ஜேன் ஆஸ்டின் நாவல்கள் நகைச்சுவை நிறைந்த பகடிகள்! - பேரா பெ.விஜயகுமார்
20 Jun 2026, 8:50 pm

ஜேன் ஆஸ்டின் நாவல்கள் நகைச்சுவை நிறைந்த பகடிகள்! - பேரா பெ.விஜயகுமார்

ஜேன் ஆஸ்டின் (1775-1817) ஜார்ஜ் ஆஸ்டின் – கஸண்டரா தம்பதி களின் எட்டு பிள்ளைகளில் ஏழாவதாகப் பிறந்தவர். ஜேன் ஆஸ்டின் வாழ்ந்த காலத்தில் பெண்களுக்கு உயர்கல்வி பெறும் வாய்ப்பு மறுக்கப்பட்டிருந்தது. தொடக்கப்பள்ளிப் படிப்பிற்குப்பின் வீட்டிலேயே தங்கள் தந்தையின் நூலகத்தில் இருந்த புத்தகங்களைப் படித்து ஜேனும், அவர் மூத்த சகோதரி கஸண்டராவும் கற்றுக்கொண்டனர்.

ஜார்ஜ் ஆஸ்டின் தன் மூத்த மகளுக்கு கஸண்டரா என்று தன் மனைவியின் பெயரையே சூட்டினார். இங்கிலாந்தின் ஹாம்ப்ஷயர் பகுதியில் ஸ்டீவண்டன் கிராமத்துச் சர்ச்சில் தன்னு டைய எழுபது வயதுவரை பாதிரியாரா கப் பொறுப்பில் இருந்தார். இளைய மகள் ஜேனுக்கு எழுதுவதில் ஆர்வம் இருந்ததை அறிந்த தந்தை அவளின் எழுத்துப் பணிக்கு ஆதரவாக இருந் தார். ஆஸ்டின் குடும்பம் அன்பும், பண் பும் நிறைந்த நல்லதொரு குடும்பம். ஜேன் எழுதும் சிறு சிறு நாடகங்கள், கதைகள், கவிதைகளை அவர் வாசிக்க, குடும்பத்தில் அனைவரும் கேட்டு மகிழ் வர். அறிவார்ந்த குடும்பச் சூழலில் வாழ்ந்த ஜேன் சிறுவயதிலேயே மூன்று நோட்டுப் புத்தகங்கள் நிறைய எழுதி வைத்திருந்தார். அப்போது ஜேன், தான் உலகின் சிறந்த நாவலாசிரியராகப் பரிணமிக்கப் போவதைப் பற்றிச் சற்றும் சிந்தித்திருக்கவில்லை.

தான் வாழ்ந்த நாற்பத்திரெண்டு ஆண்டுகளில் ‘சென்ஸ் அண்டு சென்ஸி பிலிடி’, ‘ப்ரைடு அண்டு ப்ரஜுடிஸ்’, ‘மேன்ஸ்ஃபீல்டு பார்க்’,‘எம்மா’, ‘நார்த் தெங்கர் அபி’, ‘பெர்சுவேஷன்’ ஆகிய ஆறு நாவல்களுடன் ‘சான்டிட்டன்’ என்ற முழுமை அடையாத நாவலை யும் எழுதியுள்ளார். ஆறு சகோதரர் களுடன் வாழ்ந்த ஜேன் – கஸண்டரா சகோதரிகள் இடையிலிருந்த பாச மும், நேசமும் அளவிடற்கரியது. தான் வாழ்ந்த கிராமத்தைவிட்டு ஜேன் அதி கம் பயணித்ததில்லை. அருகிலிருந்த லண்டன் நகருக்குக்கூட தேவையின் அடிப்படையில் மட்டுமே சென்றுள் ளார். தீவிர வாசிப்பு, தன்னைச் சுற்றி வாழ்ந்த மக்களின் பழக்க வழக்கங் களை உன்னிப்பாகக் கவனிப்பது, சகோ தரர்கள், உறவினர்களுக்கு கடிதம் எழு துவது, சகோதரர்களின் குடும்பத்தினர் மீது பாசமழை பொழிவது இவற்றினை மட்டுமே செய்து வந்தார். ஒருமுறை காதல் வலையில் விழவிருந்த ஜேன் அதிலிருந்து விரைவில் வெளிவந்தார். சகோதரிகள் இருவரும் வாழ்நாள் முழு வதும் திருமணம் செய்துகொள்ள வில்லை. காதலைப் பற்றி எழுதித் தீர்த்த ஜேனுக்கு தனக்கான காதலைப் பற்றிச் சிந்திக்க நேரமில்லாமல் போனது.

