விளையாட்டு
2 Jan 2026, 3:33 pm

பாலஸ்தீன கொடியுடன் விளையாடியதால் கிரிக்கெட் வீரர் மீது வழக்கு ஜம்மு - காஷ்மீர் காவல்துறை அடாவடி

ஜம்மு-காஷ்மீர் சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் தொடரின் ஒரு போட்டியில் கிரிக்கெட் வீரர் ஒரு வர் தனது ஹெல்மெட்டில் பாலஸ்தீன கொடியை பயன்படுத்தினார். புத னன்று நடைபெற்ற ஜம்மு டிரெயில் பிளேசர்ஸ் அணிக்கு எதிரான போட்டி யில் ஜம்மு-காஷ்மீர் 11 அணி வீரர் பர்ஹான் பட் பேட்டிங் செய்யும் போது பாலஸ்தீன கொடியுடன் அவர் விளை யாடினார். இதனையடுத்து மோடி அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஜம்மு-காஷ்மீர் காவல்துறை பாலஸ்தீன கொடி யுடன் கூடிய ஹெல்மெட்டை பயன் படுத்திய பர்ஹான் பட், ஜம்மு-காஷ்மீர் சாம்பியன்ஸ் லீக் அமைப்பாளர் ஜாஹித் பட், மைதான உரிமையாளர் ஆகியோரை விசாரணைக்கு அழைத்தது. விசாரணைக்குப் பின் பர்ஹான் பட் மீது பிஎன்எஸ்எஸ் பிரிவு 173(3)-இன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவரை விசாரணை வளையத்தில் வைத்துள்ளது ஜம்மு - காஷ்மீர் காவல்துறை. பாலஸ்தீன கொடியை பயன்படுத்தினால் குற்றவாளியா? இந்த லீக் போட்டிகள் தங்களால் நடத்தப்படவில்லை. பர்ஹான் பட் என்ற வீரர் எங்களுடைய சங்கத்தைச் சேர்ந்தவர் கிடையாது. அதனால் இந்த பிரச்சனைக் கும் ஜம்மு-காஷ்மீர் கிரிக்கெட் சங்கத்திற்கும் எந்த சம்மந்தமும் கிடையாது என ஜம்மு-காஷ்மீர் கிரிக்கெட் சங்கம் கூறியுள்ளது. இது அதிகாரப்பூர்வமற்ற போட்டி கிடையாது. சாதாரண உள்ளூர் போட்டி தான். பாலஸ்தீனத்திற்கு ஆத ரவாக அந்நாட்டின் கொடியை பயன் படுத்தியதில் என்ன தவறு? அவரை குற்றவாளியைப் போலவோ, பயங்கரவாதியைப் போன்றோ சித்தரித்தது தவறு என சமூகவலைத் தளங்களில் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஆஸி., வீரர் உஸ்மான் கவாஜா ஓய்வு

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்டர் உஸ்மான் கவாஜா, ஆஷஸ் தொடரோடு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணி களுக்கு இடையிலான ஆஷஸ் தொடரின் 5ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னி (ஆஸ்திரேலியா) கிரிக்கெட் மைதானத்தில் ஜனவரி 4ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த டெஸ்ட் போட்டியுடன் கவாஜா ஓய்வு பெற உள்ளார். இதுகுறித்து பேசிய கவாஜா,”சிட்னி டெஸ்ட் போட்டிக்குப் பிறகு அனைத்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் நான் ஓய்வு பெறுகிறேன். எந்தவொரு தொழிலும் ஒரு தனிப்பட்ட நபருக்கு மட்டும் சொந்தமானதல்ல. வெளிப்படையாக கூற வேண்டும் எனில் நான் இந்த இடத்திற்கு வர, எனக்குப் பலரின் உதவி கிடைத்தது. இதற்காக முதலில் நான் எனது பெற்றோர்களுக்கு நன்றி கூறிக் கொள்கிறேன்” என அவர் கூறினார். பாகிஸ்தானை பூர்வீகமாகக் கொண்ட உஸ்மான் கவாஜா, ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடிய முதல் இஸ்லாமிய வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். அதன்படி, 2011ஆம் ஆண்டு அறிமுகமான அவர் இதுவரை ஆஸ்திரேலிய அணிக்காக 87 டெஸ்ட் போட்டி களில் 16 சதங்கள், 28 அரைசதங்களுடன் 6206 ரன்கள் குவித்துள்ளார். இதுதவிர, அவர் 40 ஒருநாள் (1,554 ரன்கள்) போட்டிகளிலும், 9 டி-20 (241 ரன்கள்) போட்டிகளிலும் ஆஸ்திரேலியாவுக்காக விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் ஸ்ஜோர்ட் மரிஜ்னே

இந்திய மகளிர் ஹாக்கி அணியின் தலைமை பயிற்சியாளராக ஸ்ஜோர்ட் மரிஜ்னே (நெதர்லாந்து) மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளதாக ஹாக்கி இந்தியா வெள்ளியன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் துணை பயிற்சியாளர்கள் டாக்டர் வெய்ன் லோம்பார்ட் மற்றும் மாடியாஸ் விலா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஸ்ஜோர்ட் ஜனவரி 14ஆம் தேதி இந்தியா வரவுள்ள நிலையில், தேசிய பயிற்சி முகாமில் ஜனவரி 19ஆம் தேதி (பெங்களூருவில் உள்ள சாய்) இந்திய மகளிர் ஹாக்கி அணியின் பயிற்சியை தொடங்குவார் என செய்திகள் வெளியாகியுள்ளன.