தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சுதந்திர இந்தியாவின் ஜாலியன் வாலாபாக்: சேலம் சிறைத் தியாகிகள்! - ஏ.ராமமூர்த்தி

10 Feb 2026, 4:50 pm
சுதந்திர இந்தியாவின் ஜாலியன் வாலாபாக்:  சேலம் சிறைத் தியாகிகள்!  - ஏ.ராமமூர்த்தி
<p><strong>சுதந்திர இந்தியாவின் ஜாலியன் வாலாபாக்: &nbsp;சேலம் சிறைத் தியாகிகள்!&nbsp;</strong></p> <p>1950 பிப்ரவரி 11 - இந்தியா குடியரசு நாடாகப் பிரகட னப்படுத்தப்பட்ட 16-ஆவது நாள். நாடு &nbsp;முழுவதும் விடுதலைக் காற்று வீசினா லும், கம்யூனிஸ்ட்டுகள் மட்டும் சிறைக் கொட்டடியில் வதைக்கப்பட்டனர். ஏகாதிபத்தியத்தை விரட்டிய கம்யூ னிஸ்ட்டுகளைச் சுதந்திர இந்தியாவில், அன்றைய உள்துறை அமைச்சர் வல்லபாய் படேலின் அமைச்சகம் சிறைகளில் அடைத்து அடக்குமுறையை ஏவியது. &nbsp;உரிமைக்கான போர் அன்றைய சென்னை மாகாணத்தைச் சேர்ந்த தமிழர்கள், மலையாளிகள், தெலுங்கர்கள் என 350-க்கும் மேற்பட்ட கம்யூனிஸ்ட்டுகள் சேலம் மத்தியச் சிறை யில் அடைக்கப்பட்டிருந்தனர். இவர் களைக் கொலை, கொள்ளை போன்ற வழக்குகளில் கைதானவர்களோடு சேர்த்துச் சிறை நிர்வாகம் நடத்தியது. &ldquo;எங்களை அரசியல் கைதிகளாக நடத்துங்கள்&rdquo; என்று அவர்கள் சிறைக்குள்ளேயே அறப்போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சிறையிலிருந்த தியாகி உத்தமலிங்கம் சாட்சியமளித்தபடி, பிப்ரவரி 7-ஆம் தேதி 15 தோழர்களை மாட்டு நுகத்தடியில் பூட்டி நீர் இறைக்க வைத்துச் சித்ரவதை செய்தது சிறை நிர்வாகம். பிப்ரவரி 11 அன்று கைதிகள் அணியும் &lsquo;டம்பர் ஃபேட்&rsquo; தொப்பியை அணிய மறுத்ததற்காகத் தடியடி நடத்தப்பட்டது. நிராயுதபாணிகளாக நின்ற இந்த கம்யூ னிஸ்ட்டுகள் மீது ஏவப்பட்ட குண்டுமழை தான் சுதந்திர இந்தியாவின் &lsquo;ஜாலியன் வாலாபாக் படுகொலை&rsquo; என்று அழைக்கப்படுகிறது. குருதி தோய்ந்த வரலாறு துப்பாக்கிச் சூடு தொடங்கியதும், இளைஞர்களைப் பின்னுக்குத் தள்ளி விட்டு மூத்த தோழர்கள் குண்டுகளைத் தங்கள் நெஞ்சில் ஏந்திக்கொண்டனர். 105 ரவுண்டுகள் சுடப்பட்டதில் 17 தோழர்கள் குண்டு பாய்ந்தும், 5 தோழர்கள் அடித்தும் கொல்லப்பட்டனர். ஆறுமுகம், காவேரி முதலியார், ஷேக் தாவூத் உள்ளிட்ட 22 தியாகிகளில் 3 தோழர்கள் தமிழ்நாட்டை யும், 19 தோழர்கள் கேரளத்தையும் சேர்ந்த வர்கள். சேலம் நகர வீதிகள் கம்யூனிஸ்ட்டு களின் குருதியால் நனைந்தன. அவர் களின் உடல்களைக் கூட உறவினர்களிடம் ஒப்படைக்க மறுத்த அராஜகத்தைச் சிறை நிர்வாகம் அரங்கேற்றியது. நமது வர்க்கக் கடமை விடுதலை தேசத்தைப் பாதுகாப்பதில் தியாக சீலர்களாகத் திகழ்ந்த சேலம் சிறைத் தியாகிகளின் வாரிசுகள்தான் இன்றைய கம்யூனிஸ்ட்டுகள். அவர்களின் நினைவு நாளான இன்று, தேசச் சொத்துகளைக் கார்ப்பரேட்டுகளுக்குத் தாரை வார்க்கும் கொள்கைகளையும், பாஜக அரசின் பாசிசப் போக்குகளையும் வீழ்த்த சபதமேற்போம். அதுவே அந்த வீரத்தியாகிகளுக்கு நாம் செலுத்தும் உண்மையான செவ்வணக்கம். புரட்சி ஓங்குக! இன்குலாப் ஜிந்தாபாத்!</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.