விசா கட்டணங்களை 5 மடங்கு உயர்த்தியது ஜப்பான்!
yesterday

ஜப்பான் அரசு, அனைத்து வெளிநாட்டினருக்கான விசா கட்டணங்களையும் ஐந்து மடங்கு உயர்த்தியுள்ளது. கடந்த 50 ஆண்டுகளில் மேற்கொள்ளப்படும் முதல் கட்டண உயர்வு இதுவாகும்.

ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் இந்த மாற்றத்தின்படி, ஒருமுறை மட்டும் பயன்படுத்தக்கூடிய விசா (Single-entry visa) கட்டணம் தற்போதைய 3,000 யென்னிலிருந்து (சுமார் ரூ.1,750) 15,000 யென்னாக (சுமார் ரூ.8,780) உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், பலமுறை பயன்படுத்தக்கூடிய விசா (Multi-entry visa) கட்டணம் 6,000 யென்னிலிருந்து (சுமார் ரூ.3,510) 30,000 யென்னாக (சுமார் ரூ.17,550) அதிகரிக்கப்பட்டுள்ளது.

1978-ஆம் ஆண்டிற்குப் பிறகு முதன்முறையாக மாற்றியமைக்கப்பட்டுள்ள இந்த விசா கட்டணங்கள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் தோஷிமிட்சு மொடேகி, "பணவீக்கம் மற்றும் அந்நியச் செலாவணி ஏற்ற இறக்கங்களை (Exchange rate fluctuations) பிரதிபலிக்கும் வகையிலேயே இக்கட்டண உயர்வு செய்யப்பட்டுள்ளது," என்று தெரிவித்தார். இதனால் உள்நாட்டுச் சுற்றுலாவிற்கு உடனடிப் பாதிப்பு எதுவும் ஏற்படாது எனத் தாங்கள் நம்புவதாகவும் அவர் கூறினார்.

ஜப்பானிய நாணயமான யென்னின் (Yen) மதிப்பு 2021 முதல் தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருவதோடு, தற்போது கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வரலாற்றுப் பின்னடைவை எட்டியுள்ளது. இதன் காரணமாகவும், கொரோனா பேரிடருக்குப் பிந்தைய பயண ஆர்வத்தினாலும் ஜப்பானுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. முன்னெப்போதும் இல்லாத அளவாகக் கடந்த ஆண்டில் மட்டும் 4 கோடியே 27 லட்சம் சர்வதேச சுற்றுலாப் பயணிகள் ஜப்பானுக்கு வருகை தந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த மே மாதம், வெளிநாட்டினருக்கான இதர கட்டணங்களையும் உயர்த்துவதற்கான சட்ட மசோதாவை ஜப்பானின் நாடாளுமன்ற மேலவை (Upper House) நிறைவேற்றியது. அதன்படி, நிரந்தரக் குடியுரிமைக்கான (Permanent residency) விண்ணப்பக் கட்டணத்தின் சட்டப்பூர்வ உச்சவரம்பு, தற்போதைய 10,000 யென்னிலிருந்து 30 மடங்கு உயர்த்தப்பட்டு, 300,000 யென்னாகவும், குடியுரிமைத் தகுதியை மாற்றுவதற்கோ அல்லது தங்கும் காலத்தை நீட்டிப்பதற்கோ (Extend a period of stay) விதிக்கப்படும் கட்டணம் தற்போதைய 10,000 யென்னிலிருந்து 100,000 யென் வரையும் உயர்த்தப்படவுள்ளது.

மற்ற G7 பொருளாதார நாடுகளின் விசா மற்றும் குடியுரிமை சார்ந்த கட்டணங்களுக்கு இணையாக ஜப்பானின் கட்டணங்களையும் கொண்டு வர வேண்டும் என்ற நோக்கில் இந்தக் கட்டண உயர்வு அமல்படுத்தப்படுவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.