திருச்சி விரைவு செய்திகள்
21 Jan 2026, 2:28 pm

விருதுநகர் மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் 19 இடங்களில் திறப்பு

விருதுநகர், ஜன.21- விருதுநகர் மாவட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் வத்ராப், கான்சாபுரம், முஷ்டாக்குறிச்சி, இராமசாமியாபுரம், தம்பிப்பட்டி, தேவ தானம், சேத்தூர், மேட்டுப்பட்டி, சுந்தரபாண்டியம், முடுக் கன்குளம் மற்றும் சென்னிலைக்குடி ஆகிய 11 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வரு கின்றன. மேலும், தற்போது நெல் அறுவடைக்கு தயார் நிலை யில் உள்ள மேலூர் துரைச்சாமியாபுரம், அயன் கொல் லங்கொண்டான், ஜமீன் நல்லமங்களம், கோவிலூர், முகவூர், கம்மாப்பட்டி, கீழகாஞ்சிராங்குளம் மற்றும் ஏ. முக்குளம் ஆகிய 8 இடங்களிலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட உள்ளன. குவிண்டால் ஒன்றுக்கு சன்ன ரகம் (ஜி.ஆர்.ஏ) ரூ.2545, பொது ரகத்திற்கு ரூ.2500ம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். எனவே, விவசாயிகள், அறுவடை செய்த நெல்லினை நேரடி கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்து பயனடையலாம். மேலும் விபரங்களுக்கு 04562 252607 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனவும் மாவட்ட நிர்வாகம் அறிவித்தள்ளது.

ஜன.26 -450 ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம்

விருதுநகர், ஜன.21- விருதுநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட 450 கிராம ஊராட்சிகளில் ஜன.26 குடியரசு தினத்தன்று கிராம சபைக் கூட்டங்களை நடத்திட வேண்டுமென மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், கிராம சபைக் கூட்டத்தில் ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம், தணிக்கை அறிக்கை, மக்கள் திட்டமிடல் இயக்கம் மூலம் 2026-27 ஆம் நிதியாண்டிற்கான கிராம வளர்ச்சித் திட்டத்திற்கு ஒப்புதல் பெறுதல், வரவு - செலவு திட்டப் பணிகள், தூய்மை பாரத இயக்க (ஊரகம்) திட்டம், ஜல் ஜீவன் திட்டம், சிறு பாசன ஏரிகள் புதுப்பித்தல் குறித்த விபரம், தொகுதி மேம்பாட்டுத் திட்டம் உள்ளிட் டவை விவாதிக்கப்படும். எனவே, இக்கூட்டத்தில் பொது மக்கள் கலந்து கொண்டு பயனடையலாம் என தெரிவித் துள்ளார்.

இராஜபாளையத்தில் ஒருவர் தற்கொலை

இராஜபாளையம், ஜன.21- இராஜபாளையம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சங்கிலி வாசன் (31). இவருக்கு அருணா தேவி (30) என்ற மனைவியும், 4 மற்றும் 2 வயதுகளில் இரண்டு மகள்களும் உள்ளனர். இந்நிலையில் கூலி வேலைக்கு சென்று விட்டு திரும்பிய அருணா தேவி, வீட்டில் மயங்கிய நிலையில் இருந்த கணவரை இராஜபாளையம் அரசு மருத்துவ மனைக்கு சென்று பரிசோதித்த போது அவர் அதிக அள வில் தூக்க மாத்திரை சாப்பிட்டு இருப்பது தெரிய வந்தது. பின்னர் அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயி ரிழந்தார். இதுகுறித்து அருணா தேவி கொடுத்த புகாரில் தனது கணவருக்கு நீண்ட நாட்களாக உடல்நிலை சரி யில்லாததால் மருத்துவம் பார்த்து வந்த நிலையில் நோயின் தன்மை தீவிரமடைந்ததால் தூக்க மாத்திரை சாப்பிட்டு மயங்கிய நிலையில் இருந்ததாக கூறியுள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொழில் நெறி வழிகாட்டும் கண்காட்சி - கருத்தரங்கம்

இராமநாதபுரம், ஜன.21- இராமநாதபுரம் வேலுமனோகரன் கலை மற்றும் அறி வியல் மகளிர் கல்லூரியில், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சார்பில் தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்க நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் சிம் ரன்ஜீத் சிங் காலோன் தலைமை தாங்கி, தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி அரங்கை திறந்து வைத்து பார்வை யிட்டார். மாணவிகள் எதிர்காலத்தில் தேர்வு செய்யக் கூடிய பல்வேறு தொழில் வாய்ப்புகள், வேலைவாய்ப்பு திட்டங்கள், பயிற்சி வாய்ப்புகள் குறித்து விரிவாக எடுத்து ரைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட வேலைவாய்ப்புத் துறை மண்டல இணை இயக்குநர் சே. திருமலைச்செல்வி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மதுக்குமார், கல்லூரி தாளாளர் வேலுமனோகரன், மாவட்ட குழந்தைகள் பாது காப்பு அலுவலர் சிவகுமார், வேலைவாய்ப்பு இளநிலை அலுவலர் மார்த்தாண்ட பூபதி உள்ளிட்ட அரசு அலு வலர்கள் மற்றும் கல்லூரி நிர்வாகிகள் கலந்து கொண்ட னர். மாணவிகளுக்கு பயனளிக்கும் வகையில் தொழில் நெறி தொடர்பான ஆலோசனைகள் வழங்கப்பட்டு, அவர் களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

மது விற்பனை: ஒருவர் கைது

இராஜபாளையம், ஜன.21- இராஜபாளையத்தை அடுத்த சுந்தரராஜபுரம் பகுதி யில் சேத்தூர் ஊரக காவல் நிலைய சார்பு ஆய்வாளர் முருகராஜ் போலீசாருடன் ரோந்து பணியில் ஈடுபட்டி ருந்தார். அப்போது அந்த பகுதியில் இரு சக்கர வாக னத்தில் சாக்கு மூட்டையுடன் நின்றிருந்த நபரை சந்தே கத்துடன் சோதனை செய்தபோது மூட்டையில் மது பாட் டில்கள் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவரை விசாரித்தபோது அவர் தேவதானத்தை அடுத்த பாரதி நகர் பகுதியைச் சேர்ந்த முருகன்(34) என்றும், டாஸ்மாக் கடையில் மது பாட்டில்கள் வாங்கி அதை அதிக விலைக்கு விற்பனை செய்து வந்ததாக தெரியவந்தது. இதனையடுத்து அவரிட மிருந்த 85 மது பாட்டில்கள் மற்றும் இரு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இராமநாதபுரத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

இராமநாதபுரம், ஜன.20– தமிழ்நாடு அரசு ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழி காட்டும் மையத்திலும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தி வருகிறது. இம்முகாமில் தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு, தங்கள் நிறுவனங்க ளுக்கு தேவையான வேலையாளர் தேர்வு செய்யலாம். முகாமில் 10-ம் வகுப்பு முதல் முது கலை பட்டம் வரை முடித்த வேலை நாடுநர்கள், ஐ.டி.ஐ மற்றும் டிப்ளமோ படித்தவர்கள் கலந்துகொண்டு தங்க ளது தகுதிக்கேற்ப வேலை வாய்ப்பினை பெறலாம். முகாமில் கலந்து கொள்ள விரும்பும் வேலைநாடுநர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வேலைநாடு நர்கள், 23.1.2026 வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு இராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத் திற்கு தங்களின் விண்ணப்பம், அனைத்து அசல் கல்விச்சான்றுகள், ஆதார் அட்டை, குடும்ப அடையாள அட்டை மற்றும் புகைப்படத்துடன் நேரில் வந்து கலந்துகொள்ள வேண்டும். இந்த முகாம் மூலம் தனியார் துறை நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெறுவது, அரசு வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்யப்படும் வாய்ப்பை பாதிக்காது. அரசு பணியிடங்களுக்கு பரிந்துரை செய்யப்படுவதேயும் இம்முகாமில் வழங்கப்படும் வாய்ப்பின் அடிப்படை யில் நிகழும். மேலும், தனியார்துறை நிறு வனங்கள் மற்றும் வேலைதேடும் இளைஞர்களுக்கு இம்முகாம் முற்றி லும் இலவசமாக நடைபெறும். இதற்காக “Tamil Nadu Private Job Portal” www.tnprivatejobs.tn.gov.in, http://www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதள சேவையும் வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சித்தலைவர் சிம் ரன்ஜீத் சிங் காலோன் இதுகுறித்த செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

த்துக்குடி சிவன் கோவிலில் ரீல்ஸ், செல்பி எடுக்கத் தடை

தூத்துக்குடி,ஜன.21- தூத்துக்குடி சிவன் கோவிலில் ரீல்ஸ், செல்பி எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி நகரின் மையத்தில் பழமையான ஸ்ரீ பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பக்தர்கள் லுங்கி, சார்ட்ஸ், நைட்டி போன்ற ஆடைகளை அணிந்து வர அனுமதி இல்லை. பிற மத அடையாள ஆடைகள் அணியக் கூடாது. கோவில் வளாகத்திற்குள் காலணிகள் அணியக் கூடாது. கோவில் வளாகத்தில் ரீல்ஸ், செல்ஃபி எடுப்பது மற்றும் செல்போன் பயன்படுத்துவதை தவிர்க்கவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜன.27 நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் பி.எப். குறைதீர் கூட்டம்

