ஜனார்தன் ரெட்டி ‘பள்ளி வாத்தியார்’ ஆகலாமா?
25 May 2026, 10:09 pm
<p><strong>ஜனார்தன் ரெட்டி ‘பள்ளி வாத்தியார்’ ஆகலாமா? </strong></p><p>“உள்ளேன் ஐயா” அல்லது “எஸ் சார்” என்று வகுப்பறைகளில் மாணவர்கள் சொல்லும் எளிய நடைமுறையை மாற்றி, “ஜெய் ஸ்ரீராம்” என்றுதான் வருகைப் பதிவேட்டின் போது சொல்ல வேண்டும் என உருகுகிறார் கர்நாடகா பாஜக எம்.எல்.ஏ ஜனார்தன் ரெட்டி. கர்நாடகாவில் லட்சக்கணக்கான கோடிகள் கனிம வள முறைகேடு, சிபிஐ நீதிமன்றம் விதித்த 7 ஆண்டு சிறைத்தண்டனை எனப் பெரும் ‘புகழ்’ பெற்ற கார்ப்பரேட்-இந்து த்துவா முகமான இவருக்கு, திடீ ரெனப் பள்ளிக் குழந்தைகள் மீது பாசம் பொத்துக் கொண்டு வருகிறது. கல்வி கற்கும் வய திலேயே பிஞ்சு நெஞ்சங்களில் இந்துத்துவா நஞ்சை விதைக்கத் துடிக்கும் சங் பரிவாரத்தின் திட்டத்தைத்தான் இந்த ரெட்டி பிரதிபலிக்கிறார். கனிம வளத்தைச் சூறையாடியவர்கள் இப்போது மாணவர்களின் சிந்தனையையும் சூறையாடத் துடிப்பதை மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்! </p>
