இஸ்ரேலுடன் நட்புறவு வலுப்பெறுமாம் ஜெய்சங்கர் சொல்கிறார்
17 Dec 2025, 4:11 pm
<p><strong>இஸ்ரேலுடன் நட்புறவு வலுப்பெறுமாம் ஜெய்சங்கர் சொல்கிறார்</strong></p>
<p>டெல்அவிவ்,டிச.17- இரண்டு நாள் பயணமாக இஸ்ரேல் சென்றுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அந்நாட்டு ஜனாதிபதி ஐசக் ஹெர்சோக்கை சந்தித்துப் பேசினார். பின் இஸ்ரேல் வெளியுறவுத் துறை அமைச்சர் கிடி யான் சார், பொருளாதாரம் மற்றும் தொழில் துறை அமைச்சர் நிர் பர்காட் ஆகியோரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். இதன் தொடர்ச்சியாக, பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு வையும் சந்தித்தார். இஸ்ரேல் பிரதமருடனான தனது சந்திப்பு குறித்து சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ள ஜெய் சங்கர், “தொழில்நுட்பம், பொருளாதாரம், திறன் மேம்பாடு, உள்கட்டமைப்பு, பாதுகாப்பு ஆகிய வற்றில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்து ழைப்பை அதிகப்படுத்துவது குறித்து விவாதிக் கப்பட்டது. பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள் தொடர்பான அவரது கருத்துக்களுக்கு மதிப்பளித் தேன். நமது வியூக நட்புறவு மேலும் மேலும் வலுப்பெறும் என்பதில் நான் உறுதியாக இருக்கி றேன்’’ என தெரிவித்துள்ளார். நேதன்யாகு விரைவில் இந்தியா வர உள்ள நிலையில், ஜெய்சங்கரின் இந்தப் பயணம் நடந்துள்ளது. பாலஸ்தீன மக்களை இனப்படு கொலை செய்து வரும் இஸ்ரேலுக்கு இந்தியா ஆயுதம் மற்றும் ஆயுதப் பொருட்களை ஏற்றுமதி செய்து வருகிறது. இதற்கு இந்தியாவில் கடும் எதிர்ப்புள்ளது. இந்நிலையில் அந்நாட்டுடனான நெருங்கிய உறவு வெளியுறவுக் கொள்கையில் இந்தியா மேற்கொண்டு வரும் மாற்றத்தின் வெளிப்பாடா என கேள்விகள் எழுந்துள்ளன.</p>
