தீக்கதிர் முக்கிய செய்திகள்
22 Jul 2026, 8:40 pm

தீக்கதிர் முக்கிய செய்திகள்

திரைக்கலைஞர் அபிராமி

ஜந்தர் மந்தரில் நடப்பதைப் பற்றி என்னால் யோசிக்காமல் இருக்க முடியவில்லை. பல வருடங்கள் படித்து ஏமாற்றப்பட்ட இளைஞர்களின் குரலுக்கு தடியடியே பதிலாக கிடைத்துள்ளது. ஒருவேளை அது என் குழந்தையாக இருந்தால்? உள்ளூரில் நடக்கும் போராட்டங்களில் கலந்துகொள்ளுங்கள்.

பத்திரிகையாளர் சுஷாந்த் சிங்

கூடுதல் படைகளைக் குவிப்பது மட்டுமே மோடி அரசின் ஒரே பதிலாக இருப்பதாகத் தெரிகிறது. அமைச்சர் தர்மேந்திர பிரதானை பதவியில் இருந்து நீக்குவது என்ற ஒரு எளிய செயல் , மாணவர்களுக்கு உறுதியளிப்பதற்கும் கோபத்தைத் தணிப்பதற்கும் பெரிதும் உதவும்.

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் பங்கேற்ற மாணவி

முதன்முதலாக போராட்டத்தில் கலந்து கொள்கிறேன். கண்ணீர் புகைக்குண்டு எங்களின் மீது வீசப்பட்டது. லத்தியால் தாக்கினர். எனினும் நாங்கள் வீடுகளுக்கு ஓடிவிடவில்லை. இங்குதான் இருக்கிறோம். மாற்றமே தீர்வு என நம்புகிறோம். எனவே மீண்டும் போராடுகிறோம்.

பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாய்

மாணவர்கள் தாக்கப்பட்டோ அல்லது இழுத்துச் செல்லப்பட்டோ உள்ள வீடியோக்களை சுட்டிக்கட்டியபோது, அவற்றைப் பார்க்க தனக்கு நேரமில்லை என்று நீதிமன்றம் கூறுகிறது. இது நம் நீதித்துறை எதற்கு முன்னுரிமை அளிக்கிறது என்ற கேள்வியை எழுப்புகிறது.