தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஜம்மு-காஷ்மீரில் நீடிக்கும் கனமழை, நிலச்சரிவு பலி எண்ணிக்கை 18ஆக உயர்வு ; பலர் மாயம்

20 Jul 2026, 9:46 pm
ஜம்மு-காஷ்மீரில் நீடிக்கும் கனமழை, நிலச்சரிவு பலி எண்ணிக்கை 18ஆக உயர்வு ; பலர் மாயம்
<p><strong>ஜம்மு-காஷ்மீரில் நீடிக்கும் கனமழை, நிலச்சரிவு பலி எண்ணிக்கை 18ஆக உயர்வு ; பலர் மாயம்</strong></p><p>ஜம்மு ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் ஞாயிற்றுக் கிழமை முதல் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த கனமழையால் ஜம்மு-கிஸ்த்வார் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ராகி நாலா (டோடா மாவட்டம்), காஷ்டிகார், ரஜோரி மாவட்டத்தின் சலானி ஆற்றங்கரை பகுதிகள், பூஞ்ச் உள்ளிட்ட பகுதிகள் உருக் குலைந்தன. குறிப்பாக இப்பகுதிக ளில் கடந்த 2 நாட்களாக நீடித்து வரும் கனமழை மற்றும் நிலச்சரி வில் சிக்கி உயிரிழந்தோர் எண் ணிக்கை 18ஆக உயர்ந்துள்ளது. ரஜோரி, பூஞ்ச் மாவட்டங்களில் தான் அதிக உயிரிழப்பு ஏற்பட்டுள் ளது. மேலும் டோடா மற்றும் ரஜோரி மாவட்டங்களில் 7க்கும் மேற் பட்டோர் காணாமல் போயுள்ள தால், பலி எண்ணிக்கை அதிகரிக் கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 23ஆம் தேதி வரை கனமழை ஞாயிறு, திங்களன்று பெய்த கனமழையால் ஜம்மு-காஷ்மீரின் பெரும்பாலான பகுதிகள் இயல்பு நிலையை இழந்துள்ள சூழலில், கனமழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பான அறிக்கையில், “ஜம்மு-காஷ்மீரில் ஜூலை 23ஆம் தேதி வரை கனமழை நீடிக்கும். ஜம்மு, கதுவா, ரஜோரி, பூஞ்ச், ரியாசி, சம்பா மற்றும் உதம்பூர் ஆகிய மாவட்டங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்புள்ளது. மீண்டும் திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதால், தாழ் வான பகுதிகளில் வசிப்பவர்கள் மற்றும் நீர்நிலைகளுக்கு அருகில் வசிப்பவர்கள் மிகுந்த எச்சரிக் கையுடன் இருக்க வேண்டும். அவ சியமின்றிப் பயணம் செய்வதைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப் பட்டுள்ளது” என அதில் கூறப்பட் டுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.