நடுக்கத்தின் அடுத்த கட்டம் ஜந்தர் மந்தர் முடக்கம்
13 Oct 2026, 12:17 am

நடுக்கத்தின் அடுத்த கட்டம் ஜந்தர் மந்தர் முடக்கம்

இந்தியத் தலைநகர் தில்லியின் வரலாற்றுச்சிறப்புமிக்க அடையாளமாகவும், பாட்டாளிகள்மற்றும் உழைக்கும் மக்களின் ஜனநாயக உரிமைகளின் புகலிடமாகவும் விளங்கும் ஜந்தர் மந்தர் போராட்டக் களத்தை, தில்லி காவல்துறையும் ஒன்றிய அரசும்திடீரெனத் தடை செய்து அறிவிப்பாணை வெளியிட்டுள்ளமை கடும் கண்டனத்திற்குரியது. அமைதியான முறையில் எதிர்ப்புக் குரல்களைப் பதிவு செய்வதற்கான இடமாகத் திகழும் ஜந்தர்மந்தரை எந்தவித முன்னறிவிப்புமின்றித் தன்னிச்சையாக முடக்கியிருப்பது, பாசிசப் போக்கின் உச்சமாகும். அரசின் இந்த எதேச்சதிகார நடவடிக்கையை இடதுசாரிகள் உள்ளிட்ட பல்வேறு ஜனநாயக சக்திகளும் கடுமையாக எதிர்த்துப் போராடி வருகின்றன. மக்களின் அடிப்படை உரிமையான கருத்துச் சுதந்திரத்திற்கும் ஜனநாயகவெளிக்கும் பூட்டுப்போடும் இந்த மக்கள் விரோத நடவடிக்கையை எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

சுவாரஸ்யமாக, ஜந்தர் மந்தர் முடக்கப்படுவதற்குச் சில நாட்களுக்கு முன்புதான், தில்லியில்அமைதியான முறையில் போராட்டம் நடத்த மாற்று இடம் ஒன்றைக் கண்டறிவது குறித்து உச்சநீதிமன்றமும் ஒன்றிய அரசும் ஒத்தக் கருத்துடன் இயங்குவதாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், நீதிமன்றத்தில் ஒரு நிலைப்பாட்டை வெளிப்படுத்திக்கொண்டே,மறுபுறம் அவசரகதியில் போராட்டத் தளத்தை ரத்து செய்திருப்பது அரசின் இரட்டை வேடத்தையே வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. இது குறித்து தில்லி உயர் நீதிமன்றத்தில் அவசர விசாரணைக்கு வரவுள்ள மனுக்கள், அரசின் அடக்குமுறை முகத்தை அம்பலப்படுத்தியுள்ளன. அக்டோபர்10 அன்று அமைதியாகப் போராடிய மாணவர்- இளைஞர்கள் மீது காவல் படையினர், சமூகவிரோதிகள் மற்றும் வெளிநபர்களால் நடத்தப்பட்ட வன்முறைத் தாக்குதல்களும், அதற்குப் பின்னால் உள்ள அதிகார வர்க்கத்தின் கைகளும்ஜனநாயகத்தின் மீதான நேரடித் தாக்குதல்களாகும்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு, மக்களின் அரசியல் சாசன உரிமைகளைப் பாதுகாக்க வேண்டுமே தவிர, அவர்களின் எதிர்ப்புக் குரல்களை ஒடுக்குவது பாசிச எதேச்சதிகாரத்தின் வெளிப்பாடாகும். நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மாண்பைக் காப்பதாகக் கூறிக்கொள்ளும் ஆட்சியாளர்கள், மக்களின் போராடும் உரிமைகளை ஒவ்வொன்றாகப் பறித்து வருகின்றனர். தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் எளிய மக்களின் போராட்டக் குரல்களைநசுக்குவதன் மூலம் தங்களின் ஆட்சியின் தோல்விகளையும் பலவீனங்களையும் மறைக்கமுயலும் மோடி அரசின் இந்த அடக்குமுறைப் போக்கு ஒருபோதும் பலனளிக்காது.

ஜந்தர் மந்தர் போராட்டத் தளத்தை மாற்றுவது அல்லது முற்றிலுமாக முடக்குவது என்பதுஒட்டுமொத்த ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் செயலாகும். தில்லி உயர் நீதிமன்றம்மக்களின் ஜனநாயகப் போராட்ட உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும்.