முந்தய பக்கம்

ஜாக்டோ - ஜியோ சார்பில் டிச.13இல் உண்ணாநிலை!

10 Dec 2025, 4:08 pm
ஜாக்டோ - ஜியோ சார்பில்  டிச.13இல் உண்ணாநிலை!
<p><strong>ஜாக்டோ - ஜியோ சார்பில் &nbsp;டிச.13இல் உண்ணாநிலை!</strong></p> <p>தருமபுரி, டிச.10- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டிச.13 ஆம் உண்ணாநிலை மற்றும் டிச.15 முதல் 19 ஆம் தேதி வரை &nbsp;பிரச்சார இயக்கம் நடைபெறவுள்ளதாக ஜாக்டோ &ndash; ஜியோ அறிவித்துள்ளது. ஜாக்டோ - ஜியோ அமைப்பின் ஆலோசனை கூட்டம், தருமபுரி அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில் புதனன்று நடை பெற்றது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எம்.சுருளி நாதன் தலைமை வகித்தார். இதில் அமைப்பின் நிதி காப்பாளர் கே.புகழேந்தி, அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் ஏ. தெய்வானை, பொருளாளர் எம்.அன்பழகன், தமிழக ஆசிரி யர் கழக மாநில அமைப்புச் செயலாளர் ராசா மற்றும் பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத் தில், தேர்தல் கால வாக்குறுதிபடி பழைய ஓய்வூதிய திட் டத்தை நிறைவேற்ற வேண்டும். ஆசிரியர் தகுதித்தேர்விலி ருந்து விலக்களித்து ஆசிரியர்களை பாதுகாத்திட தமிழ்நாடு அரசு சீராய்வு மனு உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ - &nbsp;ஜியோ சார்பில் டிச.13 ஆம் தருமபுரியில் உண்ணாநிலை போராட்டத்தை வெற்றிகரமாக நடத்துவது; டிச.15 முதல் 19 ஆம் தேதி வரை பிரச்சார இயக்கம் நடத்துவது; டிச.27 ஆம் தேதி தருமபுரியில் வேலை நிறுத்த ஆயத்த மாநாட்டை நடத்து வது; ஜன.6 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை &nbsp;நிறுத்தத்தை சிறப்பாக நடத்துவது என முடிவு செய்யப்பட் டது.</p>
Share
FacebookXWhatsAppTelegram