முந்தய பக்கம்

கரூரில் ஜாக்டோ-ஜியோ உண்ணாவிரதப் போராட்டம்

16 Dec 2025, 3:51 pm
கரூரில் ஜாக்டோ-ஜியோ  உண்ணாவிரதப் போராட்டம்
<p><strong>கரூரில் ஜாக்டோ-ஜியோ &nbsp;உண்ணாவிரதப் போராட்டம்</strong></p> <p>கரூர், டிச.16- &nbsp;ஜாக்டோ-ஜியோ சார்பில், கரூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் முன்பு உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. &nbsp;தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் எம்.எஸ். அன்பழகன், தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநில பொருளாளர் பா. பெரியசாமி, தமிழ்நாடு பதவி உயர்வுபெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்க மாநிலத் தலைவர் ப. தமிழ்மணியன், அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் பொன்.ஜெயராம், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாவட்டச் செயலாளர் சு.வேலுமணி, இடைநிலை ஆசிரியர் சங்க மாவட்டச் செயலாளர் பிரேம்குமார் உள்ளிட்டோர் தலைமை வகித்தனர். &nbsp;உண்ணாவிரதத்தை தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் மா.மு. சதீஷ் தொடங்கி வைத்து கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். போராட்டத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் &nbsp;ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் இரா. செல்வதுரை நன்றி கூறினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram