ஜம்புக்கல் மலை அழிப்பு: இன்று போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை
21 Dec 2025, 3:21 pm
<p><strong>ஜம்புக்கல் மலை அழிப்பு: இன்று போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை</strong></p>
<p>உடுமலை, டிச.21- ஜம்புக்கல் மலை அழிப்பை கண்டித்து 12 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுடன் திங்க ளன்று (இன்று) பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. உடுமலை அருகே அரசுக்கு சொந்தமான ஜம்புக்கல் மலைப்பகுதியில் தனி நபர் ஆக்கிரமிப்பு செய்து, இயற்கை வளங்களை கனரக இயந்திரங்களைக் கொண்டு அழித்து வரு வதை தடுக்க 12 ஆவது நாளாக விவசாயிகளின் காத்தி ருப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் போராட்டம் நடத்தும் விவசாயிகளிடம், காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தை யின்படி, திங்களன்று (இன்று) உடுமலை வருவாய் கோட்டாச் சியர் அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடை பெறவுள்ளது. இதுகுறித்து சமுக ஆர்வலர்கள் கூறுகை யில், அரசுக்கு சொந்தமான ஜம்புக்கல் மலையை போலி யான ஆவணங்கள் மூலம் ஆக்கிரமிப்பு செய்துள்ள தாக, கடந்த ஐந்து வருடங்களாக அனைத்துத்துறை அதிகாரி களுக்கு புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. நடவடிக்கை எடுக்க தவறியவர்கள் மீதும் நடவ டிக்கை தேவை என்ற கோரிக்கைக்காக போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு, இன்று நடைபெறும் பேச்சுவார்த்தையில் கிடைக்கும் நியாயம் அனைவருக்குமானது, என்றனர்.</p>
