காசாவை மறுகட்டமைப்பு செய்ய விடமாட்டோம்; டிரம்ப் மருமகன் பகிரங்க மிரட்டல்
19 Aug 2026, 9:52 pm

காசாவை மறுகட்டமைப்பு செய்ய விடமாட்டோம்; டிரம்ப் மருமகன் பகிரங்க மிரட்டல்

வாஷிங்டன்,ஆக.19-காசாவை மறுசீரமைப்பு செய்ய விடமாட்டோம் என டிரம்ப்பின் மருமகனும் அமைதித் தூதருமான ஜாரெட் குஷ்னர் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளார்.

பாலஸ்தீனப் பிராந்தியம் முழுமையாக ராணுவக் கட்டுப் பாடற்றப் பகுதியாக மாற வேண்டும். இல்லை என்றால் அப்படி மாறும் வரை காசாவின் மறுசீரமைப்பிற்கு அமெரிக்கா அனுமதிக்காது என அவர் கூறியுள்ளார். இஸ்ரேலின் தாக்குதல்களை அமெரிக்கா கட்டுப்படுத்தப் போவதில்லை என்றும் கூறியுள்ளார்.

ஹமாஸ் நிர்வாகிகள் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவுடனான சந்திப்புகளுக்குப் பிறகு தான் இம்மிரட்டலை விடுத்துள்ளார். ஹமாஸ் அமைப்புடன் இஸ்ரேல் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு தற்போது வரை போர் நிறுத்தம் அமலில் தான் உள்ளது. ஆனால் இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து பாலதீனர்கள் மீது தாக்குதல் நடத்தி அவர்களை இனப்படுகொலை செய்து வருகின்றது.

இஸ்ரேல் ராணுவம் தாக்குதலை நிறுத்த வேண்டும். தனது ராணுவத்தை காசா பகுதியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என ஹமாஸ் பிரதிநிதிகள் வலியுறுத்தி வருகின்றனர். இதே வேளையில் ஹமாஸ் அமைப்பு முழுமையாக தனது ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும் என இஸ்ரேல் கூறுகிறது. ஆனால் இஸ்ரேலின் வாக்குறுதியை அவ்வளவு எளிதாக நம்புவதற்கு ஹமாஸ் அமைப்பு தயாராக இல்லை.

இந்நிலையில் தான் எகிப்து தலைநகர் கெய்ரோவில் ஞாயிற்றுக்கிழமை ஹமாஸ் அதிகாரிகளுடன் குஷ்னர் நேரடியாக சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார்.

திங்கட்கிழமை நேதன்யாகுவு டனும் பேசியுள்ளார். ஹமாஸ் அமைப்பு டிரம்ப்பின் அமைதித் திட்டத்திற்கான தனது ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தியதாகவும், ஆயுதங்களைக் கைவிட உறுதியளித்துள்ளது. இது எந்தளவுக்கு நடைமுறைப்படுத்தப்படப் போகிறது என்பதை காலம்தான் சொல்லும் எனவும் குஷ்னர் கூறியுள்ளார்.

காசாவை முழுமையாக ஆக்கிரமிக்க வேண்டும் என டிரம்ப் திட்டமிட்டு வருகிறார். குறிப்பாக காசாவின் கடற்கரைப்பகுதிகளில் சொகுசு விடுதிகளை கட்டி லாபம் பார்க்க திட்டமிடுகிறார். இது தொடர்பாக ஏற்கெனவே சில வருடங்களுக்கு முன் அவர் பேசியுள்ளார். தனது ரியல் எஸ்டேட் லாபத்திற்காக பாலஸ்தீனர்களை காசாவை விட்டு முழுமையாக வெளியேற்ற வேண்டும் எனவும் திட்டமிட்டுள்ளார்.

இதன் ஒரு பகுதியாகவே காசாவை நிர்வகிக்க சர்வதேச குழு அமைத்ததுடன் காசா மறுகட்டமைப்பு செய்து தருவதாகவும் டிரம்ப் பேசியுள்ளார். தற்போது ஹமாஸ் உள்ளிட்ட ஆயுதக்குழுக்கள் முழுமையாக தங்களது ஆயுதங்களை கைவிடவில்லை என்றால் அது தங்களது ரியல் எஸ்டேட் தொழிலுக்கு பாதகத்தை உருவாக்கும் என்பதாலேயே குஷ்னர் மிரட்டல் விடுத்துள்ளார்.