பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ உண்ணாநிலை போராட்டம்
13 Dec 2025, 4:23 pm
<p><strong>11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ உண்ணாவிரத போராட்டம்</strong></p>
<p>திருச்சிராப்பள்ளி, டிச.13- பழைய பென்ஷன் திட்டத்தை மீட்டெடுத்தல், உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கும் முதுகலை உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் உடற்கல்வி இயக்குனர் ஆசிரியர்களுக்கு ஒன்றிய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ-ஜியோ சார்பில் சனிக்கிழமை மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. திருச்சி மாவட்ட ஜாக்டோ ஜியோ சார்பில், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, நடந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் நீலகண்டன், நாகராஜன், உதுமான் அலி, பால்பண்டி, நவநீதன் ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குமாரவேல் வரவேற்புரையாற்றினார். போராட்டத்தை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றபொதுச்செயலாளர் சண்முகநாதன் துவக்கி வைத்தார். தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் மாநில தலைவர் டேவிட் லிவிங்ஸ்டன் சிறப்புரையாற்றினார். உயர்மட்ட குழு உறுப்பினர்கள், ஆசிரியர், அரசு ஊழியர், துறை வாரி சங்க, மாநில, மாவட்ட, வட்ட நிர்வாகிகள் மற்றும் அனைத்து துறை ஓய்வூதிய சங்க நிர்வாகிகள் வாழ்த்துரை வழங்கினர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலத் துணைத் தலைவர் செல்வராணி நிறைவுரையாற்றினார். மாவட்ட நிதிகாப்பாளர் ஆரோக்கியராஜ் நன்றி கூறினார். பெரம்பலூர் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சனிக்கிழமை ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு சார்பில் மாநிலம் தழுவிய உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் பெரம்பலூர் மாவட்ட தலைவர் குமரி அனந்தன், தமிழ்நாடு பட்டதாரி-முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்டத் தலைவர் சுந்தரபாண்டியன், தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த உண்ணாவிரத போராட்டத்தில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தஞ்சாவூர் தஞ்சாவூர் பனகல் கட்டிடம் முன்பு, நடைபெற்ற போராட்டத்திற்கு, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ரமேஷ், இளையராஜா, பன்னீர்செல்வம், சிவசங்கர் ஆகியோர் தலைமை வகித்தனர். மாநில ஒருங்கிணைப்பாளர் மலர்விழி நிறைவுரையாற்றினார். புதுக்கோட்டை புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற போராட்டத்துக்கு, அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டச் செயலர் ஆர். ரெங்கசாமி தலைமை வகித்தார். தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநிலப் பொதுச் செயலர் ந. சண்முகநாதன், தமிழ்நாடு உயர்நிலை- மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலர் குமரேசன், அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் ஜபருல்லா மற்றும் மாரிமுத்து, துரை பிரபாகரன், கருப்பையா உள்ளிட்டோர் பேசினர்.</p>
