ஜல்லிக்கட்டுப் போட்டி
15 Feb 2026, 3:03 pm
<p><strong>ஜல்லிக்கட்டுப் போட்டி</strong></p>
<p>சேலம், பிப்.15- நிலவாரப்பட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி யினை சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.இராஜேந்திரன் தொடங்கி வைத்தார். சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றியம், நிலவாரப்பட்டியில் ஞாயிறன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் இரா.பிருந்தாதேவி தலைமையில், சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.இரா ஜேந்திரன் போட்டியை தொடங்கி வைத்தார். இப்போட்டியில் பல்வேறு பகுதிகளில் இருந்து 600 காளைகள் மற்றும் 350 மாடுபிடி வீரர்கள் பங்கேற்கின்றனர். ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கு மருத்துவப் பரிசோதனை மேற் கொண்ட பின்னரே போட்டியில் பங்கேற்க அனுமதி வழங்கப் பட்டது. 108 அவசர சிகிச்சை வாகனம், காவல்துறை பாது காப்பு, பார்வையாளர்களுக்கான அடிப்படை வசதிகள் மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நீதிமன்ற வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய் யும் வகையில் ஜல்லிக்கட்டு போட்டி முழுவதும் வீடியோ பதிவு செய்யப்படுகிறது. மேலும், விழாக்குழு உறுப்பினர்கள் மற்றும் மாடுபிடி வீரர்கள், காளைகளின் உரிமையாளர்கள் அரசின் அனைத்து விதிமுறைகளையும் முழுமையாகக் கடைபிடித்திட வேண்டு மெனவும் கேட்டுக்கொள்ளப்பட்டது. முன்னதாக, ஜல்லிக் கட்டு போட்டியில் அரசு விதிமுறைகள் குறித்து பின்பற்ற வேண்டிய உறுதிமொழியினை அனைவரும் ஏற்றுக்கொண்ட னர். இந்நிகழ்ச்சியில், சேலம் வருவாய் கோட்டாட்சியர் உதய குமார், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்கு நர் மரு அரங்க பிரகாசம், சேலம் வட்டாட்சியர் பார்த்த சாரதி உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.</p>
<p> </p>
