வட இந்தியாவில் தொழிலாளர் வர்க்கத்தின் போர்க்குணமிக்க எழுச்சி டாடா தொழில் சாம்ராஜ்யத்தை உலுக்கும் தொழிலாளர் கொந்தளிப்பு
15 May 2026, 10:31 pm

வட இந்தியாவில் தொழிலாளர் வர்க்கத்தின் போர்க்குணமிக்க எழுச்சி டாடா தொழில் சாம்ராஜ்யத்தை உலுக்கும் தொழிலாளர் கொந்தளிப்பு

ஜாம்ஷெட்பூரில் ஒப்பந்தத் தொழிலாளர்களின் எழுச்சி!

வேலைநிறுத்தம் 17

ஜாம்ஷெட்பூர், மே 15 - இந்தியாவின் ‘மாதிரி தொழில் நகரம்’ என்று வர்ணிக்கப்படும் ஜாம்ஷெட்பூர், நீண்டகாலமாக டாடா ஸ்டீல் நிறு வனத்தின் ‘தொழில் அமைதி’ என்ற பிம்பத் தின் நிழலில் இருந்து வந்தது. ஆனால், 2026-ஆம் ஆண்டில் அந்தப் பிம்பம் உடைந்து சிதறியுள்ளது.

நிரந்தரத் தொழிலாளர்களின் மௌ னத்திற்கு மாறாக, ஆலை வாயில்களிலும், ஒப்பந்தக்காரர்களின் முற்றங்களிலும் தங்களின் உரிமை களுக்காகப் போர்க்கொடி தூக்கியுள்ள ஒப்பந்தத் தொழிலாளர்கள், ஜாம்ஷெட்பூ ரின் புதிய வரலாற்றை எழுதத் தொடங்கி யுள்ளனர். இத்தொடரின் 17-ஆவது பகுதி யில், டாடாவின் தொழில் மண்டலத்தில் ஏற்பட்டுள்ள விரிசல்களை விரிவாகக் காண்போம்.

ஜாம்ஷெட்பூர் தொழில் மண்டலத்தில் நிலக்கரி மற்றும் இரும்புத் தாது சுரங்கங்கள் முதல் எஃகு ஆலைகள் வரை நீண்டுள்ள டாடாவின் சாம்ராஜ்யம், முன்னெப்போதும் இல்லாத வகையில் தொழிலாளர் போராட்டங்களைச் சந்தித்து வருகிறது.

குறிப்பாக ஒப்பந்தத் தொழிலாளர்கள், பயிற்சித் தொழிலாளர்கள் மற்றும் தற்காலிகப் பணியாளர்கள் தங்களின் வேலை பாதுகாப்பு மற்றும் ஊதிய உயர்வுக்காகத் திரண்டு நிற்கின்றனர்.

ஜாம்ஷெட்பூர் தொழில் மண்டலத்தின் கட்டமைப்பு

இந்தியாவின் பழமையான மற்றும் மிகப்பெரிய எஃகு உற்பத்தி நிலையமான டாடா ஸ்டீல் இங்கு சுமார் 45,000 தொழி லாளர்களைக் கொண்டுள்ளது. இதில் 55% முதல் 60% வரை ஒப்பந்தத் தொழி லாளர்களே ஆவர். இது தவிர டாடா மோட்டார்ஸ் (7,500 தொழிலாளர்கள்), டாடா பவர் ஜோஜோபெரா ஆலை (1,700 தொழிலாளர்கள்) மற்றும் கம்ஹாரியா ஆலை என இந்த மண்டலம் பரந்து விரிந்துள்ளது. இந்த அலகுகள் அனைத்தி லும் ஒப்பந்தத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 60% முதல் 80% வரை என்பது குறிப்பிடத்தக்கது.

பிப்ரவரி 12 : தேசிய வேலைநிறுத்தமும் அதன் தாக்கமும்

புதிய தொழிலாளர் சட்டங்களுக்கு எதிராக பிப்ரவரி 12-இல் நடைபெற்ற தேசிய வேலைநிறுத்தம், ஜாம்ஷெட்பூர் தொழிலாளர்கள் மத்தியில் ஒரு வினையூக்கியாகச் செயல்பட்டது. டாடா ஸ்டீலின் பிரதான ஆலைத் தொழிற்சங்கமான ‘டாடா ஒர்க்கர்ஸ் யூனியன்’ வேலைநிறுத்தத்தில் ஈடுபடாத தனது நீண்டகால ‘மரபைப்’ பின்பற்றிய போதிலும், டாடா பவர் மற்றும் பிற அலகுகளில் உள்ள ஒப்பந்தத் தொழிலாளர்கள் பெருமளவில் திரண்டு போராட்டத்தில் குதித்தனர்.

டாடா ஸ்டீல் டியூப் டிவிஷன் (Tube Division) போராட்டம்

மார்ச் மாத தொடக்கத்தில், டியூப் டிவிஷன் பிரிவில் ஒப்பந்ததாரர் மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, பல ஆண்டுகளாகப் பணியாற்றிய சுமார் 40 தூய்மைப் பணியாளர்கள் மற்றும் ஹவுஸ் கீப்பிங் பிரிவு தொழிலாளர்கள் வேலையிலிருந்து நீக்கப்பட்டனர். இதற்கு எதிராகத் தொழிலாளர்கள் நடத்திய தொடர் முற்றுகைப் போராட்டத்தின் விளைவாக, நிர்வாகம் இறங்கி வந்து அவர்களை மீண்டும் பணியில் அமர்த்தியது. இது ஜாம்ஷெட்பூர் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்குக் கிடைத்த ஒரு குறிப்பிடத்தக்க வெற்றியாகும்.

கம்ஹாரியா மற்றும் டின்பிளேட் பிரிவு கிளர்ச்சி

• கம்ஹாரியா ஆலை: இங்கு பணிபுரியும் 160 ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு மூன்று மாதங்களுக்கும் மேலாக ஊதியம் வழங்கப்படாததை எதிர்த்து அவர்கள் டிசம்பர் 31 முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். ‘ஆர்கே என்டர்பிரைசஸ்’ என்ற ஒப்பந்த நிறுவனத்திற்கு எதிராகத் தொடங்கிய இந்தப் போராட்டம், டாடாவின் மேற்பார்வையில் பேச்சு வார்த்தைகள் மூலம் தற்காலிகமாகச் சீரமைக்கப்பட்டது.

• டின்பிளேட் டிவிஷன்: மே 4 அன்று, 25 ஆண்டுகளாகப் பணியாற்றிய 16 நர்சரிப் பிரிவு தொழிலாளர்களை வேலையிலிருந்து நீக்கியதற்கு எதிராக ஏஐடியுசி தலைமையில் போராட்டம் வெடித்தது. இறுதித் தீர்வுத் தொகை வழங்கப்படாதது மற்றும் பழிவாங்கும் நடவடிக்கை ஆகியவற்றை எதிர்த்துத் தொழிலாளர்கள் இன்றும் களத்தில் உள்ளனர். டாடா மோட்டார்ஸ் மற்றும் டாடா பவர் - மாறுபட்ட சூழல்

• டாடா மோட்டார்ஸ்: ஏப்ரல் மாதத்தில் பயிற்சித் தொழிலாளர்களை (Apprentices) பணி நிரந்தரம் செய்யக் கோரியும், தொழிற்சங்கத் தேர்தலை வெளிப்படையாக நடத்தக் கோரியும் 30 மணி நேரத் தொடர் போராட்டம் வாயிலில் நடைபெற்றது. தொழிலாளர் ஆணை யரின் உறுதிமொழியைத் தொடர்ந்து இது தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது.

• டாடா பவர்: இங்குள்ள 80% ஒப்பந்தத் தொழிலாளர்கள் ஏஐடியுசி தலைமையில் வலுவாக அணிதிரண்டுள்ளனர். வருங்கால வைப்பு நிதி, காப்பீடு மற்றும் முறையான ஊதியப் பட்டியல் கோரி பிப்ரவரி முதல் அவர்கள் நடத்தி வரும் போராட்டங்கள் இன்னும் ஒரு தீர்க்கமான முடிவை எட்டவில்லை.

ஜாம்ஷெட்பூரின் பழைய ‘அமைதி யான’ சூழல் இன்று மாறியுள்ளது. ஒப்பந்தத் தொழிலாளர்களின் உரிமைகள் நசுக்கப்படும்போது, அந்த அமைதி என்பது வெறும் மாயையே என்பதை 2026-ன் போராட்டங்கள் நிரூபித்துள்ளன. தொழிலாளர் சட்டங்கள் நீர்த்துப்போகச் செய்யப்படும் சூழலில், ஜாம்ஷெட்பூர் தொழிலாளர்களின் இந்தப் போராட்டம் ஒரு புதிய வர்க்கப் போராட்டத்தின் தொடக்கமாகவே பார்க்கப்படுகிறது. லெப்ட் வியூஸ்