தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

இறுதி வெற்றி பெறும்வரை இந்தப் போராட்டம் தொடரும்

3 Aug 2026, 8:38 pm
இறுதி வெற்றி பெறும்வரை  இந்தப் போராட்டம் தொடரும்

இறுதி வெற்றி பெறும்வரை இந்தப் போராட்டம் தொடரும்

தில்லியில் நடைபெற்ற ஜந்தர்மந்தர் மாணவர் போராட்டத்தின் விளைவு வியக்கத்தக்கதாக அமைந்துள்ளது. இதில்வெளிப்பட்ட ஆற்றல், மன உறுதி மற்றும் தளராத மனப்பான்மை ஆகியவை முன்னெப்போதும் காணாதவை. ஆர்எஸ்எஸ்/பாஜக தலைமையிலான மோடி அரசு பதவியேற்றது முதல்,பொறுப்புக்கூறலை அறவே வெறுக்கும் வகையிலான ஓர் ‘ஏகாதிபத்திய பாணி’ நிர்வாகம், ஆணவம்மற்றும் தன்னிச்சையான போக்கு ஆகியவற்றின் மூலம்வலுப்பெற்றுள்ளது. சொல்லப்போனால், ஜனநாயகஅமைப்பின் அடிப்படைத் தத்துவமான பொறுப்புக்கூறல் என்பது நீர்த்துப்போனதே இத்தகைய மோதலுக்குக் காரணமாக அமைந்தது. அரசின் அணுகுமுறை எந்தளவுக்கு விசித்திரமான எல்லைக்குச் சென்றதுஎன்றால், கடந்த பன்னிரண்டு ஆண்டுகளில் பிரதமர் ஒரு செய்தியாளர் சந்திப்பைக் கூட நடத்தவில்லை.அண்மைக்காலமாக, இது வெளிநாட்டுப் பத்திரிகையாளர்களிடமிருந்து கடுமையான விமர்சனங்களை ஈர்க்கத் தொடங்கியுள்ளது. ‘கடுமையான மற்றும் யாராலும் வெல்ல முடியாதவர்’ என்ற பிம்பத்தை உருவாக்கிக்கொள்ளும் நோக்கில், அரசு, பிரதமர் மற்றும் அவரதுநெருங்கிய சகாக்கள் ஆகியோர் இத்தகைய தற்பெருமை கொண்ட போக்கைத் தொடர்ந்து கடைப்பிடிப்பதில் உறுதியாக இருந்தனர். ஒருவேளை, 2014-இல் முன்வைக்கப்பட்ட ‘நாட்டிற்கு ஒரு வலுவானஅரசும் வலுவான தலைவரும் தேவை’ என்ற முழக்கத்தை நடைமுறைப்படுத்துவதற்காகவே இதுசெய்யப்பட்டிருக்கலாம். ஆனால், அவை அனைத்தும் தவிடுபொடியாகிவிட்டன.

தேர்வு முறைகேடுகளும் சோனம் வாங்சுக் உண்ணாவிரதமும்

2026 ஜூன் மற்றும் ஜூலை மாதங்கள், மக்கள்போராட்டங்களின் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தை உருவாக்கியுள்ளன. 150-க்கும் மேற்பட்ட சந்தர்ப்பங்களில், மையப்படுத்தப்பட்ட தேர்வுகளின் விளைவாகவினாத்தாள்கள் கசிந்துள்ளன. எனவே, தகவல் அம்பலப்படுத்துபவர்களின் முன்னெச்சரிக்கைகளையும் மீறி, அரசாங்கம் அந்தக் கசிவை மறுக்கப்பெரிதும் முயன்றது. ஆனால், அந்த இளம் வயதினர்விழிப்புடன் இருந்தனர். அவர்களின் அறநெறி ஊடுருவல், தேசியத் தேர்வு முகமையைத் (NTA) துளைத்து,கறுப்புப் பட்டியலில் உள்ள விற்பனையாளர்களுக்கு வசதியாக டெண்டரில் செய்யப்பட்ட முறைகேடுகளுக்கு உறுதியான ஆதாரத்தை வழங்கியது. தர்மேந்திரபிரதானும் அவரது தேசியத் தேர்வு முகமையும் கையும்களவுமாகப் பிடிபட்டனர். இதுவே போராட்டத்திற்கும் ஜந்தர் மந்தருக்கும் ஒரு சமிக்ஞையாக அமைந்தது.

