ஜன.29- வலங்கைமானில் தீண்டாமை சுவர் அகற்றும் போராட்டம் சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் பங்கேற்கிறார்
24 Jan 2026, 3:38 pm
<p><strong>ஜன.29- வலங்கைமானில் தீண்டாமை சுவர் அகற்றும் போராட்டம் சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் பங்கேற்கிறார்</strong></p>
<p>திருவாரூர், ஜன.24- திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் தனிநபரால் எழுப்பப்பட்ட தீண்டாமை சுவரை அகற்றக் கோரி, சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் தலைமையில் தீண்டாமை சுவரை அகற்றும் போராட்டம் ஜன.29 ஆம் தேதி சிபிஎம் மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டக் குழு சார்பாக அறிவித்து, மாவட்ட முழுவதும் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. இதனையொட்டி, திருவாரூர் மாவட்ட கண்காணிப்பாளர் அழைப்பின் பேரில் சிபிஎம் மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி நிர்வாகிகள், மாவட்ட காவல் கண்ணாணிப்பாளர் சந்திப்பு சனிக்கிழமை நடைபெற்றது. அப்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கருண் கரட் பேசுகையில், “தமிழ்நாடு முதல்வர் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே மற்றும் பல்வேறு அரசியல் நிகழ்ச்சிகளை இருப்பதால் ஜன.27 ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனைக்கு தீர்வு காணலாம் என தெரிவித்து போராட்டத்தை ஒத்தி வைக்கும்படி கேட்டுக் கொண்டார். சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், மாவட்டச் செயலாளர் டி. முருகையன் மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி நிர்வாகிகள் கே. தமிழ்மணி, பி.கந்தசாமி, கே.முரளி ஆகியோர் மாவட்ட கண்காணிப்பாளரிடம் பேசும்போது, வலங்கைமான் பேரூராட்சிக்குட்பட்ட 14 ஆவது வார்டு பகுதியில் பட்டியலின மக்கள் பயன்படுத்தி வந்த பொதுப்பாதையை அடைத்து தீண்டாமைச் சுவர் எழுப்பியதாக செல்வமணி நகர் உரிமையாளர் ஜெகபர் அலி என்பவர் மீது நடவடிக்கை எடுத்திடுமாறு கடந்த செப்.24 ஆம் தேதி வலங்கைமான் வட்டாட்சியர் அலுவலகத்தை தமிழ்நாடு தீண்டாமை முன்னணி, விவசாய தொழிலாளர் சங்கம் மற்றும் ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பாக முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. பேச்சுவார்த்தை அதனை தொடர்ந்து, வலங்கைமான் வட்டாட்சியர் சிவகுமார் நன்னிலம் துணை கண்காணிப்பாளர் தமிழ்மாறன், திருவாரூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கோட்டாட்சியர், வட்டாட்சியர் மற்றும் ஆதிதிராவிட நலத்துறை தனி வட்டாட்சியர், நன்னிலம் துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் அரசு அலுவலர்கள் முன்னிலையில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில், மேற்படி சுவர் குறித்த அறிக்கை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் வாயிலாக அரசுக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளது. அரசிடமிருந்து இது தொடர்பாக வரப்பெறும் வழிகாட்டுதல்களின்படி உரிய நடவடிக்கை விரைவாக எடுக்கப்படும் என கோட்டாட்சியர் தெரிவித்தார். தீர்வு இல்லை ஆனால், தற்போது வரை இப்பிரச்சனையில் எவ்விதமான உறுதியான நடவடிக்கையையும் அரசு தரப்பில் இருந்து மேற்கொள்ளவில்லை. ஆகவேதான் மாநிலச் செயலாளர் பெ.சன்முகம் தலைமையில் தீண்டாமை சுவர் இடிப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது என மாவட்ட கண்காணிப்பாளரிடம் தலைவர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து தலைவர்கள் பேசும்போது, தாங்கள் தெரிவித்தப்படி ஜனவரி 27 ஆம் தேதி பேச்சுவார்த்தை நடைபெறுபதற்கு முன்பாக அரசிடம் இப்பிரச்சினைக்கு உரிய தீர்வு எட்ட வேண்டும். உறுதியான நடவடிக்கையை எடுத்து தீர்வு காணும் பட்சத்தில் மட்டும் போராட்டம் ஒத்திவைப்புக்கான பேச்சுவார்த்தையில் ஈடுபடலாம். இல்லையெனில் அறிவித்தபடி ஜனவரி 29 ஆம் தேதி போராட்டம் நடைபெறும் என தெரிவித்தனர். சந்திப்பின்போது, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் துணைத் தலைவர் கதாக அரசு தாயுமானவன், மாவட்டக் குழு உறுப்பினர் ஐ.வி.என். இன்குலாப் உள்ளிட்ட போராட்டக் குழுவினர் உடனிருந்தனர்.</p>
