முந்தய பக்கம்

தீக்கதிர் முக்கிய செய்திகள்

19 Jul 2026, 9:15 pm
தீக்கதிர் முக்கிய செய்திகள்

தேசிய மாநாட்டுக் கட்சி

ஜம்மு-காஷ்மீரில் பெய்து வரும் தொடர் கனமழை, வெள்ளப்பெருக்கினால் பல பகுதிகளில் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்த இயற்கை பேரிடரில் சுமார் 10 பேர் உயிரிழந்திருக்கலாம். அதனால் அமர்நாத் உள்ளிட்ட யாத்திரை அனுமதிக்கு தடை விதிக்கக் கோரினோம். ஆனால் ஆளுநரும், ஒன்றிய அரசும் அலட்சியமாக உள்ளன.

பிஜு ஜனதாதள தலைவர் நவீன் பட்நாயக்

தேர்வு முறைகளில் சீர்திருத்தங்களைக் கொண்டு வர வேண்டும். அதே போல கல்வி அமைப்பின் மீது மாணவர்களுக்கு மீண்டும் நம்பிக்கையை ஏற்படுத்த, அமைதியான முறையில் போராடி வரும் மாணவர்களுடன் ஒன்றிய அரசு உடனடியாகப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இல்லையென்றால் நிலைமை மோசமாகலாம்.

அமெரிக்க மாடல் கேரி போலர்

இஸ்ரேலின் நட்பு நாடாக அமெரிக்கா இருக்கலாம். டிரம்ப், நேதன்யாகுவின் நெருங்கிய நண்பராக இருக்கலாம். ஆனால் அமெரிக்காவின் நியூயார்க் என்ற மாகாணமே டிரம்ப் - நேதன்யாகுவிற்கு எதிராக களமிறங்கியுள்ளது. நியூயார்க் மேயர் மம்தானி, நேதன்யாகுவை கைது செய்ய முடியாதுதான். ஆனால் அதற்காக ஆலோசனை செய்ய தைரியம் வேண்டும்.

நாகா மாணவர்கள் முன்னணி

அரசுக்கு எதிரான போராடங்களை நீதிமன்றம் மூலம் ஒடுக்க பாஜக - ஆர்எஸ்எஸ் கும்பல் வழக்கறிஞர்களை மிரட்டுகிறது. அதாவது பாஜக - ஆர்எஸ்எஸ் வழக்கறிஞர்கள் மூலம் வழக்கு தொடர்ந்தால் உண்மை தெரிந்துவிடும் என்பதால், மற்ற வழக்கறிஞர்களை வழக்கு தொடுக்க ஒன்றிய அரசு நெருக்கடி அளித்து வருகிறது. இதற்கு சோனம் வழக்கு சாட்சி.

Share
FacebookXWhatsAppTelegram