திருநெல்வேலி, ஜன. 21- நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் வருங்கால வைப்பு நிதி குறைதீர்க்கும் கூட்டம் வரும் 27ஆம் தேதி காலை நடைபெறவுள்ளது. இது குறித்து வருங்கால வைப்புநிதி ஆணையாளர் சிவசண்முகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியி ருப்பதாவது: வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (பி.எப்) மற்றும் தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகம் (இ.எஸ்.ஐ) சார்பில் ‘வருங்கால வைப்பு நிதியின் உங்கள் அருகில் 2.0 நிகழ்ச்சி’ நெல்லை, தென்காசி மற்றும் தூத்துக்குடியில் வரும் 27ஆம் தேதி காலை 9 மணிக்கு நடைபெறுகிறது. நெல்லை மாவட்டம், ஏர்வாடி தெற்கு மெயின் ரோடு, மாஸ்டர் ஹாலிலும், தென்காசி மாவட்டம், அடைக்கலப்பட்ட ணம் ராஜாநகர், சர்தார் ராஜா இன்ஜினியரிங் கல்லூரியிலும் நடக்கிறது. தூத்துக்குடி மாவட்டம், சாகுபுரம் தாரங்கதாரா கெமிக்கல் ஒர்க்ஸ் நிறுவ னத்தில் கூட்டம் நடக்கிறது. இதில் பி.எப்., மற்றும் இ.எஸ்.ஐ., உறுப்பினர்கள், ஓய்வூதியர்கள், தொழிலதிபர்கள், அங்கீ கரிக்கப்பட்ட தொழிற்சங்கங்கள், தொழில் நிறுவன அமைப்புகள் பங்கேற்று குறை களை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

ஜன.23 சங்கரன்கோவில் கோட்ட விவசாயிகள் குறைதீர் முகாம்

தென்காசி, ஜன.21- தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் வருவாய் கோட்டத்தில் 2026 ஜனவரி மாதத்திற்கான கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஜனவரி 23 வெள்ளியன்று காலை 11 மணியளவில் நடைபெறவுள்ளது. சங்கரன்கோவில் வருவாய் கோட்டா ட்சியர் தலைமையில் சங்கரன்கோவில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் வைத்து நடைபெற வுள்ளது. இக்கூட்டத்திற்கு சங்கரன்கோவில் வருவாய் கோட்டத்திற்குட்பட்ட விவசாயி கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு சங்கரன்கோவில் வருவாய் கோட்டாட்சியர் ஆ.அனிதா தெரிவித்துள்ளார்.

குழந்தைகள் பாதுகாப்புக்குழு கூராய்வுக்கூட்டம்

தென்காசி, ஜன.21- தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஜனவரி 21 அன்று தமிழ்நாடு மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவர் புதுக்கோட்டை விஜயா தலைமையில் மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்புக்குழு உறுப்பினர்களுக்கான கூராய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல்கிஷோர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.எஸ்.மாதவன், உறுப்பினர்கள் முனைவர்.வீ.உஷா நந்தினி, வழக்கறிஞர் ஜெயசுதா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் குழந்தைகள் நலனுக்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவர் புதுக்கோட்டை விஜயா ஆலோசனை மேற்கொண்டார் . தொடர்ந்து, போதைபொருள் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு பாடல் குறித்த குறுந்தகட்டினை (CD) தமிழ்நாடு மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவர், மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோர் வெளியிட்டனர்.

ரூ.1.57 லட்சம் மதிப்பில் புகையிலை பறிமுதல்

தூத்துக்குடி, ஜன.21- தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டலம் திரேஸ் புரம் பகுதியில் மாநகர நல அலுவலர் சரோஜா மற்றும் சுகாதார அலுவலர் ராஜ சேகரன் தலைமையில் சுகா தார ஆய்வாளர்கள் சோதனை நடத்தினர். இதில் புகையிலைப் பொருட்களை வீட்டில் பதுக்கி கடையில் விற்பனை செய்து வந்தது கண்டறியப்பட்டது. வடபா கம் காவல் துறை அதிகாரி கள் உதவியுடன் 45 கிலோ 1.57 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய் யப்பட்டு கடைக்கு சீல் வைக்கப்பட்டது.