சந்தேகத்திற்கு இடமின்றி, சோனம் வாங்சுக் தொடங்கிய காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் ஒருங்கிணைந்த மாணவர் இயக்கத்திற்குப் பெரும்உத்வேகத்தை அளித்தது. குறிப்பாக இடதுசாரிப் பின்னணியிலான மாணவர் இயக்கத்தின் தொடர்ச்சியான முயற்சிகளும், நீண்டகாலமாகத் தேங்கிக்கிடந்த உணர்வுகளும் விரக்தியும் தன்னிச்சையாக வெளிப்பட்டதும் ஒன்றிணைந்தன. இது ஒட்டுமொத்த இளையதலைமுறையையும் ஆட்கொண்ட ஒருபெரும் எழுச்சியை உருவாக்கியது. பெற்றோர்களும்ஜனநாயகச் சிந்தனை கொண்ட பிற தரப்பினரும் தங்கள் ஆதரவை உரத்த குரலில் வெளிப்படுத்தினர். ஜூலை 18அன்று வாங்சுக் வலுக்கட்டாயமாகக் கடத்தப்பட்டு, அவரது குடும்பத்தினரின் எதிர்ப்பையும் மீறி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிகழ்வு, இந்தப் போராட்டத்தின் வீரியத்தை மேலும் அதிகரித்தது. அவரது உடல்நலத்தைப் பராமரிப்பதாகக் கூறி, மருத்துவமனைப் படுக்கையையே ஒரு வகையான சிறைச்சாலையாக மாற்றவே அரசாங்கமும் பாதுகாப்புப் படைகளும் முற்பட்டன என்பது தெளிவாகத் தெரிந்தது.ஆனால், அரசின் தந்திரம் வெளிப்படையாகவே எதிர்விளைவை ஏற்படுத்தியது. மாணவர் போராட்டக்காரர்களை அச்சுறுத்துவதற்குப் பதிலாக, ஜந்தர் மந்தரில் கூடியவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது; இது நாடுமுழுவதும் வலுவான போராட்ட அலையைப் பரப்ப ஒரு முக்கிய உந்துசக்தியாக அமைந்தது.இதன் உச்சகட்டமாக, ஜூலை 20 அன்று நாடாளுமன்றத்தை நோக்கிய பேரணியில் போராட்டக்காரர்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் பெருந்திரளாகத் திரண்டனர்.

கார்ப்பரேட்மயமாக்கலும் எதிர்காலப் போராட்டங்களும்

கல்வி அமைச்சகம் மற்றும் அரசின் அப்பட்டமான நிர்வாகக் குளறுபடிகளே மாணவர்களின் இந்தப் போராட்டத்தைஇவ்வளவு பிரம்மாண்டமானதாக மாற்றின. இது குறித்த தகவல்கள் இப்போது நாட்டின் பிரதான ஊடகங்கள்சிலவற்றில் வெளிப்படையாகவே ஒளிபரப்பத் தொடங்கியுள்ளன. உதாரணமாக, வெறும் 24 நிரந்தரப்பணியாளர்களைக் கொண்டு,197 ஒப்பந்த மற்றும் அவுட்சோர்சிங் பணியாளர்களைச் சார்ந்திருந்து, தேசியத் தேர்வு முகமை 270-க்கும் மேற்பட்ட தேர்வுகளை நடத்தியுள்ளது. மேலும், சிசிடிவி கண்காணிப்பு போன்ற அடிப்படைப் பாதுகாப்பு நடவடிக்கைகள் பல இடங்களில் இல்லாததும் தெரியவந்துள்ளது. 2024-இல் நடைபெற்ற தேர்வின்போது ஏற்பட்ட நெருக்கடிக்குப் பிறகு தேசியத் தேர்வு முகமையைச் சீரமைக்க ராதாகிருஷ்ணன் குழு பரிந்துரைத்த முக்கிய சீர்திருத்தங்கள் எதுவும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதையே இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

