ஜாதவ்பூர் பல்கலைக்கழக வளாகத்தில் இந்துத்துவா குண்டர்கள் வன்முறை இடதுசாரி மாணவர் சங்கக் கூட்டத்தை முடக்க அராஜகம்!
20 Aug 2026, 9:21 pm

ஜாதவ்பூர் பல்கலைக்கழக வளாகத்தில் இந்துத்துவா குண்டர்கள் வன்முறை இடதுசாரி மாணவர்

சங்கக் கூட்டத்தை முடக்க அராஜகம்!

கொல்கத்தாநாட்டின் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் ஒன்று ஜாதவ்பூர். இது பாஜக ஆளும் மேற்கு வங்கமாநிலத்தில் உள்ளது.

இந்நிலையில், இந்த பல்கலைக்கழக வளாகத்தில் புதன்கிழமையன்று இந்திய மாணவர் சங்கம் (எஸ்எப்ஐ), டிஎஸ்ஓ மற்றும்டிஎஸ்எப் உள்ளிட்ட இடதுசாரி மாணவர் சங்கம் சார்பில், பொறியியல் துறை மாணவர் சங்கக்கூட்டம் நடைபெற்றது. ஒற்றைத்தரப்பாகச் சங்கத்தை உருவாக்குவதற்கான முயற்சிகள் நடைபெற்றதாக பொறியியல் துறை மாணவர்சங்கக் கூட்டத்திற்குள் அடாவடியாக புகுந்து ஆர்எஸ்எஸ் - பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபி குண்டர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். அதாவது இடதுசாரி மாணவ தலைவர்கள் மற்றும்கூட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். பதிலுக்கு இடதுசாரி மாணவ தலைவர்கள், மாணவர்கள் பதிலடி கொடுக்க, சம்பவ இடத்திலிருந்து ஏபிவிபி குண்டர்கள் ஓட்டம் பிடித்தனர்.

அதிகாலையில் வன்முறைதொடர்ந்து வியாழனன்று அதிகாலை பல்கலைக்கழகத்தின் கதவுகளை உடைத்து உள்ளே நுழைந்தஏபிவிபி குண்டர்கள் இடதுசாரி மாணவர் சங்க அறைகளையும், விடுதிகளையும் சேதப்படுத்தினர். கொடிகளுக்குதீவைத்தனர்.

இந்த தாக்குதல் தொடர்பாக ஜாதவ்பூர் பல்கலைக்கழக மாணவரும், புரட்சிகர மாணவர்கள் முன்னணியின் உறுப்பினருமான இந்திரனுஜ் ராய் கூறுகையில்,“வியாழனன்று அதிகாலை மோட்டார் சைக்கிள்களில் வந்த நபர்கள் ஜாதவ்பூர் பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைந்து மாணவர்களைத் தாக்கியதுடன் மாணவர் சங்க அறைகளையும் விடுதிகளையும் சேதப்படுத்தினர். கதவுகள் உடைக்கப்பட்டன. விடுதியில் உள்ள மாணவர்கள் தங்களால் இயன்றவரை எதிர்த்துப் போராடி இந்த குண்டர்களை விடுதி பகுதிக்குள் நுழைய விடாமல் தடுத்தனர். ஆனால் அவசரஎண்கள் மூலம் தொடர்புக் கொள்ளும்போது காவல்துறையினர் போனைத் துண்டித்தனர். சிசிடிவி கட்டுப்பாட்டு அறை தாக்கப்பட்டது; பதிவுகள் அழிக்கப்பட்டன. இந்த தாக்குதல் தொடர்பாக பல்கலைக்கழக துணைவேந்தர் எந்த பதிலும்அளிக்கவில்லை” என அவர் குற்றம்சாட்டினார்.

இந்திய மாணவர் சங்கம் கடும் கண்டனம்ஜாதவ்பூர் பல்கலைக்கழக வளாகத்தில் இந்துத்துவா குண்டர்கள் நடத்திய வன்முறைக்கு இந்தியமாணவர் சங்கம் கடும் கண்டனம்தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக எஸ்எப்ஐ மாநிலச் செயலாளர் தேபஞ்சன் டே, பொதுச் செயலாளர் ஸ்ரீஜன் பட்டாச்சார்ஜி செய்தியாளர்களிடம் கூறுகையில்,”ஏபிவிபி அமைப்பினர் வெளியாட்களை பல்கலைக்கழக வளாகத்திற்கு அழைத்து வந்து வன்முறையில் ஈடுபட்டனர். அரவிந்தோ பவன் கட்டிடத்திற்கும் தீவைக்க முயன்றனர். பதாகைகளைக் கிழித்து கொடிகளுக்குத் தீ மூட்டினர். இதனை நாங்கள் வெறுமென கடந்து செல்லமாட்டோம்” என வன்மையாகக் கண்டித்தனர்.