தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த கோரி திருப்பூரில் ஜாக்டோ - ஜியோ உண்ணாவிரதம்

13 Dec 2025, 5:13 pm
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த கோரி திருப்பூரில் ஜாக்டோ - ஜியோ உண்ணாவிரதம்
<p><strong>பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த கோரி திருப்பூரில் ஜாக்டோ - ஜியோ உண்ணாவிரதம்</strong></p> <p>திருப்பூர், டிச.13- பங்களிப்புத் தொகையுடன் கூடிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய &nbsp;ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரி ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவல கம் முன்பு வெள்ளியன்று உண்ணாவி ரத போராட்டத்தில் ஈடுபட்டனர். &nbsp;ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த உண் ணாவிரத போராட்டத்தை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணைத் தலைவர் செல்வராணி துவக்கி வைத் தார். இதில் 1.4.2003க்கு பிறகு அரசு &nbsp;பணியில் சேர்ந்தோருக்கு தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பங்க ளிப்புத்தொகையுடன் கூடிய ஓய்வூதி யத் திட்டத்தை கைவிட்டு பழைய &nbsp;ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்திட &nbsp;வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியம் &nbsp;பெற்று வரும் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள், கல்வித்துறையில் பணி யாற்றும் துப்புரவு பணியாளர்கள் ஆகி யோருக்கு வரையறுக்கப்பட்ட ஊதி யம் வழங்க வேண்டும். ஒருங்கி ணைந்த பள்ளிக்கல்வித் துறையில் பணி யாற்றும் பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். 21 மாத ஊதிய மாற்ற நிலுவைத் தொகையை அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள், அரசு &nbsp;பணியாளர்கள் ஆகியோருக்கு மறுக் கப்பட்டுள்ளதை உடனடியாக வழங்க &nbsp;வேண்டும். 2002 முதல் 2004 வரை தொகுப்பு ஊதியத்தில் நியமனம் செய் யப்பட்ட ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் &nbsp;மற்றும் அரசு பணியாளர்களின் பனிக்கா லத்தினை அவர்கள் பணியில் சேர்ந்த நாள் முதல் பணிவரன்முறைப்படுத்தி ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட &nbsp;கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இந்த உண்ணாவிரதப் போராட்டத் தில் தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட் டச் செயலாளர் பாலசுப்பிரமணியம், கல் லூரி ஆசிரியர் கழகம் மாவட்ட ஒருங்கி ணைப்பாளர் வேலுமணி, &nbsp;அரசு ஊழியர் &nbsp;சங்க மாவட்டத் தலைவர் பாண்டியம் மாள், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசி ரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் பிரபு செபஸ்டின் உள்ளிட்ட ஏராளமா னோர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.