தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஜந்தர் மந்தர்: போராட்டத்தின் அடையாளம் - பிருந்தா காரத்

3 Nov 2026, 10:35 pm
ஜந்தர் மந்தர்:  போராட்டத்தின் அடையாளம் - பிருந்தா காரத்

ஜந்தர் மந்தர்: போராட்டத்தின் அடையாளம்

அக்டோபர் 10, 2026. தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று கோரி, எமது கட்சிப் பொதுச்செயலாளர் எம்.ஏ. பேபி தலைமையில் நானும் எங்கள் தோழர்களும் போராடிக் கொண்டிருந்தபோது, காவல்துறையினரால் கைது செய்யப்பட்டோம்.மோசமான பெரும் குற்றங்களை தொடர்ந்து செய்யும் குற்றவாளிகளை ஏற்றிச் செல்வதற்கான ஒருவண்டியில் எங்களை அடைத்து வைத்து, தில்லி முழுவதும் இழுத்தடித்து, கடைசியாக 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ளகாவல் நிலையத்திற்கு கொண்டுசெல்லப்பட்டோம்.

சிறிது நேரம் கழிந்தது. அந்தக் காவல் நிலையத்தைச் சேர்ந்த ஒரு அதிகாரி என்னைச் சந்திக்கவந்தார். நாற்பது ஆண்டுகளுக்கு முன்பாக நடைபெற்ற ஒரு போராட்டத்தின்போது என்னை முதல்முறையாகப் பார்த்ததாக அவர் நினைவுகூர்ந்தார்.காவல்துறையில் சேர்ந்த புதிதில் அவர் நாடாளுமன்ற வீதி காவல் நிலையத்தில் பணியமர்த்தப்பட்டிருந்தார். அப்போது அவர்களுக்கு ஒரு அவசரஅழைப்பு வந்தது. நாடாளுமன்றத்தின் பிரதான நுழைவாயிலிலும், அதைச் சுற்றியிருந்த வேலிகளிலும் பெண்களில் சிலர் தங்களைச் சங்கிலியால் பிணைத்துக் கொண்டிருந்தனர். அவர்களை அங்கிருந்து உடனடியாக அகற்ற வேண்டும் என்பதற்காகவே அந்தஅழைப்பு வந்தது.

நினைவுகள் வெள்ளமெனப் பின்னோக்கிப் பாய்ந்தன. அது 1986ஆம் ஆண்டு. ஷாபானு வழக்கில் வந்த தீர்ப்பை ரத்துசெய்யக்கூடிய மசோதாவைக் கொண்டுவருவதற்கு எதிராக அனைத்திந்திய ஜனநாயக மாதர்சங்கத்தைச் சேர்ந்த நாங்கள் போராடிக்கொண்டிருந்தோம்.வாக்குரிமைப் போராளிகளால் பிரபலப்படுத்தப்பட்ட ஒரு போராட்ட வழியை எங்களில் சுமார் நூறுபேர் கையாண்டிருந்தோம். நாடாளுமன்றத்தின் பிரதான நுழைவாயிலிலும், அதைச் சுற்றியிருந்த வேலிகளிலும் சங்கிலிகளால் எங்களை நாங்களே பிணைத்துக்கொண்டு, பூட்டுப் போட்டு, சாவிகளைத் தூக்கி எறிந்துவிட்டோம்.“அந்த நாளை என்னால் ஒருபோதும் மறக்க முடியாது,”என்று அந்த அதிகாரி என்னிடம் கூறினார்.

“அப்போது எனக்கு மிகவும் இளம் வயது. அப்படியொரு காட்சியை அதற்கு முன்பாக நான் கண்டதில்லை. என்ன செய்வதென்று தெரியவில்லை. சங்கிலிகளை உடைக்க வெட்டுக் கருவிகளைத் தேடி அங்கும் இங்கும் ஓடினோம். இறுதியில், அவற்றை விலைக்கு வாங்க வேண்டியிருந்தது. அவ்வளவு நேரமும், நீங்கள் முழக்கங்களை எழுப்பிக்கொண்டே இருந்தீர்கள்” என்று அவர் மேலும் கூறினார்.

ஜந்தர் மந்தரும் போராட்ட வரலாறும்

அவசரநிலைக் கால அனுபவங்களிலிருந்து பாடம் கற்றுக்கொண்ட அரசு நிர்வாகம், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் தர்ணாக்களை நடத்துவதற்குத் தேவையான அனுமதியை வழங்குவதில் அக்காலத்தில் பெரிய சிக்கல்களை ஏற்படுத்தவில்லை. அப்போது தில்லியில்‘போட் கிளப்’ (Boat Club) மற்றும் அதைச் சுற்றியுள்ள புல்வெளிகளே போராட்டங்களுக்கான இடங்களாக ஒதுக்கப்பட்டிருந்தன.பாபர் மசூதி இடிப்பு மற்றும் அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட மதவெறி அணிதிரட்டல்களுக்குப் பிறகு, அங்குப் போராட்டங்கள் நடத்தத் தடை விதிக்கப்பட்டது; அதற்கு மாற்றாக ‘ஜந்தர் மந்தர்’ போராட்ட இடமாக ஒதுக்கப்பட்டது.

