தீக்கதிர் விரைவு செய்திகள்
7 May 2026, 8:42 pm

ஜம்மு-காஷ்மீரில் பள்ளியை மூடி மாணவர்களை மிரட்டும் இந்துத்துவா குண்டர்கள்

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதே சத்தின் சோபியானில் உள்ளது ‘தாருல் உலூம் ஜாமியா சிராஜ்-உல்-உலூம்’ கல்வி நிறுவனம். இது முஸ்லிம் அமைப்புகளுக்கு சொந்த மானது ஆகும். இந்த கல்வி நிறுவனம் ‘சட்டவிரோத அமைப்பு’ என பாஜக - ஆர்எஸ்எஸ் கும்பலின் அறிவுறுத்தலின் பேரில், காஷ்மீர் கோட்ட ஆணையர் ஏப்ரல் 24 அன்று அறிவித்தார்.

ஒரு கல்வி நிறுவனம் எப்படி ‘சட்ட விரோத அமைப்பு’ என்று கூறலாம் என அப்பள்ளியில் பயிலும் மாணவர்கள், ஆசிரியர்கள் அமைதியான முறையில் கடந்த 2 வாரமாக கடும் குளிரிலும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரு கின்றனர். குறிப்பாக வியாழனன்று மாண வர்கள், ஆசிரியர்கள் கல்வி நிறுவனத்தி லிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை ஊர்வலமாகச் சென்றனர்.

இந்த ஊர்வலத்தின் போது,”எங்கள் எதிர்காலத்தைக் காப்பாற்றுங்கள்”, “எங்கள் பள்ளியைத் திறங்கள்” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியிருந்தனர். மேலும்,”கல்வி எமது அடிப்படை உரிமை” என்ற முழக்கங்க ளையும் எழுப்பினர். மாணவர்களின் போராட்டத்திற்கு பொதுமக்கள் ஆதரவு தெரிவித்துள்ளதால், அங்கு போராட்டம் தீவிரமடைய வாய்ப்புள்ளது. ஆனால் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடு பட்டால் நாங்களும் போராடுவோம் என ஆர்எஸ்எஸ் - பாஜக கும்பல் மிரட்டல் விடுத்துள்ளது. இதனால் காஷ்மீரில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

சரிவுடன் முடிந்த பங்குச் சந்தை சென்செக்ஸ் 114 புள்ளிகள் வீழ்ச்சி

வெளிநாட்டு முதலீடுகளின் வெளியேற்றம், உலக ளாவிய அரசியல் பதற்றங் கள் காரணமாக முதலீட்டாளர்கள் எச்ச ரிக்கையுடன் செயல்பட்டதால், வியாழ னன்று இந்திய பங்குச் சந்தைகள் சரிவுடன் முடிவடைந்தன. மும்பை பங்குச் சந்தை யின் பிஎஸ்இ சென்செக்ஸ் நாள் முழுவதும் கடும் ஏற்ற இறக்கங்களைச் சந்தித்தது. இறுதியில் சென்செக்ஸ் 114 புள்ளிகள் (0.15%) சரிந்து 77,844.52 புள்ளிகளில் நிலைபெற்றது. ஒரு கட்டத்தில் 78,384.70 புள்ளிகள் வரை உயர்ந்த சென்செக்ஸ், குறைந்தபட்சமாக 77,713.21 புள்ளிகள் வரை சென்றது. இது பலத்த அடியாக பார்க்கப்படுகிறது. அதே போல தேசிய பங்குச் சந்தையில் என்எஸ்இ நிப்டி 4.30 புள்ளிகள் (0.02%) சிறிதளவு சரிந்து, 24,326.65 புள்ளிகளில் நிறைவடைந்தது.

சரிவுக்கு காரணங்கள்

புதனன்று மட்டும் வெளிநாட்டு நிறு வன முதலீட்டாளர்கள் சுமார் ரூ.5,834.90 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்று இந்தியாவை விட்டு வெளியேறியுள்ள னர். இதுதான் வியாழனன்று பங்குச் சந்தையில் கடும் சேதாரத்தை ஏற்படுத்தி யுள்ளது.