முந்தய பக்கம்

மல்லிகை பூ விலை கிலோ ரூ.6 ஆயிரம்

9 Jan 2026, 3:41 pm
மல்லிகை பூ விலை கிலோ ரூ.6 ஆயிரம்
<p><strong>மல்லிகை பூ விலை கிலோ ரூ.6 ஆயிரம்</strong></p> <p>வரலாறு காணாத விலையேற்றம்</p> <p>மதுரை, ஜன.9 - மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் மல்லிகை உள்ளிட்ட பூக்களின் விலை கடும் உச்சத்தை எட்டியுள்ளதாக பூ வியாபாரிகள் தெரி வித்துள்ளனர். வெள்ளியன்று மதுரை மலர் &nbsp;சந்தையில் மல்லிகை பூ கிலோ 6 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருவது பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மல்லிகை தவிர, பிச்சி ரூ.1200, முல்லை ரூ.1300, கனகாம்பரம் ரூ.1500, பன்னீர் ரோஸ் &nbsp;ரூ.200, ரோஸ் ரூ.180, பட்டன் ரோஸ் ரூ.120, அரளி &nbsp;ரூ.300, சம்பங்கி ரூ.150, செவ்வந்தி ரூ.100, செண்டு &nbsp;மல்லி ரூ.50, கோழிக்கொண்டை ரூ.100, மரிக்கொ ழுந்து ரூ.150 என பூக்களின் விலை உயர்ந்த நிலை யில் காணப்படுகிறது. தாமரை ஒன்று ரூ.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மலர் சந்தைக்கு நாள்தோறும் 300 கிலோவுக் கும் குறைவான பூக்களே வரத்து இருப்பதாகவும், பனிப்பொழிவு காரணமாக மல்லிகை விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டு ள்ளதாகவும் வியாபாரி கள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக வரத்து குறைந்து, விலை மேலும் உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. கொரோனா பெருந்தொற்று காலத்திற்கு பிறகு &nbsp;ஏற்பட்ட ஆண்டுகளில்கூட இத்தகைய விலை யேற்றம் இதுவரை காணப்படவில்லை என்றும், இது வரலாறு காணாத அளவிலான உயர்வு என்றும், பொங்கல் பண்டிகையையொட்டி, இதை விட இரண்டு மடங்கு விலை உயரும் என்றும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் மதுரை மலர் சந்தையில் மல்லிகை பூ &nbsp;வரத்து முற்றிலுமாக குறைந்துள்ளதால் உசிலம் பட்டி, நிலக்கோட்டை உள்ளிட்ட மலர் சந்தைகளில் ரூ.6000-க்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது என்றும், பிப்ரவரி மாதத்திற்கு பிறகே மல்லிகை உற்பத்தி அதிகரித்து விலை குறைய வாய்ப்பு இருப்பதாகவும் மாட்டுத்தாவணி மொத்த பூ வியா பாரிகள் தெரிவித்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram