தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஜெய்சால்மர் வொண்டர் சிமெண்ட் ஆலைத் தொழிலாளர்களின் போர்க்குணமிக்க எழுச்சி 6,000 தொழிலாளர்கள் நடத்திய வரலாற்றுச் சிறப்புமிக்க கிளர்ச்சி!

20 May 2026, 9:45 pm
ஜெய்சால்மர் வொண்டர் சிமெண்ட் ஆலைத் தொழிலாளர்களின் போர்க்குணமிக்க எழுச்சி 6,000 தொழிலாளர்கள் நடத்திய வரலாற்றுச் சிறப்புமிக்க கிளர்ச்சி!

ஜெய்சால்மர் வொண்டர் சிமெண்ட் ஆலைத் தொழிலாளர்களின் போர்க்குணமிக்க எழுச்சி

6,000 தொழிலாளர்கள் நடத்திய வரலாற்றுச் சிறப்புமிக்க கிளர்ச்சி!

வேலைநிறுத்தம் 27

ஜெய்சால்மர், மே 20- ஆந்திரா, ஒடிசா, குஜராத் மற்றும் ராஜஸ்தானின் சித்தூர்கர் தொழில் மண் டலங்களைத் தொடர்ந்து, தார் பாலை வனத்தின் மடியில் அமைந்துள்ள வர லாற்றுப் புகழ்பெற்ற ‘தங்க நகரம்’ என்று அழைக்கப்படும் ஜெய்சால்ம ரும் கார்ப்பரேட் சுரண்டலுக்கு எதிரான தொழிலாளர் வர்க்கத்தின் போர்க்குர லால் அதிர்கிறது. ஜெய்சால்மரின் பரே வார் கிராமத்தில் அமைந்துள்ள வொண்டர் சிமெண்ட் (Wonder Cement) திட்ட வளாகத்தில், உழைப்புச் சுரண்டல் மற்றும் மனிதநேயமற்ற நடத்தைகளுக்கு எதிராக ஒப்பந்த மற்றும் புலம்பெயர் தொழிலாளர்கள் நடத்திய அதிரடி கிளர்ச்சி, அம்மாநி லத்தின் சிமெண்ட் தொழில் வரலாற்றில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தி யுள்ளது. இத்தொடரின் 27-ஆவது பகுதி யில், இந்தத் தீரமிக்க போராட்டத்தின் பின்னணியை விரிவாகக் காண்போம்.

வட்டத்தின் ராம்கர் பகுதியில் உள்ள பரேவார் (Parewar) கிராமத்தில், ஆர்.கே. மார்பிள் குழுமத்திற்குச் சொந்த மான வொண்டர் சிமெண்ட் ஆலை இயங்கி வருகிறது. கடந்த தசாப்தத்தில் இந்தியாவின் முன்னணி சிமெண்ட் உற்பத்தியாளர்களுள் ஒன்றாக உரு வெடுத்துள்ள இந்நிறுவனம், ஜெய்சால்மர் மாவட்டத்தைப் பெரும் கார்ப்பரேட் முதலீடுகளுடன் கூடிய ஒரு புதிய சிமெண்ட் உற்பத்தி மண்டல மாக மாற்றியுள்ளது. ஆனால், இந்தத் தொழில்மயமாக்கலின் பளபளப்பான முகத்திற்குப் பின்னால், கடுமையான உழைப்புச் சுரண்டலும், மனிதக் கண்ணி யத்தை நசுக்கும் அராஜகங்களும் நீண்ட காலமாகத் தொடர்ந்து வருகின்றன.

பொங்கி எழுந்த தொழிலாளர் கொந்தளிப்பு

பிப்ரவரி 11, 2026 அன்று இந்த ஆலை வளாகத்தில் நிகழ்ந்த ஒரு வன்முறை மோதல், வெறும் தற்செயலான நிகழ்வல்ல; அது பல வருடங்களாகத் தொழிலாளர்கள் மத்தியில் தேங்கிக் கிடந்த கோபத்தின் எரிமலை வெடிப்பா கும். அன்று காலை 9 மணியளவில், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த புலம்பெ யர் தொழிலாளி ஒருவரை வேலைத் தளத்திற்குச் செல்லவிடாமல் ரோஹித் என்ற கார்ப்பரேட் மேற்பார்வையாளர் தடுத்துள்ளார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில், அந்த மேற்பார்வை யாளர் தொழிலாளியைக் கன்னத்தில் அறைந்து இழிவுபடுத்தியதாகக் கூறப்படுகிறது.

கார்ப்பரேட் அதிகார வர்க்கத்தின் இந்த அராஜகத்தைக் கண்டதும் அங்கி ருந்த சக தொழிலாளர்கள் ஆத்திரமடை ந்து திரண்டனர். தொழிலாளர்களின் கோபத்திற்குப் பயந்து அந்த மேற்பா ர்வையாளர் வாகனத்தில் தப்பியோடி யதைத் தொடர்ந்து, ஆலை முழுவதும் போராட்டம் காட்டுத்தீ போல் பரவியது. ஆலைக்குள் இருந்த சுமார் 6,000-க்கும் மேற்பட்ட ஒப்பந்த மற்றும் புலம்பெயர் தொழிலாளர்கள் ஒற்றை உருவமாகத் திரண்டு, நிர்வாகத்தின் அராஜகப் போக்கிற்கு எதிராக வானதிர முழக்க மிட்டனர். நிலைமையைக் கட்டுப்படுத்த நான்கு காவல் நிலையங்களில் இருந்து கூடுதல் காவல் படையினர் வரவழைக்கப் பட்ட போதிலும், தொழிலாளர்களின் கூட்டு எழுச்சி அதிகார வர்க்கத்தை அதிர வைத்தது.

சிமெண்ட் உற்பத்தி மண்டலங்களின் இருண்ட பக்கமும் - உள்ளூர் ஏமாற்றமும்

ராஜஸ்தானின் சிமெண்ட் உற்பத்தி மண்டலங்கள் முழுவதும் கார்ப்ப ரேட் நிறுவனங்கள் மற்றும் இடைத்தர கர்களான ஒப்பந்தக்காரர்களின் பிடி யில் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் அவலங்களை இப்போராட்டம் மீண்டும் அம்பலப்படுத்தியுள்ளது. உள்கட்ட மைப்புத் திட்டங்கள் மூலம் உள்ளூர் இளைஞர்களுக்கு நிலையான வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்ற வாக்குறு தியை நம்பியிருந்த ராம்கர் பகுதி இளை ஞர்கள் தன்னிச்சையாக வேலைநீக்கம் செய்யப்பட்டதும் தொழிலாளர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை உருவாக்கியிருந்தது.

மேலும், பல்லாயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் எவ்வித சட்டப்பூர்வ பாதுகாப்போ அல்லது முறையான ஊதியமோ இன்றி, மிகக் குறுகிய தற்காலிக உழைப்பு முகாம் களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கடந்த 2025 அக்டோபரில் இந்தத் தொழி லாளர் முகாம்களில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தும், 2023 ஜூன் மாதத்தில் ஒப்பந்தக்காரர்களின் அராஜகத்திற்கு எதிராக வெடித்த மோதல்களும் இங்கு நிலவும் மோசமான பணிச்சூழலுக்குச் சான்றுகளாகும்.

சமூகக் கிளர்ச்சியாக மாறிய போராட்டம்

இந்தத் தொழில்சார்ந்த கோபத்திற்கு அப்பால், ராம்கர் மற்றும் அதன் சுற்றுவட்டாரக் கிராம மக்கள் இந்தச் சிமெண்ட் ஆலைகள் மற்றும் சுண்ணாம்புச் சுரங்கங்களால் ஏற்படும் கடுமையான தூசு மாசுபாடு, நிலத்தடி நீர் வற்றிப்போதல் மற்றும் விவசாயப் பாதிப்புகளுக்கு எதிராகத் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்ற னர். இந்தச் சிமெண்ட் ஆலைகளில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர் கள் பலரும் பாதிக்கப்பட்ட உள்ளூர் விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்த வர்கள் என்பதால், இந்தத் தொழிலாளர் போராட்டம் வெறும் தொழிற்சாலை வாயில்களோடு நின்றுவிடாமல், உள்ளூர் கிராம மக்கள், இளைஞர்கள் மற்றும் விவசாயிகளின் ஆதரவோடு ஒரு மாபெரும் சமூகக் கிளர்ச்சியாக உருவெடுத்துள்ளது.

தொழிலாளர் உரிமைகளையும், உழைக்கும் மனிதரின் கண்ணியத்தை யும் மதிக்காமல், அதீத லாப வேட்டை யை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்படும் கார்ப்பரேட் முதலாளித்து வத்திற்கு, ஜெய்சால்மர் தார் பாலை வனத்து மண்ணில் தொழிலாளர்கள் நடத்தியுள்ள இந்தப் போர்க்குணமிக்க எழுச்சி ஒரு மாபெரும் வரலாற்று எச்சரிக்கையாகும்.

லெப்ட் வியூஸ்

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.