பெரிய அளவுக்கு மக்களைத் திரட்டிப் போராட்டம் நடத்துவதற்கு உகந்த இடமாக இல்லாவிட்டாலும், அந்த

இடம் நாடாளுமன்றத்திற்கு அருகிலேயே அமைந்திருந்தது. பல பத்தாண்டுகளுக்குப் பிறகு, போராட ஒதுக்கப்பட்ட இடம் என்பதைத் தாண்டி, போராட்டத்தின் அடையாளமாகவே அது மாறியுள்ளது.

திரள் திரளாக மக்கள் திரண்டு நின்று, ஜனநாயகரீதியிலான போராட்டங்கள் நடக்கும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க இடமாக ஜந்தர் மந்தர் திகழ்கிறது. அதோடு,சாதாரண மக்களின் போராட்டங்களை, நாடாளுமன்ற ஜனநாயகத்தின் உயிர்நாடியோடு இணைக்கிறது.தனிப்பட்ட முறையில், இந்த இடத்தில் நடந்த நமது போராட்டங்கள் பற்றி நிறைய நினைவுகள் எனக்கு உள்ளன. தோழர்களாகிய நாங்களும், எண்ண முடியாத அளவிலான மற்றவர்களும், ஜந்தர் மந்தரில் காவல்துறையிடம் அடி வாங்கினோம்; கண்ணீர்ப் புகைக்குண்டுகள்மற்றும் தண்ணீர் பீரங்கிகளால் தாக்கப்பட்டோம்.தில்லி மாநில சிபிஐ(எம்) ஏற்பாடு செய்திருந்த விலைவாசி உயர்வுக்கு எதிரான போராட்டம் ஒன்று எனக்குக் குறிப்பாக நினைவில் உள்ளது. கணிசமான எண்ணிக்கையில் பெண்கள் திரட்டப்பட்டிருந்தார்கள். தடுப்புகளை உடைத்துக்கொண்டு அந்தப் பெண்கள்தான் முன்னணியில் இருந்தனர். எனக்கு இடதுபுறத்தில் பூமிஹீன் முகாமைச்சேர்ந்த மோலினா இருந்தார்.

அந்த முகாமில் அவர் கட்சிப் பொறுப்பில் இருந்தார்.இந்த முகாம் ஒரு குடிசைப் பகுதியாகும். இந்த ஆண்டுத் தொடக்கத்தில் தற்போதைய அரசாங்கத்தால் அந்த முகாம் தகர்க்கப்பட்டது. பார்வைக்கு மிகவும்ஒல்லியாக மோலினா இருந்தாலும், மிகுந்த மனவலிமை கொண்டவர்.வீட்டு வேலைகளைச் செய்யும் பணியை அவர்செய்து வந்தார். தண்ணீர்ப் பீரங்கிகள் இயங்கியபோது, நீரின் வேகத்தால் அவர் தரையிலிருந்து மேலேதூக்கியெறியப்பட்டார். தடைகளில் ஒன்றினைப் பிடித்துக்கொண்ட அவர் தரையில் கிடந்தார்.இந்தக் காட்சி படம் பிடிக்கப்பட்டு, அந்தப் புகைப்படம் மிகவும் பிரபலமானதாக இருந்தது. எங்களில் பலரைப் போலவே அவரும் பலத்த காயமடைந்தார்.பெண்களால் நடத்தப்பட்ட மிகப்பெரிய ஆர்ப்பாட்டங்கள் சிலவற்றை ஜந்தர் மந்தர் கண்டிருக்கிறது. 1996ஆம் ஆண்டு முதல், மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றக் கோரி சில மாதங்களுக்கு ஒருமுறைஎன்ற வகையில் அனைத்துப் பகுதிகளையும் சேர்ந்தஆயிரக்கணக்கான பெண்கள் பலமுறை அங்கு வலம் வந்தனர்.இந்த இடத்தில்தான் நீதி கோரி மல்யுத்த வீராங்கனைகள் நடத்திய நீண்ட நெடிய போராட்டம் நடந்தது. தங்கப் பதக்கங்களை வென்று இந்தியாவின் பெருமையாக நின்றவர்கள், இந்தப் புழுதி படிந்த சாலைகளில் நீதி கோரி அமர்ந்தனர்.நாடாளுமன்றக் கூட்டத்தொடர்களின்போது கண்டுகொள்ளப்படாமல் போயிருக்கும் தங்கள் நிலங்களிலிருந்துவெளியேற்றப்பட்ட பழங்குடிகள், குறைந்தபட்ச ஊதியம் மறுக்கப்பட்ட தொழிலாளர்கள், வன்முறையால்பாதிக்கப்பட்டபெண்கள் உள்ளிட்ட எண்ணற்ற மக்களின் குரல்களை ஜந்தர் மந்தர் ஒன்றிணைத்திருக்கிறது.இந்தக் கூட்டங்களில் உரையாற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் வருகை தருகிறார்கள். இங்கிருந்து கோரிக்கைகளைநாடாளுமன்றத்திற்கு எடுத்துச் செல்கிறார்கள். தெருவையும் நாடாளுமன்றத்தையும் இணைப்பதன் மூலம், ஜனநாயகத்தைஜந்தர் மந்தர் வலுப்படுத்துகிறது.போராட்டங்களில் ஏற்ற இறக்கங்கள் இருந்திருக்கின்றன; வெற்றியும் தோல்வியும் கிட்டியுள்ளன. ஆனால், ஜந்தர் மந்தர் என்றவுடன் கிடைக்கும் போராட்ட உணர்வுவலுவாகவே உள்ளது. ஆட்சிக் கட்டிலுக்கு அருகில் உள்ள இந்த எதிர்ப்புச் சின்னத்தையே மோடி அரசாங்கம் அழிக்க முயன்றுள்ளது.

