தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஜாமியா பல்கலை. சுற்றியுள்ள பகுதிகளில் பி.என்.எஸ் 163 தடை உத்தரவு அமல்!

yesterday
ஜாமியா பல்கலை. சுற்றியுள்ள பகுதிகளில் பி.என்.எஸ் 163 தடை உத்தரவு அமல்!

ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக வளாகத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில், ஐந்து அல்லது அதற்கு மேற்பட்டோர் ஒன்றுகூடத் தடை விதிக்கும் பி.என்.எஸ் சட்டத்தின் 163-ஆவது பிரிவை தில்லி காவல்துறை அமல்படுத்தியுள்ளது.

தில்லி ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் 2006ஆம் ஆண்டுக்குப் பிறகு மாணவர் சங்கத் தேர்தல் நடைபெறவில்லை. மாணவர் சங்கத்தை மீண்டும் அமைத்து ஜனநாயக அடிப்படையில் மாணவர் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தி, அக்டோபர் 11-ஆம் தேதி முதல் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மாணவர் சங்க தேர்தல் நடத்துவதற்கான தேதி அறிவிக்க வேண்டும், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகளைத் திரும்பப் பெற வேண்டும், போராட்டத்தின்போது பல்கலைக்கழக பாதுகாப்புப் பணியாளர்கள் நடந்துகொண்ட விதம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் ஆகியவை மாணவர்களின் முக்கியக் கோரிக்கைகளாக இருந்தன. இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்கள் உண்ணாநிலை போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இதை தொடர்ந்து கடந்த அக். 26-ஆம் தேதி, பல்கலைக்கழகத்தில் மாணவர் சங்கத்தை மீண்டும் அமைக்க நிர்வாகம் ஒப்புக்கொண்டது.

மாணவர் சங்கத்திற்கான அமைப்புச் சட்டத்திற்கு ஒப்புதல் கிடைத்த 15 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்படும் என்றும், போராட்டத்தின் போது மாணவர்களுக்குப் பிறப்பிக்கப்பட்ட இடைநீக்க உத்தரவுகள் மற்றும் விளக்கம் கோரும் நோட்டீஸ்கள் ரத்து செய்யப்படும் என்றும் நிர்வாகம் அறிவித்துள்ளது.

எனினும் சங்கம் அமைப்புச் சட்டம், எப்போது ஒப்புதல் அளிக்கப்படும் என்பது குறித்து நிர்வாகம் குறிப்பிட்ட காலக்கெடுவை அறிவிக்கவில்லை. இதனால் தேர்தல் நடைபெறும் தேதியும் இன்னும் உறுதியாகவில்லை. பல்கலைக்கழகத் துணைவேந்தர் மற்றும் தலைமைப் புலக் கண்காணிப்பாளர் (Chief Proctor) பதவி விலக வேண்டும் என்ற மாணவர்களின் கோரிக்கையும் உத்தரவில் இடம்பெறவில்லை என மாணவர்கள் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், நேற்று ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக வளாகத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில், ஐந்து அல்லது அதற்கு மேற்பட்டோர் ஒன்றுகூடத் தடை விதிக்கும் பி.என்.எஸ் சட்டத்தின் 163-ஆவது பிரிவை தில்லி காவல்துறை அமல்படுத்தியுள்ளது.

மாணவர்களின் தொடர் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.