எனினும், மாணவர்களின் முக்கிய கோரிக்கையான தேசியத் தேர்வு முகமையையே கலைத்திடவேண்டும் என்பது இன்னமும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இந்தியாவைப் போன்ற பரந்த மற்றும் பன்முகத்தன்மை கொண்ட ஒரு நாட்டில், இத்தகைய மையப்படுத்தப்பட்ட தேர்வு முறையை அமல்படுத்த நினைப்பதே முற்றிலும் சாத்தியமற்ற ஒன்றாகும். சில மாநில அரசுகளின் எதிர்ப்புகள் இருந்தபோதிலும் இது தொடர்வது, கூட்டாட்சித் தத்துவத்தின் மீதான தாக்குதலைத் தெளிவாக உணர்த்துகிறது. 2020 தேசியக்கல்விக் கொள்கை, முன்னெடுக்கும் வணிகமயமாக்கல் மற்றும் அதிகார மையப்படுத்தல் ஆகியவற்றின் ஒட்டுமொத்தக் கட்டமைப்பிலிருந்தே இது உருவானது என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. தர்மேந்திரபிரதான் கட்டாயமாகப் பதவி விலக நேர்ந்த நிகழ்வானது, தேசியக் கல்விக் கொள்கை குறித்தே மேலும்விவாதிப்பதற்கும் அதனை மறுபரிசீலனை செய்வதற்கும் நிச்சயமாக ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

இது கல்வித் துறையை மட்டும் சார்ந்ததல்ல. வேலைவாய்ப்புச் சூழல் மிகவும் மோசமடைந்திருப்பதும், இளைஞர்களுக்கான வாய்ப்புகள் அனைத்தும் ஏறக்குறைய அடைக்கப்பட்டுவிட்டதும், இத்தகையதொரு எழுச்சி வெடிப்பதற்கான சூழலை உருவாக்கியுள்ளன. விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் பெண்கள் போன்ற முக்கியப் பிரிவினரிடையே நிலவும்வளர்ந்து வரும் அதிருப்தியும் இந்த எழுச்சிக்குக் காரணமாக அமைந்துள்ளது. இவர்களும் தங்கள் முக்கியக்கோரிக்கைகளை வலியுறுத்திப் போராட்டக் களத்தில் இறங்கியுள்ளனர்.

அச்சமின்மையும் புதிய தலைமுறை எழுச்சியும்

ஜூலை 20 முதல் போராட்டக்காரர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட முன்னெப்போதும் இல்லாத அடக்குமுறைக்கு எதிராக எழுந்த பெரும் எதிர்ப்பின் காரணமாக, அரசாங்கம் முற்றிலும் பின்னுக்குத் தள்ளப்பட்டு, தர்மேந்திர பிரதானின் ராஜினாமா கோரிக்கையை ஏற்கநிர்பந்திக்கப்பட்டது. ஆணித் தடியடிகள், பெல்லட் குண்டுகள் மற்றும் அடையாளம் தெரியாத பாதுகாப்புப் படையினரின் குவிப்பு ஆகியவை இந்த மோசமான சூழலை மேலும் மோசமாக்கின. ஏ.என்.ஐ போன்ற பிரதான ஊடகங்களும், இதர முக்கியதொலைக்காட்சிகளும் மாணவர்களின் போராட்டத்தை எவ்வாறு அரக்கத்தனமாகச் சித்தரிக்க முயன்றனஎன்பதை சுயேச்சையான ஊடகங்கள் மற்றும் உண்மை சரிபார்ப்புத் தளங்களின் கூர்மையான பகுப்பாய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன.

