தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கைக்காட்டி, கூலமேட்டில் ஜல்லிக்கட்டு: சீறிப்பாய்ந்த காளைகள்!

18 Jan 2026, 4:50 pm
கைக்காட்டி, கூலமேட்டில் ஜல்லிக்கட்டு: சீறிப்பாய்ந்த காளைகள்!
<p><strong>கைக்காட்டி, கூலமேட்டில் ஜல்லிக்கட்டு: சீறிப்பாய்ந்த காளைகள்!</strong></p> <p>சேலம், ஜன.18- கைக்காட்டி மற்றும் கூல மேட்டில் ஞாயிறன்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து &nbsp;கொண்டு சீறிப்பாய்ந்த காளை களை, வீரர்கள் போட்டிப்போட்டு அடக்கினர். சேலம் மாவட்டம், ஆத்தூர் &nbsp;வட்டம், கூலமேடு ஜல்லிக்கட்டு போட்டி ஞாயிறன்று நடைபெற் றது. மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ரவிக்குமார் தலைமை வகித் தார். மாநிலங்களவை உறுப்பினர் &nbsp;எஸ்.ஆர்.சிவலிங்கம், கள்ளக் குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தே.மலையரசன் ஆகியோர் இப் போட்டியினை துவக்கி வைத்த னர். இப்போட்டியில் பல்வேறு பகுதிகளிலிருந்து 550 காளைகள் மற்றும் 400 மாடுபிடி வீரர்கள் பங் கேற்றனர். மாடுபிடி வீரர்கள் மற்றும் &nbsp;காளைகளுக்கு மருத்துவப் பரி சோதனை மேற்கொண்ட பின்னரே போட்டியில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டது. முன்னதாக, ஜல்லிக்கட்டு போட்டியில் அரசு விதிமுறைகள் குறித்து பின்பற்ற வேண்டிய உறுதிமொழியினை மாடுபிடி வீரர்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டனர். இந்நிகழ்ச்சி யில், ஆத்தூர் வருவாய் கோட் டாட்சியர் தமிழ்மணி, கால்நடை பரா மரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் மரு அரங்க பிரகாசம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். நாமக்கல் நாமக்கல் மாவட்டம், எருமப் பட்டி அருகே கைக்காட்டியில் நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் ஜல்லிக்கட்டு ஞாயிறன்று நடைபெற்றது. மாவட்டத்தில் இந் தாண்டு நடைபெறும் முதல் ஜல்லிக் கட்டு போட்டியினை நாமக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளர் ராஜேஷ்குமார் எம்.பி., தொடங்கி &nbsp;வைத்தார். இப்போட்டிகளில் நாமக் கல், மதுரை, புதுக்கோட்டை, அரிய லூர், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 600க்கும் மேற்பட்ட காளைகளும், 300 மாடு பிடி வீரர்களும் கலந்து கொண்ட னர். மாடுபிடி வீரர்கள் சுழற்சி முறை யில் போட்டியில் பங்கேற்றனர். வாடிவாசல் வழியாக ஒவ்வொன் றாக அவிழ்த்து விடப்படும் மாடு களின் திமில்களை பிடித்து அடக் கும் மாடுபிடி வீரர்களுக்கும், பிடிப் படாத காளைகளின் உரிமையாளர் களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், எந்தவித அசம்பாவித சம்ப வங்களும் நடைபெறாமல் இருக்க &nbsp;நாமக்கல் கூடுதல் காவல் கண் காணிப்பாளர் ஆகாஷ் ஜோஷி தலைமையில் 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடு பட்டனர். இப்போட்டியை சுற்று வட்டாரப் பகுதியை சேர்ந்த திரளான &nbsp;பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.