எதிர்ப்புக் குரல்களை ஒடுக்கும் எதேச்சதிகாரப் போக்கு

போராட்டங்கள் நடத்த ஒதுக்கப்படும் இடமாக இனிமேல் ஜந்தர் மந்தர் இல்லை என்று அமித்ஷா தலைமையிலான உள்துறை அமைச்சகம் அறிவித்திருக்கிறது.இந்தியில் ஒரு பழமொழி உள்ளது: “யாருமில்லாத காட்டில் அழகான நடனத்தை மயில் ஆடியது. பார்ப்பதற்குத்தான் யாருமில்லை” என்று.யார் கண்களிலும் போராட்டங்கள் பட்டுவிடக் கூடாது என்று மோடி அரசாங்கம் மறைக்கப் பார்க்கிறது. பொது இடங்களில் எதிர்ப்பைக் காட்டுவதைத் தடுத்து, மக்களின் எதிர்க்கருத்தை ஓரங்கட்டப் பார்க்கிறது. போராட்டம் நடத்தப் புதிதாக ஒதுக்கப்பட்ட இரண்டு இடங்கள் நாடாளுமன்றத்திலிருந்து 20 முதல் 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ளன.

மக்களுக்கும் ஆணவமுள்ள அரசாங்கத்திற்கும் இடையிலான இடைவெளியின் தொலைவை அடையாளப்படுத்துவதாக இது உள்ளது. ஒதுக்கப்பட்ட இடங்களில் அருகிலுள்ளது ராம்லீலா மைதானம். ஆனால், இந்த இடத்தை வாடகைக்குப் பிடிக்க வேண்டுமென்றால் லட்சக்கணக்கில் செலவிட வேண்டிவரும். இதிலிருந்து ஒரு செய்தி தெளிவாகிறது: உங்களிடம் பணம் இருந்தால்மட்டும் போராடுங்கள்!ஒரு எதேச்சதிகார அரசாங்கம், ஹிட்லரின் வழிமுறைகளைப் பயன்படுத்தி, நடைபெற்று வரும் சிறப்புத் தீவிர திருத்தத்தின் (SIR) மூலம் வாக்குரிமைதிருடப்படுவதற்கு எதிராகப் போராடும் ஒரு அமைதியான இயக்கத்தை நசுக்க தனது முழு பலத்தையும் பிரயோகிக்கிறது.

அரசியலமைப்புச் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு தன்னாட்சி அமைப்புக்குத் தலைமை தாங்கும்தலைமைத் தேர்தல் ஆணையரால் இந்த அடிப்படைஜனநாயக உரிமை அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது; அந்த அமைப்பு ஆளும் கட்சியின் நீட்சியாகவே அதிகளவில் செயல்பட்டு வருகிறது.தலைமைத் தேர்தல் ஆணையரின் பதவி விலகலைக் கோரும் போராட்டங்களைத் தொலைதூர இடங்களுக்கு விரட்டியடிக்கும் முயற்சியும் இதே செயல்திட்டத்தின் ஒரபகுதியே; அதாவது, எதிர்ப்புக்குரல்களை அடக்குவது மற்றும் ஜனநாயக உரிமைகள்காணாமல் போவதை “இயல்பானதாகச்” சித்தரிப்பதாகும்.

இளம் போராட்டக்காரர்கள் சொல்வது போல:

“யோசித்துப் பாருங்கள் ப்ரோ, அது நடக்கவே நடக்காது!”இந்த இயக்கம் எதிர்க்கருத்தின் வெளிப்பாடு மட்டுமல்ல; இது அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்கப்போராடும் தேசபக்தர்களின் குரலாகும். ஜந்தர் மந்தரின் போராட்டச் சுடரை ஒரு புதிய தலைமுறையைச் சேர்ந்த இளம்போராளிகள் கையில் எடுத்துள்ளனர்.

ஜந்தர் மந்தர் என்பது போராட்டத்தின் அடையாளம் என்பதை அவர்கள் நன்கு அறிவார்கள். அது நழுவிவிடாமல் நாம் பார்த்துக்கொள்ள வேண்டும்.தமிழில்: கணேஷ் நன்றி: தி வீக், நவ. 1, 2026 ஆங்கில வார இதழ்

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.