மாணவர்களின் எழுச்சியின் முக்கியத்துவம், அதன் மையப்பண்பான ‘அச்சமின்மை’ காரணமாக மிகத் தெளிவாகவெளிப்படுகிறது. எதற்கும் பணியாத, வளைந்து கொடுக்காத அரசாங்கம் என்ற பிம்பத்தை உருவாக்க மேற்கொள்ளப்பட்ட இரக்கமற்ற முயற்சிகளும், மோடியின் ஆட்சியில் யாரும் பதவி விலக மாட்டார்கள் என்ற தற்பெருமைப் பேச்சும் இறுதியில் மண்டியிட வேண்டியதாயிற்று. சொல்லப்போனால், நள்ளிரவில் பிரதமர் விடுத்த வேண்டுகோளும், இளைஞர்கள் மீது அவர் காட்டிய போலியானகவலையும் ஒருவித நகைச்சுவை உணர்வையே ஏற்படுத்தின.

இதில் உள்ள தலைமுறை சார்ந்த பரிமாணத்தின்முழு முக்கியத்துவத்தையும் நாம் உள்வாங்கிக்கொள்ள வேண்டும். அரசாங்கத்தின் கடுமையான எதிர்வினைகளை நகைச்சுவைக்குரியதாக மாற்ற, இளைஞர்கள்கிண்டல், கேலி, குறும்பு, மீம்ஸ், கேலிச்சித்திரங்கள் போன்ற வடிவங்களைப் பயன்படுத்தினர். இது வாட்ஸ்அப் வழியாகப் பரப்பப்படும் போலியான செய்திகளுக்கு எளிதில் அடிபணியாத, இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களைப் பயன்படுத்தி அரசாங்கத்தின் கோட்பாடுகளை எதிர்த்துப் பேசவும், பதிலடிகொடுக்கவும் தெரிந்த ஒரு மாறுபட்ட தலைமுறையாகும். 2029-ஆம் ஆண்டில் 15 முதல் 29 வயதுக்குட்பட்டவர்கள் நாட்டின் மக்கள் தொகையில் 39 சதவீதமாக இருப்பார்கள் என்று அசோகா பல்கலைக்கழகத்தின் சமீபத்திய ஆய்வு தெரிவிக்கும் நிலையில், ஜூலை மாதத்தில் நிகழ்ந்த சம்பவங்கள் அரசாங்கத்திற்கு விடுக்கப்பட்ட ஒரு கடுமையான எச்சரிக்கையாகவே அமைந்துள்ளன.

பேச்சுவார்த்தைகள் மற்றும் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, ஒன்றிய அரசுமட்டுமல்லாமல், பாஜக தலைமையிலான சில முக்கிய மாநில அரசுகளும் தங்கள் நடவடிக்கைகளிலிருந்துபின்வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அரசாங்கம் ஒப்புக்கொண்ட அளவை விடக் குறைவாகஇருந்தாலும், அமைதியான முறையில் போராடுவதற்கான உரிமை, அரசமைப்புச் சட்டத்தின் கீழ்அளிக்கப்பட்டுள்ள உரிமை என்பதையும், போராட்டங்களை ஒடுக்க அதிகாரிகள் மேற்கொள்ளும் கண்மூடித்தனமான வன்முறையைச் சட்டங்கள் அனுமதிக்கவில்லை என்பதையும் உச்ச நீதிமன்றம் மீண்டும் வலியுறுத்தியது. இது நியாயமான எதிர்ப்புக் குரலுக்கான அடித்தளத்தை வலுப்படுத்தியுள்ளது.

நாடாளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சிகளும் மாணவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு ஆதரவாகநின்று, எதேச்சதிகாரப் போக்குகளை அம்பலப்படுத்துவதில் முக்கிய பங்காற்றின. எனவே, தற்போதைய

ஆட்சியின் பயனாளிகளாகத் திகழும் கார்ப்பரேட்டுகளின் ஆதரவுடன் செயல்படும் ஆர்எஸ்எஸ்/பாஜகவின் நவ-பாசிச ஆட்சிக்கு எதிரான சக்திகள், இன்னும்வலிமையான போராட்டங்களுடனும், பரந்த மற்றும் ஆழமான ஒற்றுமையுடனும் எதிர்காலத்தைச் சந்திக்கத்தயாராக வேண்டும்.

பீப்பிள்ஸ் டெமாக்ரசி, ஆகஸ்ட் 2, 2026

தமிழில் சுருக்கம்: ச.வீரமணி

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.