எதிர்க்கட்சிகளை உடைக்கும் அமித் ஷா அரசியலமைப்பை மாற்ற, இடஒதுக்கீட்டை ஒழிக்கும் திட்டம் - ஜெய்ராம் ரமேஷ் சாடல்
24 Jun 2026, 8:57 pm

எதிர்க்கட்சிகளை உடைக்கும் அமித் ஷா அரசியலமைப்பை மாற்ற, இடஒதுக்கீட்டை ஒழிக்கும் திட்டம் - ஜெய்ராம் ரமேஷ் சாடல்

அரசியலமைப்பை மாற்றி இடஒதுக் கீட்டை ஒழிக்கவே எதிர்க்கட்சிகளை அமித் ஷா உடைத்து வருகிறார் என காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கடுமையாக சாடியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் பா.ஜ.க-விற்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை அதிகரித்து, அதன் மூலம் “இந்திய அரசியலமைப்புச் சட்டத் தைத் திருத்துவதற்காகவே”, சிவசேனா மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் போன்ற மாநிலக் கட்சி களை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தீவிரமாக உடைத்து வருகிறார். கடந்த தேர்தலில் பா.ஜ.க முன்வைத்த 400 இடங்களுக்கு மேல் வெற்றி என்ற முழக்கத்தின் உண்மையான பின்னணி இதுதான். அரசியலமைப்பைத் திருத்துவதற்குத் தேவையான மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை அவர்களுக்கு இல்லை.

அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்தி, இடஒதுக்கீட்டை ஒழிப்பதற்காகவே நாடாளு மன்றத் தேர்தலில் 400-க்கும் மேற்பட்ட இடங்களை பா.ஜ.க இலக்கு வைத்து வருகிறது. அது பாஜகவின் தற்போதைய நடவடிக்கைகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

சமீபத்தில், பா.ஜ.க ‘ஆபரேஷன் டைகர்’ என்ற பெயரில் சிவசேனா (உத்தவ்) பிரிவில் இருந்து 6 எம்.பி.,க்களை இழுத்துள்ளது. இதேபோல், மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, 20 திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.,க்கள் பாஜக தலைமையிலான என்.டி.ஏ (NDA) கூட்டணியுடன் இணைந்துள்ளனர். இதற்கு சில நாட்களுக்கு முன்பு, ஆம் ஆத்மி கட்சியின் (AAP) 7 மாநிலங்களவை எம்.பி.,க்கள் பா.ஜ.க-வில் இணைந்தனர்.

கடந்த ஏப்ரல் 17 அன்று, இந்திய அரசியல மைப்பு (131-ஆவது திருத்தம்) மசோதா, 2026 மக்களவையில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெற முடியாமல் தோல்விய டைந்தது. மசோதாவிற்கு ஆதரவாக 298 வாக்கு கள் கிடைத்த போதிலும், தேவைப்பட்ட 352 வாக்கு களை விட 54 வாக்குகள் குறைவாகப் பெற்று மசோதா தோல்வியடைந்தது . அந்த அவமா னத்திற்குப் பழிவாங்க அவர் (அமித் ஷா) முடிவு செய்து விட்டார் என்று நான் நினைக்கிறேன். அதனால்தான் இப்போது கட்சிகளை உடைக்கும் அரசியலில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார் எனவும் குறிப்பிட்டார்.