கட்டுமானத் தொழிலாளர் குழந்தைகளுக்கு திறன் பயிற்சி

திருநெல்வேலி, ஜன.21- தமிழ்நாடு கட்டுமான தொழில்களில் ஈடுபட் டுள்ள தொழிலாளர்களின் நலனை பாதுகாக்கும் வகையில் கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியம் அரசால் ஏற்படுத்தப்பட்டு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு இணைய வழியில் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கும் திட்டம் செயல் படுத்தப்பட உள்ளது. பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, பாலிடெக்னிக், ஐடிஐ ஆகிய படிப் புகளை முடித்துள்ளவர்கள் மற்றும் நடப்பு கல்வி ஆண்டில் இந்த படிப்புகளை படித்து வருபவர்கள் இப்பயிற்சியில் சேரலாம். கட்டுமான தொழி லாளர்கள் நல வாரிய நிதி உதவியுடன் தமிழ்நாடு கட்டுமான கழகம் மூலம் இணைய வழியில் நடக்கும் இந்த பயிற்சி யில் 40 வகையான தொழில் நுட்ப நவீன பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்படும். இதில் ஏதேனும் ஒரு பிரிவை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். எனவே, நெல்லை மாவட்டத்தில் தமிழ் நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரி யத்தின் மூலம் உயர் கல்வி உதவி தொகை பெறும் அல்லது ஏற்கனவே உதவி தொகை பெற்ற, பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களின் குழந்தைகள் இப்பயிற்சியில் கலந்து கொண்டு தங்கள் திறனை மேம்படுத்தி வேலைவாய்ப்பு பெற்று பயனடையலாம். பயிற்சி தொடர்பான படிவத்தை பாளை திருமால் நகரில் உள்ள தொழிலாளர் உதவி ஆணை யர் அலுவல்கத்தை நேரில் அணுகி பெற்றுக் கொள்ளலாம் என்று உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட் டம்) மணிகண்ட பிரபு தெரிவித்தார்.

குப்பைகளை சாலையில் கொட்டி போராட்டம்

ஒட்டன்சத்திரம், ஜன.21- திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் தாலுகா, வடமதுரை ஒன்றியத்திற்கு உட்பட்ட சுக்காம்பட்டி கிராமம், எஸ்.புதுப்பட்டி பகுதி யில் சுமார் 700 குடும்பங்கள் வசித்து வரு கின்றன. இப்பகுதியில் ஊராட்சி மன்றத்தின் தூய்மைப் பணியாளர்கள் நாள்தோறும் வீடு வீடாகச் சென்று குப்பைகளை சேகரித்து, அந்தந்த தெருக்களில் ஒருங்கிணைத்து வைப்பர். சேகரிக்கப்பட்ட குப்பைகள் அரசால் வழங்கப்பட்ட பேட்டரி வாகனம் மூலம் சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள குப்பை கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டு வந்தன. இந்நிலையில் கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பு பேட்டரி வாகனம் பழுதடைந்ததாக கூறப்படுகிறது. இந்த பழுதை சீரமைக்க ரூ.5 ஆயிரம் செல வாகும் என தெரியவந்த நிலையில், ஊராட்சி மன்ற நிர்வாகத்திடம் போதிய நிதி இல்லா ததால், தூய்மைப் பணியாளர்களே சொந்த செலவில் வாகனத்தை சீரமைக்க வேண்டும் என ஊராட்சி செயலர் பெரியசாமி தெரிவித்த தாக கூறப்படுகிறது. இதனால் வீடு வீடாகச் சென்று சேகரித்த குப்பைகளை குப்பை கிடங்கிற்கு கொண்டு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனைக் கண்டித்து தூய்மை பணியாளர்கள் அனை வரும் தாங்கள் சேகரித்த குப்பைகளை அய்ய லூரிலிருந்து கடவூர் செல்லும் சாலையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் உடனடியாக தலையிட்டு, பேட்டரி வாகனத்தைசீரமைத்து தூய்மைப் பணியாளர்கள் பயன்படுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தூய்மைப் பணியாளர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பதிவுத்துறையின் இணையதளம் இன்று செயல்படாது பதிவுத்துறைத் தலைவர் தகவல்

தூத்துக்குடி, ஜன.21- பதிவுத் துறையின் இணையதளம் ஜனவரி 21 இரவு 7 மணியிலிருந்து ஜனவரி 22 காலை 11 மணி வரை கிடைக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பதிவுத்துறைத்தலைவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: “பதிவுத்துறையின் இணையதளம் https://tnreginet.gov.in பராமரிப்பு மற்றும் ஸ்டார் 3.0 திட்டத்திற்கு தரமேம்பாடு செய்யப்பட இருப்பதால் 21-01-2026 (புதன்கிழமை) இரவு 07 மணியிலிருந்து 22-01-2026 (வியாழக்கிழமை) காலை 11 மணிவரை பதிவுத்துறையின் இணையதளம்(Citizen Portal) செயல்படாது. இருப்பினும் மேற்கூறிய இரண்டு தினங்களிலும் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்க ளிலும் பதிவுப்பணிகள் வழக்கம் போல் செயல்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.