிலையில், தொலைபேசி மூலம் தொல்லை கொடுத்த பிபி.சுப்பிரமணியம் என் பவர் நேரிலும் மிரட்டல் விடுத்தார். இதனைத் தொடர்ந்து பேரூராட்சி நிர்வாகம் பன்றி பண்ணை கட்டடத்திற்கான ஆவணங்கள் வழங்கவில்லை என கடிதம் கொடுத்தது. மேலும் பி.பி.சுப்பிரமணியத்தின் புகார் மற்றும் பொதுசுகாதாரத்திற்கு கேடு விளை விக்கும் என்ற சுகாதார ஆய்வாளரின் கடிதத் தின் அடிப்படையில் பன்றிகளை அப்புறப் படுத்த வேண்டும் என்று 3 நாள் கெடுவுடன் நோட்டீஸ் கொடுத்தது. இதுகுறித்து தாட்கோ, வங்கி மற்றும் வருவாய்த்துறையி னருக்கு தனது நிலையை விளக்கி மனு கொடுத்துள்ளார். இதற்கிடையில் திங்களன்று பேரூராட்சி நிர்வாகம் பூபாலகுமார் வளர்த்து வந்த வென்பன்றிகளை பேரூராட்சி நிர்வாகத்தி னர் பிடித்துச் சென்று வேலி அமைத்து பாது காப்பாக வைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவ ருடன் பேரூராட்சி அலுவலகத்திற்குச் சென்ற தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி யின் மாவட்டச் செயலாளர் ஏ.கே.பழனிசாமி, துணைத் தலைவர் என்.பாலசுப்பிரமணியன், பழனிசாமி, மாணிக்கம் உள்ளிட்டோர் தர்ணா வில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து 1820 கிலோ எடை கொண்ட 33 பன்றிகள் பிடித்து வைத்ததாக கடிதம் கொடுத்தனர். இதை யடுத்து போராட்டத்தை விளக்கிக் கொண்ட னர். மேலும் வேறு பகுதியில் பண்ணை அமைத்து பன்றிகளை பெற்றுச் செல்லுங் கள் என்று பேரூராட்சி நிர்வாகம் கேட்டுக் கொண்டது. இதனை ஏற்க மறுத்த பூபால குமார், வங்கிக் கடன் ரூ.3லட்சத்து 60ஆயிரம், தாட்கோ மானியம் ரூ.2லட்சத்து 10 ஆயிரம், பங்குத் தொகை ரூ.30 ஆயிரம், போர்வெல், காம்பவுண்டு வால் ரூ.5 லட்சம், அத்துடன் மின் இணைப்பு பெற ரூ.40 ஆயிரம் ஆக மொத்தம் ரூ.10 லட்சம் கடனாளியாக உள் ளேன். கடனில் இருந்து மீள 36 மாத கால அவ காசம் வழங்கி வாழ்வாதாரத்தையும், பொரு ளாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என கடி தம் கொடுத்துள்ளார். தாட்கோ மற்றும் வங்கி மேலாளருக்கும் இக்கடிதத்தின் நகலை அனுப்பியுள்ளார். இந்நிலையில் பேரூராட்சி நிர்வாகம் வேலி அமைத்து பன்றிகளை பாது காக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.