தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஜன.17 இமானுவேல் சேகரன் மணிமண்டபம் திறப்பு விழா: முதல்வர் பங்கேற்கிறார்

11 Jan 2026, 2:59 pm
ஜன.17 இமானுவேல் சேகரன் மணிமண்டபம் திறப்பு விழா: முதல்வர் பங்கேற்கிறார்
<p><strong>ஜன.17 இமானுவேல் சேகரன் மணிமண்டபம் திறப்பு விழா: முதல்வர் பங்கேற்கிறார்</strong></p> <p>சென்னை, ஜன.11 - இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி நகராட்சி சந்தை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தியாகி இமானுவேல் சேகரன் உருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபத்தை ஜன.17 அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். கடந்த 2023 செப். 11 ஆம் தேதி, தியாகி இமானுவேல் சேகரனின் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவையொட்டி ரூ.3 கோடி மதிப்பீட்டில் உருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்க முதலமைச்சர் உத்தரவிட்டார். இந்த விழா அரசு விழாவாக கொண்டாடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. அதன்படி தொடங்கப்பட்ட கட்டுமானப் பணிகள் தற்போது முழுமையாக நிறைவடைந்துள்ளன. மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஜன.17 ஆம் தேதி பரமக்குடிக்கு நேரில் வந்து, இமானுவேல் சேகரன் சிலையுடன் கூடிய மணிமண்டபத்தை அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்க உள்ளார். இதுகுறித்து அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறுகையில், &ldquo;முதல்வர் உத்தரவின்படி பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரனுக்கு உருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. அதனைத் திறப்பதற்காக ஜனவரி 17 ஆம் தேதி முதலமைச்சர் பரமக்குடி வர உள்ளார். அவருக்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் திமுக சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன&rdquo; என்றார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.