உலக வங்கி நிதியில் ரூ.14,000 கோடியை சுருட்டி பீகார் வாக்காளர்களுக்கு பணம் நிதிஷ் குமார் மீது ஜன் சுராஜ் கட்சி சரமாரி குற்றச்சாட்டு
16 Nov 2025, 3:30 pm
<p><strong>உலக வங்கி நிதியில் ரூ.14,000 கோடியை சுருட்டி பீகார் வாக்காளர்களுக்கு பணம் நிதிஷ் குமார் மீது ஜன் சுராஜ் கட்சி சரமாரி குற்றச்சாட்டு</strong></p>
<p>சமீபத்தில் நடந்து முடிந்த பீகார் சட்டமன்றத் தேர்த லில் நிதிஷ் குமார் தலைமை யிலான தேசிய ஜனநாயகக் கூட் டணி 202 தொகுதிகளில் (பாஜக 89, ஐக்கிய ஜனதா தளம் 85, லோக் ஜனசக்தி 19, இந்துஸ்தான் அவாம் 5 மற்றும் ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா 4) வெற்றி பெற்று ஆட்சியை கைப் பற்றியது. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றி மீது பல் வேறு சந்தேகங்கள் உள்ள நிலை யில், உலக வங்கி நிதியில் ரூ. 14,000 கோடியை சுருட்டி பீகார் வாக்காளர்களுக்கு நிதிஷ் குமார் பணம் கொடுத்ததாக பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி குற் றம்சாட்டியுள்ளது. ரூ.40,000 கோடி இதுதொடர்பாக அக்கட்சியின் தேசியத் தலைவர் உதய் சிங் செய்தியாளர்களிடம் பேசுகை யில், “தேர்தல் தேதி அறிவிக்கப் பட்டதிலிருந்து, நிதிஷ் குமார் அரசு மக்கள் பணத்தில் இருந்து சுமார் ரூ.40,000 கோடியை மக்களின் வாக்குகளை வாங்குவதற்காக வாரி இறைத்துள்ளது. இந்த முறைகேட்டின் அளவு இதற்கு முன் எப்போதும் இல்லாத வகையில் நடந்துள்ளது.</p>
<p>குறிப்பாக உலக வங்கியிடமிருந்து கடனாகப் பெற்ற ரூ.14,000 கோடியை இல வசங்களுக்காகவும், சலுகை களுக்காகவும் மடைமாற்றியுள்ள னர். முதலமைச்சர் மகளிர் வேலை வாய்ப்புத் திட்டம் என்ற பெயரில், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்தபோதும், வாக்குப்பதிவு நடப்பதற்கு முந்தைய நாள் வரை கூட பெண்களின் வங்கிக் கணக்கு களில் தலா ரூ.10,000 செலுத்தப் பட்டது” என அவர் குற்றம்சாட்டி யுள்ளார். ரூ.4.6 லட்சம் கோடி கடன் மேலும் ஜன் சுராஜ் கட்சியின் மற்றொரு மூத்த தலைவரான பவன் வர்மா,”பீகாரின் பொதுக்கடன் தற்போது ரூ.4.6 லட்சம் கோடியாக உள்ளது. அதாவது கஜானா காலி யாக இருக்கிறது. இத்தகைய சூழ லில் உலக வங்கியிடமிருந்து வேறு ஒரு திட்டத்திற்காகப் பெறப்பட்ட ரூ.21,000 கோடி நிதியிலிருந்து, தேர் தல் நடத்தை விதிகள் அமலுக்கு வருவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு, ரூ.14,000 கோடி எடுக்கப் பட்டு, மாநிலத்தில் உள்ள 1.25 கோடி பெண்களுக்கு விநியோகிக் கப்பட்டுள்ளது” என அவர் குறிப் பிட்டுள்ளார். ஜன் சுராஜ் கட்சியின் இந்த குற்றச்சாட்டு நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.</p>
