ஜெய்சங்கர் இன்று இலங்கை பயணம்!
22 Dec 2025, 2:53 pm
<p><strong>ஜெய்சங்கர் இன்று இலங்கை பயணம்!</strong></p>
<p>புதுதில்லி, டிச. 22 - பிரதமர் நரேந்திர மோடியின் சிறப்புத் தூதராக ஒன்றிய வெளி யுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் செவ்வாய்க்கிழமை (இன்று) இலங்கை செல்ல உள்ளார். இந்த பய ணத்தின்போது இலங்கை அரசாங்கத் தின் மூத்த தலைவர்களை ஜெய்சங்கர் சந்தித்து பேச உள்ளார். ‘டிட்வா’ புயலால் கடுமையான பாதிப்புகளை சந்தித்த இலங்கைக்கு உதவிடும் வகையில், இந்திய அரசு சார்பில் ‘ஆபரேஷன் சாகர் பந்து’ என்ற திட்டத்தின்கீழ் இலங்கை மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகள் பல்வேறு தொகுப்புகளாக அனுப்பி வைக்கப்பட்டன. இந்த பின்னணியிலேயே ஜெய்சங்க ரின் இந்த பயணம் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