பெண்கள் பெயரில் வெளியிட இயலா நிலை

ஜேன் ஆஸ்டினின் இரு சகோதரர் கள் ராயல் நேவியின் அட்மிரல் பதவி யில் இருந்தார்கள். இருவர் தந்தை யைப்போல் பாதிரியார்களாக இருந் தனர். ஒரு சகோதரர் பணக்கார உறவுக் காரரின் சொத்துக்குச் சொந்தமாகி பெரும் செல்வந்தராக வாழ்ந்தார். ஒருவர் ஊனத்துடன் வீட்டில் வாழ்ந்து வாழ்நாளைக் கழித்தார். ஜேன் ஆஸ்டின் வாழ்ந்த காலத்தில் அவரின் நான்கு நாவல்கள் மட்டுமே அச்சிலே றின. நார்த்தங்கர் அபி, பெர்சுவேஷன் ஆகிய இரு நாவல்களும் ஜேனின் இறப்புக்குப் பின்னரே அச்சேறின, அக்காலத்தில் பெண்கள் பெயரில் புத்தகங்கள் வெளியிட முடியாது என்ப தால் பெயர் குறிப்பிடப்படாமால் வெளி வந்தன.

ஜேன் ஆஸ்டின் தான் நன்கறிந்த சமூகத்தை மட்டுமே தன் நாவல்களில் சித்தரித்தார். பதினெட்டாம் நூற்றாண் டின் பிற்பகுதியில், நடுத்தரக் குடும்பங் களில் வாழ்ந்த மக்களே அவரின் கதை மாந்தர்கள். அவர் வாழ்ந்த காலத்தில் தான் உலக நாடுகளையே குலுக்கிய பிரஞ்சு புரட்சி (1788-1789) நடந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக் கத்தில் ஐரோப்பிய நாடுகள் முழுவதும் போரினால் பாதிக்கப்பட்டன. ‘நெப்போ லியானிக் போர்’ என்று அழைக்கப்பட்ட போரில் (1803-1815) இங்கிலாந்து உட் பட ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் மிகப் பெரிய இழப்புகளைச் சந்தித் தன. அன்றிருந்த பிரிட்டிஷ் அரசு ‘Corn Laws’ எனப்படும் கொடூரமான சட்டத் தின் மூலம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கோதுமை, ஓட்ஸ், பார்லி போன்ற தானியங் களுக்கு அதிக வரி விதித்தது. இதனால் ஏற்பட்ட விலைவாசி உயர்வால் ஏழை எளிய மக்கள் கொடூர வறுமைக்கு ஆளாகினர்.

இளவரசரின் அழைப்பும் கோரிக்கையும்

இங்கிலாந்து அரச குடும்பத்தில் மிகப் பெரிய மாற்றம் நடந்ததும் ஜேன் ஆஸ்டின் எழுத்தாளராகப் பரிண மித்த காலத்தில்தான். மூன்றாம் ஜார்ஜ் மன்னர் மனநோயில் பாதிக்கப்பட்டார். அவரால் ஆட்சியை நடத்த முடியாது என்பதால் அவர் மகன் ஆட்சி பொறு பேற்றார். அரசர் உயிருடன் இருக்கும் போதே அரியணையில் இளவரசர் அமர்ந்து ஆட்சி செய்வதை ‘ரீஜென்சி காலம்’ என்றழைக்கப்பட்டது. இங்கி லாந்தின் ரீஜென்சியாக பொறுப்பேற்ற இளவரசர் (பின்னர் நான்காம் ஜார்ஜ் மன்னரானவர்) அதிக கேளிக்கை களில் ஈடுபட்டு அரச குடும்பத்தின் பெய ருக்கு களங்கம் ஏற்படுத்தினார். இத னால் அரசின் கருவூலம் காலியானது.

ஜேன் ஆஸ்டினின் எழுத்துத் திறனை அறிந்த இளவரசர் அவரைத் தன் அரண்மனைக்கு அழைக்கிறார். ஜேன் ஆஸ்டின் இந்த அழைப்பை விரும்பவில்லை. இருப்பினும் இளவர சரின் அழைப்பு என்பதால் மறுக்க முடி யாமல் அரண்மனைக்குச் செல்கிறார். ஜேன் எழுதிவரும் ’எம்மா’ நாவலைத் தனக்குச் சமர்ப்பணம் செய்யும்படி கேட்டுக்கொள்கிறார் இளவரசர். ஜேன் ஆஸ்டின் ரீஜென்சி கால அசிங்கங்கள் எதையும் தன்னுடைய படைப்புகளில் எழுதவில்லை. ஜேன் ஆஸ்டின் தான் அறிந்திராத அரசியல், சமூகப் பிரச்ச னைகளை முற்றிலும் தவிர்த்தார்.

மேலோங்கிய அன்பு

ஜேனின் இரண்டு சகோதரர்கள் ராயல் நேவியில் அட்மிரல்கள். நேரிடை யாக போர்க்களத்தில் இருந்தார்கள். இருப்பினும் ஜேன் நெப்போலியானிக் போர் பற்றி சிறிதும் குறிப்பிடவில்லை. ஜேன் ஆஸ்டின் தான் நன்கறிந்த சமூகத்தை மட்டுமே தன் நாவல்களில் சித்தரித்தார். அவருக்கு நன்கு பரிச்ச யமான குடும்பப் பிரச்சனைகளே அவர் நாவல்களின் கருப்பொருளாயின. ஜேன் ஆஸ்டின் நாவல்கள் தந்தத்தில் செய்யப்பட்ட சிறிய கலைப் பொருட் களை ஒத்த சொற்சித்திரங்கள். அதில் வன்முறைகளுக்கு இடமில்லை. அன்பு மட்டுமே மேலோங்கி நின்றது.

ஜேன் ஆஸ்டின் ஆண்-பெண் உறவின் நெருக்கடிகளைப் பேசினார். திருமணம் பெண்கள் வாழ்வில் ஏற்ப டுத்தும் மாற்றங்களைப் பேசினார். ‘ப்ரைடு அண்டு பிரஜுடிஸ்’ நாவல், திருமதி பென்னட்டின் புலம்பலுடன் தொடங்குகிறது. தன் ஐந்து பெண்களுக் கும் தகுதியான மணமகன்கள் கிடைக்க வேண்டும் என்பதே அவரின் ஆதங்கம். நடுத்தரக் குடும்பப் பெண்களின் எதிர் காலம் அவர்களின் திருமணத்துடன் தொடர்பானது என்பதே அன்றைய நியதி. நன்கு வசதியான, படித்த இளை ஞர்கள் தங்கள் பெண்களைத் தேர்ந் தெடுக்க வேண்டும் என்று பெற்றோர் கள் எதிர்பார்த்தனர். அதைத்தான் திருமதி பென்னட் பிரதிபலிக்கிறார் அன் பின் வழியது திருமணம் என்பது ஜேனின் அசைக்க முடியாத நம்பிக்கை. ‘நார்த் தங்கர் அபி’ நாவலின் நாயகி கேத ரின்,’ பணத்தின் அடிப்படையில் திரும ணத்தை முடிவு செய்வது கொடூரமான சிந்தனை’’ என்கிறார்.

காதலுக்கு மரியாதை

ஜேன் ஆஸ்டின் நாவல் கதாநயா கிகள் அனைவரும் திருமணத்தில் அன்புக்கே முதலிடம் கொடுக்கின்ற னர். ’ப்ரைடு அண்டு ப்ரஜுடிஸ்’ நாவ லின் நாயகி எலிசபெத் பென்னட்டின் காதல் உன்னதமானது. முதலில் கதாநா யகன் டார்சி குறித்து தப்பான புரிதலில் எலிசபெத் இருந்தார். டார்சியின் அறம் சார்ந்த, அன்பு மிகுந்த நல்லெண்ணத் தைப் புரிந்துகொண்ட பின்னர் அவரை மணக்கிறார். டார்சியும் தன்னுடைய தற் பெருமையை விட்டுவிட்டு உண்மை யான காதலுக்கு மரியாதை செய் கிறார்.

