மே 12-இல் நியமிக்கப்பட்டதாக அரசாணை விஜய்-யின் தனிச் செயலாளராக ஜெகதீஷ் பழனிசாமி அறிவிப்பு!
23 Jun 2026, 10:58 pm
<p><strong>மே 12-இல் நியமிக்கப்பட்டதாக அரசாணை விஜய்-யின் தனிச் செயலாளராக ஜெகதீஷ் பழனிசாமி அறிவிப்பு!</strong></p><p>சென்னை, ஜூன் 23 - தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் தனிச் செயலாளராக (அரசியல்) ஜெகதீஷ் பழனிசாமி நிய மிக்கப்பட்டு உள்ளதாக தமிழ்நாடு அரசு பொதுத்துறை முதன்மை செய லாளர் ரீட்டா ஹரீஷ் தக்கர் உத்த ரவு பிறப்பித்துள்ளார். இந்த நியமனம் கடந்த மே 12 அன்றே செய்யப்பட்டதாகவும், இதற் கான நிபந்தனைகள் மற்றும் விதி முறைகள் பின்னர் தனியாக வெளி யிடப்படும் என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திரையுலகில் விஜய்யின் நிழலாக கடந்த 13 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்து வரும் ஜெகதீஷ் பழனி சாமி, ‘தி ரூட்’ -எனும் நிகழ்ச்சி மேலாண்மை நிறுவனத்தை நடத்தி வருபவர் ஆவார். த.வெ.க. தேர்தல் வியூகம் மற்றும் வார் ரூம் பணிகளை யும் அவரே கவனித்து வந்தார். அவர், முதல்வர் விஜய்-யின் தனிச்செயலாளராக மே 12 அன்றே நியமிக்கப்பட்டிருப்பது, தற்போது தெரியவந்துள்ளது. முதல்வரின் பிறந்த நாளான ஜூன் 22 அன்று, ஜெகதீஷ் பழனிசாமி தமது நியம னத்தை சமூக வலைதளத்தில் தாமே அறிவித்தார். அதற்கடுத்த சில மணி நேரங்கள் கழித்து, அவரது நியமனம் தொடர்பான மே 12 தேதியிட்ட அதி காரப்பூர்வமான அரசாணை வெளி யிடப்பட்டு உள்ளது. ஒரு மாதத்திற்கும் மேலாக ஆவணப்படுத்தப்படாமல் நிலுவை யில் இருந்த இந்த நியமனம், அதிகாரப்பூர்வ வழிமுறையில் அல்லாமல் தனிப்பட்ட சமூக வலை தள பதிவு மூலம் வெளிவந்தது விமர்சனங்களுக்கு வழிவகுத்து உள்ளது. இதற்கு முன்னர் முதல்வரின் அரசியல் ஆலோசகராக ரத்தன் பண்டிட் நியமிக்கப்பட்டபோதும் சர்ச்சை எழுந்து அந்த நியமன உத்தரவு திரும்பப் பெறப்பட்டி ருந்தது குறிப்பிடத்தக்கது.</p>