‘எம்மா’ நாவலின் கதாநாயகி எம்மா வின் பொழுதுபோக்கு match making. தன்னுடைய சிநேகிதிகளுக்கான இணையர்களைத் தன்னால் தேர்ந்தெ டுக்க முடியும் என்று நினைக்கிறார். ஆனால் அவர் போடும் கணக்கெல் லாம் தப்பாகிறது. அதுவே நாவலை இனிதாக்குகிறது. வாசகர்கள் மெல்ல நகைக்கிறோம். எம்மாவின் ’மேட்ச் மேக் கிங்’ விளையாட்டுக்கு ஹேரியட் ஸ்மித் பலியாகிறார். இறுதியில் எம்மாவின் பிடியிலிருந்து விடுபட்டு அவளை உண் மையாக நேசிக்கும் ராபர்ட் மார்ட்டினை மணந்துகொள்கிறார். எம்மா தனக்கான இணையரையே கண்டுபிடிக்க முடியா மல் திணறுவது மற்றுமொரு நகை முரண். இறுதியில் குடும்ப நண்பரும், எம்மாவுக்கு எப்போதும் வழிகாட்டி யாக இருப்பவருமான மிஸ்டர் நைட்லி யையே தனக்குப் பொருத்தமானவர் என்பறிந்து அவரை மணந்து கொள் கிறார். நாவல் முழுவதும் மெல்லிய நகைச்சுவையும், மனதைப் புண்படுத் தாத பகடியும் நிறைந்துள்ளன.

ஜேன் ஆஸ்டினின் ஆறு நாவல் களின் கதாநாயகிகளும் தங்களுக்கு வழிகாட்டிகளாக இருந்து, நேர்மை யுடன் நேசித்தவர்களையே திருமணம் செய்கின்றனர். ’மேன்ஸ்ஃபீல்டு பார்க்’ நாவலில் ஏழைப் பெண் ஃபேனி ப்ரைஸ் குழந்தைப் பருவத்திலேயே தன் பணக்காரப் பெரியம்மா திருமதி பெர்ட் ரம் வீட்டுக்கு தத்துப்பிள்ளையாக வருகி றாள். அந்த வீட்டில் மற்றவர்களின் புறக் கணிப்புக்கு ஆளாகி அந்நியப்பட்டு நிற் கும் அவளை அன்புடன் அரவணைப் பது அவள் கசின் எட்மண்டு பெட்ரம் மட்டுமே. அவளின் ஏழ்மையைப் பெரி தாகக் கருதாமல் அவளின் அன்புள்ளத் தைப் புரிந்துகொண்டு எட்மண்டு பெட் ரம் அவளைத் திருமணம் செய்து கொள் கிறார்.

கடைசி நாவல்

‘சென்ஸ் அண்டு சென்ஸிபிலிடி’ நாவலில் எலினார், மேரியான் சகோத ரிகள் பல தடைகளையும் மீறி தங்களுக் கான தகுதியான இணையரைத் தேர்ந் தெடுக்கின்றனர். எலினாரின் அறிவும் (sense), மேரியானின் உணர்ச்சிமய மான செயல்பாடுகளும் (sensibilities) அவர்களை வழிநடத்துகின்றன. வில்லோபியின் துரோகத்துக்கு ஆளா கும் மேரியான் அவளைவிட வயதில் மிகவும் மூத்த கெனல் பெரண்டனின் அறிவுரைகளை ஏற்று அவரைத் திரும ணம் செய்து கொள்கிறாள். பெர்சுவே ஷன் ஜேன் ஆஸ்டினின் ‘The Swan Song.’ ஆகும். ஆம்; அவரின் கடைசி நாவல். ஜேன் ஆஸ்டின் நாவல்களின் நாயகிகளிலேயே மிகவும் கெட்டிக் காரப் பெண்மணி பெர்சுவேஷன் நாவ லின் நாயகி ஆன் எலியட். தான் முதலில் நிராகரித்த காதலர் கேப்டன் வெண்ட் வொர்த்தின் பெருமையை உணர்ந்த பின்னர் அவரை ஏற்றுக்கொள்கிறார்.

1817இல் ஜேன் ஆஸ்டின் உடல் நிலை மோசமாகிறது சிறுவயதிலி ருந்து எழுதிக் குவித்த கைகள் சோர்வ டைகின்றன. இளம் வயதில் மரணம் அவ ரைத் தழுவுகிறது. ஜேன் ஆஸ்டின் நாவல்கள் அறத்தை வலியுறுத்தும் மென்மையான நகைச்சுவைப் படைப்பு களாக (Comedy of Manners) மிளிர் கின்றன. தன் படைப்புகளில் மனிதர் களின் சபலங்கள், சஞ்சலங்கள், சலனங் களை எள்ளி நகையாடுகிறார். குடும்பத் தில், சமூகத்தில் ஆண்களும், பெண்க ளும் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டும் அற்புதமான படைப்புகள் ஜேன் ஆஸ்டினின் நாவல் கள்.